சைக்கோபாத்கள் சமூகத்திற்கு அவசியமா?

 

 

 

 






சைக்கோபாத்கள் தேவையா?


வாழ்க்கை விக்ரமன் படம்போல நல்லவர்களாக நிறைந்திருந்தால் நன்றாக இருக்கும். எதற்கு எதிர்மறையான குணங்கள் உருவாகின்றன. இவற்றின் மொத்த உருவமாக மனிதர்கள் தெற்கு சமூகத்தில் உருவாகி பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் பிறக்காமலிருந்தால் நமக்கு எந்த இழப்பும் இல்லை என்று கூட பலரும் நினைப்பார்கள். இந்த கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொண்டால் சாதாரண தந்தி படிக்கும் வாசகர்கள் போல பொதுக்கருத்துப்படி கருத்துகளை கூறமாட்டார்கள் என உறுதியாக கொள்ளலாம். இதில் மதரீதியான சிந்தனை, புனைவு ரீதியான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக கொள்ள முடியாது. ஒருவகையில் பரிணாம வளர்ச்சிப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீய எண்ணங்கள் உருவாகியிருக்குமா? இதன் பின்னணியில் மரபணுக்கள் கூட இருக்கலாம்.


பன்முகத்தன்மை கொண்ட கலாசாரப்படி இன்று அனைத்து நாடுகளிலும் இனக்குழுக்களிலும் கூட 2 சதவீத மக்கள் இப்படி உளவியல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். பெற்றோர்களின் கண்டிப்பு, வன்முறை, அவமானப்படுத்தல், வன்முறை, வல்லுறவு ஆகியவற்றின் காரணமாக சைக்கோபாத்கள் உருவாகின்றனர். ஒருவகையில் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தன்மை இல்லாதவர், பெற்றோர் இல்லாமல் கைவிடப்படும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்வது கடினம். அப்போதுதான் குப்பைத்தொட்டியில் நாய்களோடு போட்டிபோட்டு உணவைத ்தேடி சாப்பிட முடியும். நாய் என்று கருணை பார்த்தால் நீங்கள் உயிரோடு இருக்க முடியாது. ஒரு துண்டு தேங்காய்க்காக நாயை கொன்ற அமாவாசை போன்ற மனிதர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். எதிர்ப்பவர்களுக்கு அல்வா கொடுத்து முன்னேறுகிறார்கள்.



மனிதர்கள் அன்பானவர்கள், கண்ணியமானர்கள், பிறருக்கு உதவுபவர்கள், பெண்களை மூக்குத்திஅம்மனாக வழங்குபவர்கள் என்று நன்னெறி கதைகளை எப்போதும் நம்பாதீர்கள். அனைத்து உயிர்களுமே சுயநலமும், பேராசையும், வன்முறையையும் அடிப்படையாக கொண்டவைதான். இந்த தன்மை இல்லாதபோது பரிணாம வளர்ச்சியில் ஒரு இனமாக மனிதர்கள் நீடித்து வந்திருக்க முடியாது. கிறிஸ்தவர்கள் புனிதப்போர்களை நடத்தியது ஏன், பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களைக் காப்பாற்றவா கப்பலேறி இங்கு வந்து இறங்கினார்கள், டச்சு, பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் எதற்காக உலகம் முழுக்க காலனிகளை அமைத்தனர்? எல்லாமே சுயநலனிற்குத்தான். அவர்களைக் காப்பாற்றிக்கொள்ளத்தான். இதில் சாமர்த்தியம் தேவைப்படுவது உணர்வுகளை எங்கே எப்படி வெளிப்படுத்திக்கொள்வது என்பதைத்தான். இதனை சரியாக கற்றுக்கொண்டவர்கள் முகமூடி அணிந்தவர்கள். இதனைப் பற்றி கவலைப்படாதவர்கள் நான் இப்படித்தான் என வாழ்பவர்கள் விரைவில் சமூக விரோதிகளாக மாறிவிடுவார்கள். இவர்களால் தங்களின் மனதில் எழும் குரூரமான எண்ணங்களை பொறுக்கமுடியாமல் அதனை செயல்படுத்துகிறார்கள். இதனால் இவர்களை கொலைகாரர்கள் என சமூகம் அடையாளப்படுத்துகிறது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்கிற்கு கொண்டு வருபவர்களுக்கு அதிக ஆபத்து இல்லை.


எல்லோரும் மனிதர்கள்தான். தவறு செய்துகொண்டு மீள்பவர்கள்தான். ஆனால் சில சமயங்களில் நமது எண்ணங்கள், யோசனைகள் நம்மையே ஏமாற்றிவிடும் சந்தர்ப்பங்களுமுண்டு. இதனை ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் அனுபவித்திருப்போம். ஆனால் சைக்கோபாத் மனிதர்கள் தங்களது நோக்கத்தை யாரிடமும் கூற மாட்டார்கள். இதனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கூறவே முடியாது. எளிதில் இதுதான் அவர்கள் என்று கணித்துவிட மமுடியாது. இவர்கள் எளிதில் பிறர் பதற்றமுறும் சமயங்களில் கலக்கமடைவதில்லை. இதனால் இவர்களின் உடலில் பதற்றத்தை கட்டுப்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன், இவர்களுக்கு வேறு விதமாக செயல்படுகிறது. இந்த ஹார்மோன்தான் ரத்த த்தில் உள்ள சர்க்கரை, புரதம், வளர்சிதை மாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக உடல் பதற்றமான நிலையில் இருந்துகொண்டே இருந்தால் நோய்த்தொற்றை ஏற்பட்டால் அதனை சமாளிப்பது கடினம். சைக்கோபாத்களுக்கு அதிக நோய்கள் ஏற்படாது. இவர்களுக்கு உடல் நோயை எதிர்ப்பதற்கான னன்மையில் உயரத்தில் இருக்கும்.


அடுத்து, பொய்களை புனைவாக சொல்வதிலும் பிறரை விட தேர்ச்சி பெற்றவர்கள், ஆபத்தான நிலையில் உணர்ச்சிகரமாக யோசிக்காமல் தனக்கு பயன் கிடைக்கும் வகையில் பிரச்னையைக் கையாளும் திறனும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் தங்களுக்கான பெண்களை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். அனைவருக்குமே அன்பும் அங்கீகாரமும்தான் தேவை. பெண்களைப் பொறுத்தவரை எந்த நிபந்தனையுமில்லாமல் காதலிக்கப்படவேண்டும். தன்னை ஆண் பாதுகாக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிறரை விட சைக்கோபாத்கள் மிகவும் தாராளமாக நடந்துகொள்வார்கள். எனக்கு ஏற்படும் சிக்கலில் நீ பாதிக்க கூடாது என சொல்லும் விஷயங்களைக் கூட சொல்லாமல் வலியும் இன்பமும் கிடைக்கும் படி செய்வார்கள்.


பொதுவாக அனைவருக்குமே பிறரைக் கட்டுப்படுத்துவது பிடிக்கும். இதனை வெளிப்படையாக கூறாவிட்டாலும் அன்பு, பாசம், காதல், கல்யாணம் என பல்வேறு சமாச்சாரங்களை சொல்லி சாடைமாடையாக செய்வது வழக்கம். தன்னால் பிறரை சரிசெய்துவிட முடியும் என தமிழ்ப்பட நாயகிகள் போன்ற முட்டாள்தனமான எண்ணம் இவர்களுக்கு இருக்கும். இதன் விளைவுகள் பூஜ்யம் என்றாலும் கூட பெ்ண்களால் தன்னை காயப்படுத்தும், எரிச்சலூட்டும் சைக்கோபாத் ஆண்களை விட்ட வரமுடியாது. இதனால் குடும்பத்திற்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தினாலும் கூட அம்மா, அக்கா, மனைவி என யாராவது ஒருவர் சைக்கோபாத் ஆட்களுக்கு துணையாக இருப்பார்கள். வெளியிலுள்ள எதிரிகளை இவர்களே சமாளிப்பார்கள்.


அலுவலகத்திலோ, வேறு விழாக்களிலோ இதுபோன்ற மனிதர்களைக் கண்டால் சின்ன புன்னகையுடன் கடந்துவிடுவது நல்லது. மற்றபடி இவர்கள் தங்கள் இரையாக இருப்பவர்களை எந்த இடத்திலும் தேடியபடி இருப்பார்கள். முடிந்தளவு இவர்களிடம் நம்மைப் பற்றி அதிகம் சொல்லாமல் விலகி நிற்பது நல்லது. பலவீனமானர்களை தேடியபடி இருக்கும் இவர்கள், தங்களது திறமையால் கண்டுபிடித்தாலும் கூட அதுபற்றிய எச்சரிக்கையுடன் அறிந்தவர்கள் இருப்பது நல்லது. அதேசமயம் இப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இறுக்கமாக சுயநலமாக இருப்பவர்கள் எதற்கு உதவாதவர்கள் என்று கூறமுடியாது. இவர்கள் உலகமே சிக்கலில் தவிக்கும்போது, பொருளாதார நெருக்கடியில் மாட்டும்போது நிறுவனங்களை வலுவான இடத்தை நோக்கி நகர்த்திச்செல்வார்கள். அதற்காக தொழிற்சாலைகளை மூடுவது, சம்பளத்தை வெட்டுவது என பல்வேறு செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால் இவர்களுக்கு கெட்டபெயர் ஏற்பட்டாலும் நிறுவனத்தை இக்கட்டிலிருந்து மீட்டுவிடுவார்கள். இத்தகைய ஆட்கள்தான் ராணுவத்திலும் பல்வேறு உயரங்களை தொட முடியும். தன் குழுவை சவாலான விஷயங்களை தாண்ட வைத்து அவர்களது மனத்தடைகளை உடைத்து மேலே வர உதவுவார்கள். இரக்கமேயில்லாத தலைவர்களாக இருந்தாலும் இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. இப்படி இறுக்கமான வன்முறை கொண்ட மரபணுக்கள் பரிணாம வளர்ச்சி வழியாகவே வந்திருக்க வாய்ப்பு அதிகம்.


வங்கி மற்றும் பங்குச்சந்தை தொடர்பான துறைகளில் பணம் சம்பாதிப்பதற்கு இரக்கமற்று நடந்துகொள்ளும் இயக்குநர்களை அதிகாரிகள் மக்கள் விரும்புகின்றனர். இதன் அர்த்தம், இறுக்கமாகவும் வலிமையாகவும் உள்ளவர்தான் தங்களுக்கு வருமானம் சம்பாதித்து கொடுக்கவும், பாதுகாக்கவும் முடியும் என நம்புவதுதான். பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ளவர்களை இப்படி நினைத்துவிட முடியாது. இவர்களுக்கு குடும்பங்கள் உண்டு. அவர்களுக்கான நேரம் ஒதுக்கித்தான் தங்களது சாதனைகளை சாதித்துள்ளனர். மிகப்பெரும் வெற்றி பெற்ற தலைவர்களை ஆராய்ந்தால் அவர்களிடம் சைக்கோபாத் தன்மை காணப்படு்ம் என ஆய்வுகள் சொல்லுகின்றன. இரக்கமற்ற தன்மை கொண்ட மனிதர்களால் பொருளாதாரம் காப்பாற்றப்படுகிறது என்று கூட கூறலாம். மனிதர்கள் அனைவருக்கும் சண்டை என்பது பிடிக்கும். இதனை வெளிப்படையாக கூறுவதால் ஒருவரை சைக்கோபாத் என்று கூறிவிட முடியாது. இன்று போர் என்பதை நேரடியாக நடக்காமல் மறைமுகமாகவே பல்வேறு விதமாக நடைபெறுகிறது. மற்றபடி போரைப் பொறுத்தவரை வெற்றி மட்டுமே முக்கியம். அதைக் கொண்டாட ஒருவர் உயிரோடு இருக்கவேண்டும். அதற்காக சட்டமாவது விட்டமாவது அனைத்தையும் உடைத்தெறிய மனிதர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.


வியட்நாம் போரில் பங்கேற்ற வீர ரான ஜேக் பிரையர், வியட்நாம் போரில் பங்கேற்றவர். ஹெலிகாப்டரில் சென்று பல்வேறு தாக்குதல்களை நடத்தியவர, சாப்பிட உட்காரும்போது அவரைச்சுற்றி முழுக்க ரத்தம் பரவிக்கிடந்தது. உடல் உறுப்புகளும், மூளையு்ம சிதறிக்கிடந்தது. அந்த சூழ்நிலையில்தான் அவர் சாப்பிட்டார். இதற்காக இவரை சைக்கோபாத் என்று கூறிவிட முடியாது. ஆனால் ராணுவத்தில் பணியாற்ற பிறரை விட சைக்கோபாத்களை அனுப்பும்போது அவர்களுக்கு அதற்குப்பிறகு பிடிஎஸ்டி போன்ற உளவியல் பாதிப்புகள் ஏற்படாது. அவர்களால் இந்த வேலையை எந்த உணர்ச்சிகளுக்குள்ளும் சிக்காமல் செய்யமுடியும். பிரையர் இதுபற்றி கேட்டபோது, தன்னால் போருக்கான மனநிலையை ஆன், ஆப் நிலையில் வைத்திருக்க முடியும் என்று கூறினார். இது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை.


சாகசக்காரர்களை, நடிகர்களை பெண்களுக்கு எளிதாக பிடித்துவிடுகிறது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பார். ஒருவகையில் அனைவருக்குமே தினசரி வாழ்க்கை என்பது அலுப்பானது. இதிலிருந்து தப்பிக்கும் விதமான சாகசம், திகில், பயம், அன்பு என உணர்வுகளை அனுபவங்களாக ஒருவர் தரும்போது அவரை நம்மால் விரும்பாமல் இருக்க முடியாது. சைக்கோபாத்களின் வாழ்க்கை இப்படித்தான் அமையும் எனவே, பெண்கள் இயல்பாகவே கெட்ட பயல்களை எளிதாக பிடித்துவிடுகிறது. அவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கிற ஆனால் செய்ய முடியாத தயங்குகிற விஷயங்கள் நினைவுக்கு வரக்கூடும். வன்முறையை சிலர் ஏற்கத் தயங்கலாம். ஆனால் இவை எல்லாமே வாழ்க்கையின் அங்கம்தான். சுயவதையும், பிறரை சித்திரவதை செய்வதும் எப்போதும் மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து நீக்கமுடியாதவை. திரைப்படங்களில் இதற்கு எ்டுத்துக்காட்டாக குட் பெல்லாஸ் படத்தில் ஜோ பெஸ்சி பாத்திரம், தி டார்க் நைட் படத்தில் ஜோக்கராக வரும் ஹீத் லெட்ஜர் பாத்திரத்தைக் கூறலாம்.


சைக்கோபாத் அறிகுறிகளைக் கொண்டவர்களை ஆபத்தானவர்கள் என்று சட்டத்தின் மூலம் கொல்வதை விட அவர்கள் நேர்மறையான முறையில் சமூகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். ஹரே பட்டியலில் உள்ள விதிகளின் படி ஒருவரின் குணங்களை முன்பே கணித்துவிட்டால் அவர்களை விரைவாக சிகிச்சை அளித்து ஆவேசத்தையும் கோபத்தையும் குறைத்துவிட முடியும்.


vincent kabo

















கருத்துகள்