அதிக மசோதாக்கள் தாக்கலாகியுள்ளது எனது சாதனை! - ஒம் பிர்லா மக்களவை சபாநாயகர்
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
நேற்றோடு நீங்கள் மக்களவை சபாநாயகராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்கள் அனுபவத்தை பகிருங்களேன்.
எனது அனுபவம் நன்றாக இருக்கிறது. அவையில் பிரதமர், உறுப்பினர்கள் என அனைவருமே ஜனநாயகத்தின் நம்பிக்கை வைத்து அதனை காப்பாற்றவே செயல்பட்டு வருகிறார்கள். அவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பேசுவதற்கு வா்ய்ப்பு கொடுக்க முயன்று வருகிறேன்.
இரண்டு ஆண்டுகளில் 107 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளில் 90 சதவீதம் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது. முதலில் இதன் அளவு 40 சதவீதமாக இருந்தது. உறுப்பினர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது. இது மக்களவையின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது.
புதிய உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இதுதொடர்பான உங்கள் அனுபவம் என்ன?
முதல் கூட்டத்தொடர் 27 நாட்கள் நடைபெற்றது. இதில் 35 மசோதாக்கள் நிறைவேறின. இதுதான் உற்பத்தி திறனுக்கு அடையாளம். ஒருநாளில் ஜீரோ ஹவரில் 161 பேர் பேசினார்கள். இது முக்கியமான சாதனையாக நினைக்கிறேன்.
கோவிட் பிரச்னையைப் பற்றி பேசுவதற்கு தனி நேரம் வேண்டுமென கருத்துகள் கூறப்படுகிறது இதில் உங்கள் கருத்து என்ன?
கடந்த முறை இதுபற்றி பேசப்பட்டது. ஆலோசனை கமிட்டிதான் என்ன பேசவேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்கிறது. இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு முதல் இரண்டு கூட்டத்தொடர் அமைதியாக நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த இரு கூட்டங்களிலும் எதிர்கட்சிகள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டன. இதுபோல எதிர்காலத்திலும் பிரச்னைகள் நடக்குமா?
அவையை அமைதியான முறையில் நடத்துவது எனது பொறுப்பு. அதை நிறைவேற்றவே நான் உழைக்கிறேன். ஆனால் சில அரசியல் கட்சிகள் அதை விரும்புவதில்லை. அவர்களின் கூச்சலால் அவையின் நேரம் தேவையில்லாமல் வீணாகிறது. எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை விவாதிப்பதுதானே ஜனநாயக முறை. ஆனால் சில மனிதர்களின் மோசமான நடத்தையால் நல்ல எண்ணங்களும் நோக்கங்களும் வீணாகின்றன.
கடந்த முறை சில கட்சி தலைவர்கள் பேசுவதற்கு தேவையான நேரம் அளிக்கப்படவில்லை என்று புகார் கூறினார்களே?
அவையில் அனைவருக்கும் விதிப்படி பேசுவதற்கு நேரம் ஒதுக்குகிறோம். அவர்கள் இந்த பிரச்னையை வெளியில் பேசினால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவர்கள் என்னிடம் புகார் கொடுத்தால் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பேசுவதற்கு நேரம் அளிப்பேன்.
டைம்ஸ் ஆப் இந்தியா
அகிலேஷ் சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக