உலகையே கட்டுப்படுத்தும் டெக் நிறுவனமாக கூகுள் வளர்ந்த கதை! சூப்பர் பிஸினஸ்மேன் - லாரி பேஜ், செர்ஜி பிரின்
சூப்பர் பிஸினஸ்மேன்
கூகுள் இரட்டையர்கள் செர்ஜி பிரின், பேஜ்
பில்கேட்ஸின் மைக்ரோசாப்டைப் போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக கூகுள் மாறிவிட்டது அதைப் பற்றியும் அதனை தொடங்கிய கூகுள் இரட்டையர்கள் பற்றி கட்டுரைகள் செய்தி வெளிவராத நாளிதழ்களோ, வார இதழ்களோ இருக்க முடியாது. அந்தளவு சர்ச் எஞ்சின் ஒன்றை உருவாக்கி மக்களை எளிதாக அதில் இணைத்துவிட்டனர். இப்போதும் சமூக வலைத்தள விஷயத்தில் நினைத்த வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஆண்ட்ராய்டு விஷயத்தில் மக்களை கட்டுப்படுத்தி தான் வருகிறார்கள். வெற்றி பெற்ற பெரு நிறுவனம் என்றாலும் கூட பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்து வருவதோடு, வன்பொருட்கள், மென்பொருட்கள் என பலவற்றையும் உருவாக்கி வருகின்றனர்.
2004இல் கூகுளின் நிறுவனர்களான செர்
ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரைப் பற்றி கட்டுரை பிளேபாய் இதழில் வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்று வரும் நிறுவனர்களின் திறமையை வெளிப்படையாக பாரட்டி வெளியான கட்டுரை அது.
பேஜ், அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தவர். பிறகு ஸ்டான்போர்டில் பிஹெச்டி படிக்க முடிவெடுத்து சேர்ந்தார். பிரின் ரஷ்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் 1979இல் அமெரிக்காவுக்கு வந்து குடியேறினர். மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஸ்டான்போர்டில் கணினி அறிவியல் படிப்பில் டாக்டரேட் பட்டம் பெற விண்ணப்பித்து சேர்ந்தார். இருவரும் சந்தித்து பேசி நண்பர்களான பிறகு 1996இல் சர்ச் எஞ்சின் பேக்ரப் என்பதை உருவாக்கினர். அடுத்த ஆண்டு இதன் பெயரை கூகுள் என மாற்றினர். இதற்கான பெயர்க்காரணத்தை இணையத்தில் நீங்கள் எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.
சன் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆண்டியிடம் ஒரு லட்சம் டாலர்களை முதலீடாக பெற்றனர். காரேஜ் ஒன்றை வாடகைக்கு பிடித்து கூகுள் டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினர். செப்டம்பர் மாதம் 1997ஆம் ஆண்டு கூகுள்.காம் என்ற பெயரை முறையாக பதிவு செய்தனர். இப்படி பதிவு செய்து கிரைக் சில்வர்ஸ்டீன் என்பவரை முதல் பணியாளராக வேலைக்கு எடுத்தனர். அவருக்கு கூகுளில் எண்பது பணியாளர்கள் வரை வேலை செய்வார்களோ என்று நினைத்திருக்கிறார். அது நிறைவே ற கொஞ்சம் காலம் பிடித்தது. பிறகு அவரே கொடுத்த பேட்டியில் நாங்கள் முக்கியமான சர்ச் இஞ்சினாக மாறியுள்ளோம். இன்று எங்கள் நிறுவனத்தில் இருபதாயிமம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர் என்று பெருமைப்பட்டிருக்கிறார்.
அப்போது சந்தையில் எக்ஸைட் , ஆஸ்க் ஜீவ்ஸ், லைகோஸ் ஆகிய சர்ச் எஞ்சின்கள் சந்தையில் இருந்தன. இத்துறையில் தாமதமாகத்தான் கூகுள் உள்ளே நுழைந்தது. எப்படி சந்தையைப் பிடித்தது? பல்வேறு வலைத்தளங்களின் முகவரிகளை வரிசைப்படுத்தும் டெக்னிக்கை கூகுள் உருவாக்கியது. 2001இல் பேஜ், பல்வேறு சர்ச் இஞ்சின்களும் ஒருவர் தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப தேடுதலை முக்கியப்படுத்துவதில்லை என்பதை கண்டுகொண்டார். இதில் வருமான வாய்ப்பு இருப்பதை அறிந்து ்கூகுளை மேலும் நேர்த்தியாக்க தொடங்கினர்.
