வறுமை வளர்ந்து பாகுபாட்டை உருவாக்கிய வரலாறு! - புத்தக அறிமுகம்
புத்தகம் புதுசு!
தி வார் ஆப் தி புவர்
எரிக் வுயலார்ட்
மார்க் பொலிசோட்டி
பான் மெக்மில்லன்
வரலாற்றில வறுமையும், பாகுபாடும், பணக்கார ர், ஏழை இடைவெளியும் எப்படி தோன்றியது எனபதை ஆசிரியர் விளக்கியுள்ளார். இதே எழுத்தாளரின் தி ஆர்டர் ஆப் தி டே என்ற நூல் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இந்த நூல் வரலாறு எழுதப்பட்ட பின்னணியை ஆராய்கிறது.
ஆந்த்ரோவிஷன்
கிலியன் டெட
பெங்குவின்
வாங்கும் பழக்கம் மக்களிடையே ஏற்படுத்துகிற விளைவு, பல்வேறு கலாசாரம் சார்ந்த பண்பு, தொழில்துறை கார்பன் வெளியீடு குறைந்த வணிக மாடல்களுக்கு மாறவேண்டிய அவசியம் பற்றி இந்த நூலில் கூறப்படுகிறது.
வொய் வீ நீல், ஹவ் வீ ரைஸ்
மைக்கேல் ஹோல்டிங்
சைமன் அ்ண்ட் ஸ்சஸ்டர்
இனவெறியால் பாதிக்கப்பட்ட வீரரின் கதை, இனவெறியை எதிர்க்கு்ம் அமைப்புகளின் போராட்டம். விளையாட்டு வீரர்களின் போராட்டமான வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக இந்த நூல் விளக்குகிறது.
தி ஹார்ட்பீட் ஆப் ட்ரீஸ்
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஆதிகாலத் தொடர்பை அறிவியல் துணைகொண்டு நிரூபிக்கும் நூல் இது. இயற்கை மீது மனிதர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், வெப்பம் அதிகரிப்பது, காடுகள் அழிப்பு எப்படி இயற்கை மனிதர்கள் உறவில் பாதிப்பை ஏற்படுகிறது என்பதை சுவாரசியமாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.
கீப்பிங் இன் டச்
அஞ்சலி ஜோசப்
கான்டெக்ஸ்ட்
இரண்டு பேருக்கு இடையில் உள்ள காதல்தான் நாவல். கேடகி காதல் செய்ய தயார்தான். ஆனால் அதுவே பொறுப்பு என்றால் அதிலிருந்து விலகி ஓடுவாள். இதுபோல வேத் , தனியாக வாழ்ந்து மகிழ்ச்சி கொண்டவன். இவர்கள் இருவரும் சந்தித்து பழகுகிறார்கள். தொலைவில் இருந்தாலும் உறவில் இருக்கிறார்கள். இருவரின் பழக்க வழக்கம் எப்படி அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்பதுதான் சுவாரசியமான பகுதி
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக