இடுகைகள்

வியர்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!

படம்
  உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்! உடற்பயிற்சி செய்யவே ஒருவர் சற்றேனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். யோகா செய்ய பொறுமை தேவை. ஆனால் எடைகளை தூக்க, கயிறுகளை இழுக்க, பலம் தேவை. இப்படி செய்யும் உடற்பயிற்சி ஒருவருக்கு மருந்தாக செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், திண்ணென்ற மார்பை பிறருக்கு காட்ட முயல்வார்கள். ஆனால் அதை பயில்வதன் மூலம் நோயை விரட்ட முடியுமா? மார்க் டர்னோபோலோஸ்கி என்ற ஆராய்ச்சியாளர், முன்கூட்டியே வயதாகுவதை ஏற்படுத்தும் மரபணு பிரச்னை தொடர்பாக ஆராய்ந்தார். இதில், உடற்பயிற்சி செய்தவர்களுக்கு நோயின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. பொதுவாக உடல் ஆரோக்கியம் என்ற வகையில் உடற்பயிற்சி சரிதான் என்பவர்களும் கூட பயிற்சிகளை அடர்த்தியாக தீவிரமாக செய்யத் தொடங்குபவர்களை நேரத்தை வீணடிக்கிறான் என்பார்கள். உண்மையில், உடற்பயிற்சி முன்கூட்டியே நோய்களை தடுப்பதோடு, உடலில் உள்ள நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது என்பதே உண்மை.  ஆராய்ச்சியாளர் மார்க், எலிகளை வைத்து செய்த சோதனையில் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். அதில், உடற்பயிற்சி செய்ய பயிற்றுவிக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில

சீரான சிந்தனையோட்டம் கொண்டவரால் திருத்தப்பட்ட கட்டுரை- வெப்பஅலை

படம்
 வெப்ப அலை காற்றின் வெப்பநிலை, மனிதர்களின் உடல்நலனை பாதிக்கும் விதமாக மாறுவதை வெப்ப அலை என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் உள்ள இயல்பான வெப்பநிலையை விட கூடுதல் வெப்பநிலை இருந்தால் அதை வெப்பஅலை எனலாம். சில நாடுகளில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றையும் வெப்ப அலையை மதிப்பிட பயன்படுத்துகின்றனர்.  சமவெளிப்பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் அல்லது அதற்கு மேல் உள்ள வெப்பநிலை; மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்ஸியஸிற்கும் மேல் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை மதிப்பிட்டு, அச்சூழலை வெப்ப அலை என வானிலையாளர்கள் அறிவிக்கின்றனர்.  இயல்பான வெப்பநிலையிலிருந்து 4.5 டிகிரி செல்ஸியஸ் தொடங்கி 6.4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்தால், அதனை வெப்பஅலை (Heatwave) எனலாம். இயல்பான வெப்பநிலையிலிருந்து 6.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையையும் தாண்டிச் சென்றால், அது தீவிர வெப்ப அலை (Severe Heatwave) ஆகும்.  இச்சிறு கட்டுரைக்கான படம் சீரான சிந்தனையோட்டம் இல்லாதவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.. நன்றி - திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு 

உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

படம்
          pixabay           உடலைச் சுற்றிய கவசம் - தோல் நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை . நீர் உள்ளே போகாது , புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது . உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது , வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான் . பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது . வியர்வை , வெளிப்படையாக தெரியும் கவசம் , உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம் . வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும் . மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது . 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து . தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன . இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது . சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை

குழந்தை அழும்போது கண்ணீர் வருவதில்லையே ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தை பிறந்தவுடனே அழுகிறது. ஆனால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதில்லையே ஏன்? குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அழுகை மூலமாக அறியலாம். தாயின் கருப்பையில் உள்ள குழந்தை மெல்ல வெளிவந்தவுடன் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கத் தொடங்கும்போது, அது முன்னிருந்த பாதுகாப்பில் குறைபாட்டை உணர்கிறது. உடனே அழுகிறது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அழும்போது சத்தம்தான் பெருமளவில் ஊரையே உலுக்கும்படி வரும். ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் கூட வராது. காரணம், கண்ணீர் சுரப்பி அப்போது உருவாகி முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதே. மேலும் குழந்தையின் உடலில் வியர்வைச்சுரப்புக்கு காரணமான எக்கிரைன், அபோகிரைன் ஆகிய சுரப்பிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே சில வாரங்களுக்கு குழந்தைக்கு வியர்வை சுரக்காது. அதேசமயம் குழந்தைக்கு பாலூட்டும்போது, அவர்களின் உடலில் வியர்வை உருவாகும். இதன் அளவு நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகமாக இருக்கும். பலரும் பீதியாவார்கள். அது இயல்பானதுதான். தாயின் உடலிலிருந்து உடற்சூடு குழந்தைக்கு மாற்றப்படுகிறது என்கிறார் கலிஃபோர்னியா ப

கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

படம்
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன? நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன. அடுத்து, பாக்டீரியாக்கள்( eptotrichia ,  Delftia ,  Actinobacteria Gp3  and  Staphylococcus ) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது. நன்றி: லிவ் சயின்ஸ்