அப்போது இருந்த சர்ச் எஞ்சின்கள் எல்லாமே ஸ்டோர் ரூம் போல ஏராளமான தகவல்களை முதல் பக்கத்திலேயே கொட்டி வைத்திருந்தன. கூகுள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் பக்கத்தை சுத்தப்படுத்தியிருந்தது. கூகுளின் தேடுதல் இடம், மொழி என சில விஷயங்களே முதல் பக்கத்தில் இருக்கும். இது தேடுபவர்களுக்கு உற்சாகம் தந்தது. மக்கள் தேடும் வார்த்தைகளைப் பொறுத்து விளம்பரங்களை வெளியிடும் நுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தியது. இதில் கிடைத்த வருமானம் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவியது. 2001இன் பின்பகுதியில்தான் நிறுவனத்திற்கு கொஞ்சமேனும் வருமானம் கிடைத்தது.
சிலிக்கன் வேலியில் இருந்த பல்வேறு நிறுவனங்களையும் கவனிக்க வைத்த இன்னொரு மாற்றம் கூகுளின் கலாசாரம். வேலை செய்யும் இடம் என்றாலும் கஃபே, ஜிம், குழந்தைளள் விளையாடுவதற்கான இடம், மலையேறுவதற்கான பயிற்சி இடம் என பணியாளர்களுக்கு உற்சாகம் தரும் இடமாகவே அது இருந்தது. டோன்ட் பி ஈவில் என்பதுதான் அவர்களுடைய ஸ்லோகமாக இருந்தது. பங்குச்சந்தையில் இறங்கியபிறகு நிறுவனத்தின் முகம் மாறத் தொடங்கியது பணியாளர்களும் பலரு் பணக்கார ர்களாக மாறினார்கள். கூகுள் தனது ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான புதிய மென்பொருள்களையும் சேவைகளையும் வழங்கத் தொடங்கியது. ஜிமெயில் இப்படித்தான் மக்களுக்கு கிடைத்தது. அன்ற சந்தையில் யாஹூ, ஹாட்மெயில் ஆகிய நிறுவனங்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. கூகுளைப் பொறுத்தவரை இதிலும் தாமதமாகத்தா்ன் உள்ளே நுழைந்தது. ஆனால் நிறுவனங்களின் தவறுகளை என்னவென்று புரிந்து வைத்திருந்ததால் தனது சேவையை துல்லியமாக அழகாக உருவாக்கியிருந்தது. இன்று்ம் கூட ஜிமெயிலை குறைந்த இணையவேகத்தில் இயக்க முடியும். இதன் காரணமாக டாப்பில் இருந்த ஹாட்மெயில் கூட கூகுளை காப்பியடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
பிறகு குரோம் ப்ரௌசர் வந்தது. அதுநாள் வரை வறட்சியாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொசில்லா, சபாரி போன்றவற்றையெல்லாம் இடது கையில் தள்ளிவிட்டு விரைவில் ச்ந்தையில் முன்னுக்கு வந்துவிட்டது. . கூகுள் தனது அனைத்து சேவைகளையும் தனது ப்ரௌசரில் வழங்கியது. அனைத்துக்கும் ஒரே இடத்தில் பாஸ்வேர்டை பதிந்தால் போதும் என்பது வசதியாக இருந்தது. வலைத்தளங்களை வேகமாக காட்டுவது என்பதில் வேறுபாட்டைக் காட்டி வென்றது. பிறகுதான் குரோம் எனும் லினக்ஸ் அடிப்படையிலான ஆபரேட்டிங் சிஸ்டத்தை இலவசமாக வழங்கியது. இதனை யாரும் கோடிங்கை மாற்றி மேம்படுத்த முடியும். லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் இலவசமாக இணையத்தில் கிடைத்தாலும் உலகம் முழுக்க இதற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைவு. காரணம் , கணினியுடன் அதுவே இலவசமாக கிடைத்ததில்லை. மக்கள் தங்களுக்கு வேண்டுமென்றால் அதனை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இந்த நிலையில் கூகுள் குரோமை உருவாக்கியதால் பல்வேறு லேப்டாப் நிறுவனங்களும் தங்களது கணினியில் பதித்து விற்க தொடங்கின. ஒரு வகையில் இதன் காரணமாக விண்டோஸ் கணினிகளுக்கான கிராக்கி குறையத் தொடங்கியது. 2008 இல் கூகுளின் கவனம் ஸ்மார்ட்போன்கள் பக்கள் திரும்பியது. இதுவும் கூட லினக்ஸ் அடிப்படையான அமைப்புதான். இன்று உலகில் பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டை கூகுள் இலவசமாக்கியதால் போன் நிறுவனங்கள் இதனை தங்கள் போன்களில் பதித்து விற்கத் தொடங்கிவிட்டன.
இதனால் ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் திகைத்துவிட்டன. மைக்ரோசாப்ட் போன் வணிகத்தில் முதலி்ல் இறங்கி நோக்கியாவைக் கூட வாங்கியது. தனது விண்டோஸ் ஓஎஸ்ஸை முதலி்ல போனில் பயன்படுத்தினாலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. ஆப்பிளைப் பொறுத்தவரை அதனை வாங்குபவர்கள் மேல்தட்டு ஆட்கள்தான். வன்பொருள், மெ்ன்பொருள் என இரண்டையும் அவர்களே கட்டுப்படுத்துகிறார்கள் என்பதால் அதன் விலை எப்போதும் அதிகம்தான். சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது விண்டோஸிற்குத்தான். அந்த நிறுவனம் நோக்கியாவை விற்றுவிட்டு சந்தையிலிருந்தே வெளியேறிவிட்டது. கூகுளின் திட்டங்கள் வெறும் சர்ச் எஞ்சின் நிறுவனம் அதைச்சார்ந்து என்பதாக நின்றுவிடவில்லை. விண்டோஸ் காசுக்கு விற்கும் பல்வேறு அப்ளிகேஷன்களை இலவசமாக இணையத்தில் வழங்கத் தொடங்கியது. நாம் பலரும் ஆபீஸ் மென்பொருளை பயன்படுத்தி இருப்போதும். இப்போது அதனையே எங்கு சென்றாலும் பயன்படுத்தும் இக்கட்டுகள் கிடையாது. கூகுள் டாக்ஸ் அதற்கு பதிலாக அதை விட சிறப்பாகவே அனைத்து விஷயங்களிலும் உதவுகிறது. அதுவும் கட்டணம் ஏதுமின்றி. இதனால் மைக்ரோசாப்ட் தனது ஆபீஸ் சேவையை 2009 ஆம் ஆண்டு முதல் இலவசமாக வழங்கம் நிலைக்கு தள்ளப்ப்பட்டது.
கூகுளின் பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. கூகுள் ஆர்குட் வீடியோ பிளேயர், கூகுள் ஆன்சர்ஸ், கூகுள் பிளஸ் ஆகிய விஷயங்களைச் சொல்லலாம். இதைப்பற்றியெல்லாம் கூகுள் கவலைப்படாமல் அடுத்தடுத்து புதிய விஷயங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. கூகுள் எந்தளவு வேகமாக தனது கிரியேட்டிவிட்டியான விஷயங்களால் வளர்ந்து வந்ததோ, அதேயளவு அரசியல், இணைய ஆதிக்கம் ஆகியவற்றில் சிக்கலை சந்தித்து வருகிறது. மைக்ரோசாப்ட் பெரிய நிறுவனமாக வளர்ந்த பிறகு சந்தித்த விஷயங்கள்தான். இதற்காக பல்வேறு நாடுகளில் அபராதங்களைக் கூட கட்டியுள்ளது. 2006இல் தனது கொள்கைக்கு மாறாக சீனாவில் தனது சர்ச் எஞ்சினை கூகுள் உருவாக்கியது. அங்கு ஒரே கட்சி ஆட்சி முறையாலும் தகவல்களை கட்டுப்படுத்துவதும் நிறுவனத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்த கூகுள் அங்கிருந்து 2010ஆம் ஆண்டு வெளியேறியது.
கூகுளைப் பொறுத்தவரை எந்த விஷயங்கள் நடந்தாலும் அதில் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளும் மென்பொருட்களும், புதிய துறைகளில் கால்பதிப்பதும் நடந்துகொண்டே வருகிறது. செயற்கை நுண்ணறிவு, தானியங்கி வாகனங்கள், செயற்கைக்கோள் மூலமான பொழுதுபோக்கு சேவைகள், கூகுள் உதவியாளர் என பல்வேறு புதிய விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
ரைமர் ரிக்பி
தமிழில்
கா.சி.வின்சென்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக