நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற ஒரு டோஸ் தடுப்பூசி போதும்!

 

 

 

 

 

 

 

 

 

Can your employer require you to get the COVID-19 vaccine?

 

 

ஒரு டோஸ் போதும்!


இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான அமைப்பின் தலைவர் கேட் பிங்காம், ஒரு முறை தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டால் போதும். அதுவே பெருந்தொற்றிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்று கூறினார். மருத்துவர் பால் ஸ்டோபில்ஸ் ஒருமுறை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியை அவசியமானது என்று கூறியதோடு, இரண்டாவது பூஸ்டர் ஷாட்டை போட்டுக்கொள்வது கொரோனாவிலிருந்து ஒருவரைக் காக்கும் என்று கூறினார்.


இருமுறை தடுப்பூசியை போடவேண்டுமென்று கூறிவந்த இந்தியா, இப்போது தடுப்பூசி இல்லாத நெருக்கடியில் ஒரு டோஸ் மட்டும்தான் மக்களுக்கு வழங்கி வருகிறது. மருத்துவமனைகளிலும் கூட இரண்டாவது டோஸை இல்லையென்று சொல்லிவரும் நிலை உள்ளது. ட்விட்டரில் இதுதொடர்பாக விவாதங்கள் நடந்தன. இறுதியாக நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் விகே பால் கோவிஷீல்டு மருந்து மக்களுக்கு இரண்டு டோஸாக வழங்கப்படுவது உறுதி. அதில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்.


இங்கிலாந்தில் முதலில் தடுப்பூசியை ஒருமுறை மட்டுமே வழங்க ஏற்பாடானது. அப்போதைய நிலையில் ஏராளமான உயிர்கள் பறிபோய்கொண்டிருந்தன. ஆனால் பிறகு நிலைமை மாறியது. பொதுமுடக்கம் அமலானதால் தடுப்பூசி போடுவதற்கான நேரம் கிடைத்தது. இரண்டு டோஸ்கள் போடுவது ஒரு டோஸ் போடுவதை விட அதிக பயன்களை தருகிறது என தகவல்களின் அடிப்படையில் தெரிந்துகொண்டோம்.


ஜனவரியில் கிடைத்த தகவல்கள்படி ஒருமுறை தடுப்பூசி போட்டவர்களுக்கு நோயிலிருந்து தப்பிப்பவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிய வந்துள்ளது. இதில் இன்னொரு வகையும் உள்ளது எமஆர்என்ஏ வகை தடுப்பூசிகளையும் கோவிஷீல்டு தடுப்பூசியுடன் செலுத்திக்கொள்ளலாம் என்பதே. இதன்மூலம் வைரல் வெக்டார் தடுப்பூசிகள் இணைந்து செயல்படும் என சிலர் கூறுகிறார்கள். இப்படி தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் மூன்று மாதங்களுக்கு மருத்துவமனைக்கு செல்லாமல் தாக்குப்பிடிக்கலாம்.


ஜனவரி மாதம் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் மருந்து அதிவேகமாக தொற்றுநோய் பரவும் நாடுகளில் மக்களைக் காக்க பயன்படும் என்று கூறப்பட்டது. இதனை ஸ்புட்னிக் லைட் என்று கூறினர். அடுத்து ஸ்புட்னிக் 5 உருவாக்கப்பட்ட பிறகு இதனை இரண்டு டோஸ்கள் பயன்படுத்துமாறு கோரினர். ஜான்சன் அண்ட் ஜான்ச்ன் நிறுவனம் கூட இப்போது இரண்டு டோஸ் மருந்துகளை பரிந்துரைத்து வருகின்றனர். இவர்கள் முன்னர் ஒரு டோஸ் மருந்தை அனைவருக்கும் வலியுறுத்தினர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. ஒருமுறையேனும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் உங்களிடமிருந்து பிறருக்கு நோய்த்தொற்று பரவாது. அது வேறு வகையில் மாற்றமும் பெறாது என்கின்றனர்.



உலகசுகாதார நிறுவனம் தடுப்பூசி பற்றி கூறிய கருத்து முக்கியமானது எந்த வகை தடுப்பூசியாக இருந்தாலும் அதன் திறன் 50 சதவீத த்தி்ற்கு கூடுதலாக இருக்கவேண்டும். அதுவே நோயைத் தடுக்க போதுமானது என்று கூறியது. ஆனால் கோவிஷீல்டின் திறன் 33 சதவீதமாக உள்ளது என இ்ங்கிலாந்தின் தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில் இப்போது திறனுடன் உள்ள டெல்டா எனும் வைரஸை எதிர்க்கும் திறன் கோவிஷீல்டிற்கு குறைவாகவே உள்ளது.


ஒருமுறை தடுப்பூசியை செலுத்துவது மக்ககளை மருத்துவமனைக்கு சென்று சேர்வதை தடுக்கும். தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்தால், நோயின் அறிகுறிகள் மக்களுக்கு அதிகமாக வெளித்தெரியும். மருத்துவமனையில் சேர்ந்த சிகிச்சை பெறும் மக்கள் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்களுக்கு நோய்பாதிப்பு குறைவாகவே ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

toi


கருத்துகள்