காதலும் குற்றவுணர்ச்சியுமாக அலைக்கழிக்கப்படுபவனின் வாழ்க்கை! - பாடிகார்டு - கொரிய திரைப்படம்
பாடிகார்டு
கொரிய திரைப்படம்
கொரிய நிறுவனம் ஒன்றை கேங்ஸ்டர் ஒருவர் கைப்பற்ற நினைக்கிறார். இதற்காக அந்த குழுமத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணையும் கொல்ல நினைக்கிறார். அவர் தப்பித்து ஓட அவருக்கு பெயர்தெரியாத இளைஞ ர் அடைக்கலம் கொடுக்கிறார். அவர் உண்மையில் யார், அந்த பெண்ணை கேங்ஸ்டர் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் நண்பர்களின் உதவியுட் வாழும் இளைஞர்தான் நாயகன். இவர் பாடிகார்டாக முதலில் வேலை செய்தவர்தான்.ஆனால் இறந்தகால சம்பவங்களால் மனம் வெறுத்து வேலையிலிருந்து விலகியவர், மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அந்த பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டு கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார். பழைய விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்துவது போல மீண்டும் ஒரு பெண் அவரை நோக்கி ஓடி வருகிறார். அவரைக் கொல்ல இருவர் துரத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்றுகிறார். அந்தப்பெண் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வசதியானவளாக இருந்தாலும் காலில் செருப்பு கூட இல்லை.
தான் பாதுகாப்பாக சில நாட்கள் தங்கவேண்டுமென கூறியதால் அவனுடைய வீட்டில் தங்க இடமளிக்கிறான். தான் யார் என்பதையும், துரத்தி வந்தவர்கள் யார் ன்பதையும் அவளாகவே கூறுகிறாள். தங்குவதற்கும் சாப்பிடுவதற்குமாக தனது தந்தை கொடுத்த வாட்சை கொடுத்தாலும் இளைஞர் வாங்குவதில்லை. இது அவளை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கிடையே அவளை தேடி அவனது வீட்டுக்கு ஆட்கள் வந்துவிட என்னவானது நிலைமை என்பதுதான் ஒன்றரை மணி நேர திரைப்படத்தின் இறுதிக்காட்சி.
காதலும் காதலைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத குற்றவுணர்ச்சியும்தான் படத்தின் முக்கியமான புள்ளி. படத்தின் இறுதியில் நிறுவனத் தலைவர், தன்னைக் காப்பாற்றிய இளைஞரை தனது பாடிகார்டாக அமர்த்திக்கொண்டு புன்னகையுடன் நடப்பதோடு படம் முடிகிறது. உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் இறுதியில் பதிலாக கிடைக்கிறது.
சண்டைக்காட்சிகளை இயல்பாக எ்டுத்திருக்கிறார்கள். இதனால் மென்மையான உணர்வுகளை சொல்லும் இடங்களை விட சண்டைகளே முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. இளைஞரின் தோழி, அவளின் பேசிக்கொண்டே இருக்கும் தம்பி முக்கியமான பாத்திரங்கள்.
காதலுக்கு பாதுகாப்பு
கோமாளிமேடை டீம்
https://mydramalist.com/58937-bodyguard
கருத்துகள்
கருத்துரையிடுக