மத்திய அரசு நிதியை நேரடியாக ஏழை மக்களின் கையில் வழங்குவதே சிறந்த முடிவு! அபிஜித் பானர்ஜி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்
அபிஜித் பானர்ஜி
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உலக நாடுகள் பணத்தை அச்சிடத் தொடங்கியுள்ளன. இந்தியா இந்த வழியில் சென்றால் மட்டுமே தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்து வறுமையில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும் என அபிஜித் கூறுகிறார்.
மத்திய அரசு பணத்தை அச்சிடவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். நீங்கள் அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
நான் அரசு பணத்தை அச்சிடவேண்டுமென சில காலம் முன்பிருந்தே கூறிவருகிறேன். நான் இந்த கருத்தை ஆதரிக்கிறேன். முதல் அலையின்போது இதனை செய்திரு்ந்தால் மக்களுக்கு ஏற்பட்ட வலியை பெருமளவு குறைத்திருக்கலாம் இதனை நிச்சயமாக அரசு செய்திரு்க்க முடியும். மக்களை முதலில் தடுப்பூசியைக் கொடுத்து காப்பாற்றியிருந்தால் பின்னால் கூட கடன்களுக்கான வாக்குறுதியை அரசு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்க முடியும். ஆனால் அரசு தேவையில்லாமல் பயந்துவிட்டது. ஊக்கத்தொக்கையை அளித்தது நிச்சயம் அரசுக்கு வருவாயை வழங்கக்கூடியதுதான். கடன்களை பற்றி கவலைப்படும் அரசு இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கமுடியும்.
சிலர் பணவீக்கம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்களே?
நாம் இப்போதுள்ள நிலையை சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் பணவீக்கம் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். பொருட்கள் சரியான முறையில் விநியோகிக்கப்படாத நிலையில் பணவீக்கம் அதிகரிக்கிறது. இதற்கு பொதுமுடக்கம் முக்கியமான காரணம். பொருளாதாரத்தை சரியானபடி நடத்திச்செல்வதற்கான கொ ள்கைகள் தேவை. பணவீக்கத்தைப் பொறுத்தவரை அதனை நிலையாக குறைக்கும் விஷயங்கள் ஏதுமில்லை. கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் என்பது குறைவாக இருக்கிறது. இதனை நீங்கள் நாட்டின் வளர்ச்சியோடு பொருத்திப் பார்க்கவேண்டும். இப்போது பணவீக்கம் அபாயகர அளவில் உள்ளது உண்மைதான். ஆனால் இந்நிலை தற்காலிகமானதுதான். பணவீக்க அளவு என்பது மூன்று முதல் நான்கு சதவீத த்தை தாண்டினால் அது பேரிடரை உருவாக்கும். விரைவில் பொருளாதாரம் சரியான நிலைக்குத் திரும்பும் என நம்புகிறேன்.
பணத்தை நேரடியாக மக்களின் கைகளில் கொடுப்பது பயன் அளிக்கும் என நினைக்கிறீர்களா? முக்கியமான துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீள முடியும் என நம்புகிறீர்களா?
இது கொஞ்சம் வேறுபட்ட விஷயங்கள். பொதுமுடக்கம் கட்டுமானத்துறை, விற்பனைத்துறை, சிறுகுறு தொழிலகங்களை பாதித்துள்ளது. கட்டுமானத்துறை எப்படியோ கடன்களைப் பெற்று சமாளித்துவிட முடியும். பொதுப்போக்குவரத்துறை முடங்கியதால், அதனை நம்பியுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் அம்மக்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு இந்த வகையில் சுவாரசியமான விஷயத்தை செய்கிறது. பொதுவிநியோக முறையில் மக்களுக்கு சென்று சேரும்படி பணத்தை அனைவருக்கும் கொடுக்கிறது. கிராம்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை நூறிலிருந்து நூற்றைம்பது நாட்களாக அரசு உயர்த்தினால் கிராம்ப்புற மக்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கான தேவை இருந்தால் இதனை பயன்படுத்தலாம். இல்லையென்றால் பணம் மிச்சம். இந்த வகையில் மக்களுக்கு பணம் சென்று சேர வாய்ப்புள்ளது. அல்லது பொதுவிநியோக முறையில் மக்களுக்கு பணத்தை கொடுக்கலாம் என்பதுதான் எனது நினைவில் இதற்கான தீர்வாக வந்துபோகிறது. வேலைவாய்ப்புத்திட்டம், பொதுவிநியோக முறையை எட்ட முடியாத மக்களுக்கு மொபைல்மோன் மூலம் பணத்தை வழங்கலாம். இதனை மத்தியவகை திட்டமாக கொள்ளலாம். இதுதான் எனது யோசனை.
கிராமப்புறங்களுக்கு கூட இப்போது கொரோனா பரவி வருகிறது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது?
தீபாவளி வரும்போது மூன்றாவது அலை ஏற்படும் என நினைக்கிறேன். இந்த நிலை மிக மோசமானதுதான். அரசு மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்து்வதற்கான முயற்சியை முடுக்கவேண்டும். கிராமப் புறங்களில் போடப்பட்டிருக்கும் பொதுமுடக்கத்தை விலக்கவேண்டும். இன்னும் பொருளாதார வளர்ச்சி பெற சில மாதங்கள் நம்மிடம் இருக்கிறது. மக்களை சரியாக சோதித்து சிகிச்சை வழங்கவேண்டும். இதற்கு ஏராளமான தகவல்களை சேகரித்து மக்களைக் கண்காணிக்கவேண்டும். அப்போதுதான் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
சுரோஜித் குப்தா
கருத்துகள்
கருத்துரையிடுக