உடலின் அற்புத பாதுகாப்பு கவசம் - தோல்

 

 

 

 

 

Woman, Beauty, Naked, Erotic, Elegance, Sensual
pixabay

 

 

 

 

 

உடலைச் சுற்றிய கவசம் - தோல்


நமது உடலிலுள்ள தோல் அளவுக்கு நோயிலிருந்து நம்மைக் காக்கும் கவசம் வேறு இல்லை. நீர் உள்ளே போகாது, புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து காக்கிறது. உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, வியர்வை மூலம் குளிர்ச்சி செய்வதும் கூட தோல்தான். பல்வேறு அடுக்குகளாக உள்ள தோல் காயங்களிலிருந்தும் உடலைக் காக்கிறது.


வியர்வை, வெளிப்படையாக தெரியும் கவசம், உறுதித்தன்மை ஆகியவற்றை தோலின் முக்கியமான அம்சங்களாக கூறலாம். வெளியே ஏப்ரல் மாத வெயில் காய்ந்தாலும் அல்லது எரிமலையே கூட வெடித்து லாவா உருகி ஓடினாலும் உடலின் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸிற்குள்தா்ன் இருக்கவேண்டும். மூளை புத்திசாலித்திற்கான ஆதாரம்தான் என்றாலும் அதனால் வெப்பத்தை பொறுக்க முடியாது. 42 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை அதிகரித்தால் அது உயிருக்கே ஆபத்து.


தோல் முழுக்க பல லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து வேலைபார்த்துத்தான் தினசரி லிட்டர் கணக்கான வியர்வையை வெளியேற்றுகிறது. சில மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை வெளியாகும். வெயில் காலத்தில் உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது மூளை தானாகவே வெப்பத்தைக் கட்டுப்படுத்த ஆணைகளை வழங்கும். உடனே எக்ரின் சுரப்பி மூலம் உடலெங்கும் வியர்வை சுரக்கத் தொடங்கும். நீரும் உப்பும் வியர்வையில் அதிக வெப்பமுள்ள பகுதிகளிலிருந்து ஆவியாகும். இதனால் உடலின் வெப்பநிலை உடனே குறையும். இதனால் மூளையை பாதிக்குமளவு இருந்த வெப்பம் மெல்ல குறையத் தொடங்கும். எக்ரின் சுரப்பு உடல் முழுவதும் உண்டு என்றாலும் மணிக்கட்டு, பாதம் ஆகிய பகுதிகளில் அதிகம். பதற்றம் ஏற்படும்போது காலும் பாதமும் ஈரத்தில் நனைந்து ஊறியது போல மாறுவது இதன் காரணமாகத்தான். அபோகிரைன் சுரப்பி அக்குள், மார்பு காம்புகள் ஆகிய இடங்களில் உள்ளன. இவற்றில் இருந்து வரும் வியர்வை நறுமணமற்றது. ஆனால் இதில் உள்ள புரதம், ஸ்டெராய்டு சமாச்சாரங்கள் பாக்டீரியாக்களுக்கு உணவு. இதனால் ஏற்படும் வேதிமாற்றங்கள்தான் வியர்வை வடிந்து துர்நாற்றமுடியாத மாறுகிறது. நெடுங்காலம் இதுதான் மனிதர்களை ஈர்ப்பதற்கான பெராமோன்கள் என்று கூட பலரும் நம்பி வந்தனர்.

ஆண்களையும் பெண்களையும் ஈர்ப்பதில் உடல் வாசனை முக்கியமானது என்றாலும் வேதிமூலக்கூறு எதுவென இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவி்ல்லை. ஆண்களின் வியர்வை படிந்த டீஷர்ட், அதன் நறுமணம் பெண்களை கவருவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு விதமான நோய்பாதுகாப்பு மரபணுக்கள் இதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்தலாம். பொதுவாக ஒருவர் காதலிக்கும் ஒருவர் அருகிலிருக்கும்போது மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது எந்தளவு சரியாக இருக்கும் என்பதை நடைமுறையில் தானேதான் முயன்று பார்த்துக்கொள்ள வேண்டும். தோலுக்கும் மூக்கிற்குமான தொடர்பு, நோய்களை தடுக்கவும் பயன்படுகிறதாக அறிவியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


முதலில் தோல் என்பது தடிமனாக முடியுடன் இருந்தது. பிறகு, உடலின் வெப்பத்தை வெளியேற்ற முடியாத காரணத்தால் மெல்ல முடி உதிரத் தொடங்கி தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளோம். தோலிலுள்ள வியர்வை சுரப்பிகள், முடி ஆகியவையே உடலுக்கு தேவையான வெப்பத்தை சரியான அளவில் பராமரிக்கின்றன. இதற்கு தடிமனான தோல் தேவையில்லை. முடியும் தோலு்ம் இணைந்துதான் பல்வேறு பருவகாலங்களில் உடலுக்கு போர்வை போலாகி காப்பாற்றுகின்றன.


ஒருவர் எழுதும் பேப்பரை விட தடிமனான அளவில் தோல் உள்ளது துல்லியமாக சொன்னால் ஒரு மி.மீ அளவுக்கு அழுத்தமானது. பல்வேறு விபத்துகளிலிருந்தும் சூழல் மாறுபாடுகளிலிருந்தும் நம்மை காப்பது தோல்தான். தோலிலுள்ள முடி, நகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கெராட்டின் என்ற புரதம் முக்கியமான காரணம். இதே புரதம்தான் விலங்குகளின் நகம், கொம்புகளின் வளர்ச்சிக்கு காரணம். கெராஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்துதான் கெராட்டின் வந்தது. கெராஸ் என்பதற்கு கொம்பு என்று அர்த்தம்.


தோலை நன்றாக ஜூம் செய்து பார்த்தால் அதில் செதில் செதிலாக எப்படி கவசம் உருவாகியிருக்கிறது என்று தெரியும். இதற்கும் கெராட்டின் புரதமே காரணம். தோலின் பாதுகாப்பையும் மீறி தோல் கிழிந்தால், உடலின் முதல்பணி ரத்தம் வெளியேறுவதை தடுப்பதுதான். அடுத்து வட்டவடிவிலான செல்கள் ஒன்றாக இணைந்து ரத்தம் வெளியேறுவதை உடனே தடுக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள் காயம் வழியாக உள்ளே வர முயலும் நுண்ணுயிரிகளை எதிர்க்கின்றன. அடுத்து, இறந்துபோன செல்களை அகற்றுகின்றன. இதற்குப்பிறகுதான் காயத்தை ஆற்றும் விதமாக புதிய செல்கள் செல்உருளள் உருவாகின்றன. ஒன்பது கி.மீ. நீளம் கொண்ட தோல், இரண்டு சதுர மீட்டரை நிரப்பியுள்ளது.


தோலில் உருவாகும் காயங்களை நான்கு வகையாக பிரிக்கிறார்கள். இதில் சிராய்ப்பு, கூர்மையான பொருளால் தாக்கப்படுவது, செதிலாக பிய்க்கப்படுவது, ஆழமான காயம்


இதில் ஆழமான காயம் என்பது கத்தி அல்லது துப்பாக்கி குண்டால் ஏற்படுவது. இது காயத்தின் தன்மையைப் பொறுத்து குணமாக அதிக காலம் பிடிக்கும். சைக்கிள், பைக் ஓட்டி கீழே விழுந்து ஏற்படும் சிராய்ப்பு என்பது வலி தந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. இதனை கிரேஸ் என்று கூறுகின்றனர். அடுத்து கூர்மையான பொருளால் ஏற்படும் காயம். ஆபரேஷன் செய்யப்பயன்படும் ஸ்கேல்பல், காகித த்தின் கூர்மையான நுனி ஆகியவை தோலை வெட்டும்போது காயம் ஆறுவதற்கு நேரம் அதிகம் எடுக்கும். புண் வேகமாக ஆறுவதற்காகத்தான் அதனை ஒன்றாக சேர்த்து தைக்கிறார்கள். தோலிலுள்ள பைப்ரோபிளாஸ்ட் இதனை சரிசெய்கிறது.


சயின்ஸ் போகஸ்


மாண்டி லைமன்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்