வன்முறையையும் பாலியல் வல்லுறவையும் இணைக்கும் புள்ளி ஆபாசப் படங்களே! - டெட் பண்டி சொன்னது உண்மையா?

 

 

 

 

 

 

deviantart

 

 

 

 

 

 

ஆபாசப்படங்கள்


ஒருவர் கொலைகாரர் என்றால் அவர் கைதான உடனே அவரது அறை சோதனையிடப்படும். அங்கிருந்து வக்கிரமான பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியே வரும். ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தி செய்தி தொகுப்பு வெளியிடுவார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் நடைபெற்று வருகிறது. இப்படி வக்கிரமான ஆபாசப்படங்களே பெண்களைக் கொல்லுவதற்கான ஊக்கம் தந்தது என நாடெங்கும் பேசப்படும்.


நாட்டிலுள்ள பெரும்பாலானோர்கள் ஆபாசப்படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இதன் அர்த்தம், அவர்கள் கொலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதல்ல. உடலுறவுக்கான விழைவு என்பது இயற்கையானது. இதனை பலரும் ஒழுக்க விதிகளுக்குள் ஒன்றாக சேர்த்து குழப்பிக்கொள்வதால் அவை உளவியல் குறைபாடுகளாக திரிந்துவிடுகின்றன. சாதாரணமாக உடலுறவு சார்ந்த விருப்பங்களும், தொடர் கொலைகார ர்களும், சைக்கோகொலைகாரர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இரண்டாவது பிரிவினரின் இச்சையில் அதிக வன்முறையும் வலியும் நிரம்பியிருக்கும்.


1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலைகாரரான டெட் பண்டி, ஆபாசப்படங்கள் பற்றிய தனது நேர்காணலை வெளியிட்டார். இதுவே இன்று வரைக்கும் குற்றங்களுக்கு ஆபாசப்படங்கள் முக்கியமான காரணம் என்று கூறப்பட காரணமாக உள்ளது. அவர் உளவியல் மருத்துவரும், ஆபாசப்படங்களுக்கு எதிராக செயல்பட்டவருமான மருத்துவர் ஜேம்ஸ் டாப்சனிடம் பேசியதன் சுருக்கமான வடிவம்.


‘’’பாலியல் சார்ந்த வன்முறை, வன்முறை எண்ணங்கள் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து வலிமையாக்குவது ஆபாசப்படங்கள்தான். இவை முதலில் கடைகளில் விற்கப்படும் இதழ்களி்ல தொடங்குகின்றன. இவை மனதிற்குள் மெல்ல வன்முறையைத் தூண்டும் தன்மையை செய்கின்றன. முதலில் இதழ்களில் தொடங்கும் ஆபாசப்படங்களை பார்க்கும் முயற்சி மெல்ல ஆபாசப்படங்களை வீடியோவாக பார்ப்பதில் கொண்டு சென்று முடிக்கிறது. இது, அதோடு நிற்காது. பிறகுதான் நேரடியாக பெண்களை வல்லுறவு செய்வதற்கான ஊக்குவித்தலும் மனதில் தொடங்குகிறது. நான் செய்த குற்றங்களுக்கான பொறுப்பை முழுக்க ஆபாசப்படங்களின் மீது போட விரும்பவில்லை. பெற்றோர தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க வேண்டும். அ வர்கள் தங்கள் வீடுகளுக்குள் இத்தகைய இதழ்களை, வீடியோக்களை அனுமதிக்க கூடாது’ என்று பேசினார்.


லாபம்


டெட் பண்டி, வேய்ன் கேசி, ரிச்சர்ட் ராமிரெஸ் ஆகிய கொலைகாரர்களைப் பொறுத்தவரை உடலுறவுக்கான உந்துதல்களில் பெண்களைப் பிடித்து கொன்றவர்கள், பெரும்பாலான கொலைகாரர்கள் இப்படிப்பட்ட பிரிவுகளில் வருவார்கள். இதில் பணத்தை கொள்ளையடிப்பதை முக்கியமாக கொண்ட கொலைகாரர்களும் உண்டு. இதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். மருத்துவர் ஹெச்.ஹெச். ஹோல்ம்ஸ் என்பவர் தான் செய்த மருத்துவக் கொலைகளுக்காக டார்ச்சர் டாக்டர் என்று அழைக்கப்படுகிறார். இவர் காப்பீட்டு நிறுவனங்களிடம் பணம் பெற ஏராளமானவர்களை கொன்றிருக்கிறார். பெரும்பாலான நோயாளிகள் பெண்கள். தனது சுயசரிதையில் மனித உடல்கள் என்பவை பொருட்கள் அதைத்தாண்டி அதில் ஒன்றுமில்லை என்று எழுதியிருக்கிறார். தனது பேராசைக்கு தேவையான உடல்கள் கிடைக்காதபோது அதனை மருத்துவரே உருவாக்கியிருக்கிறார் என்பது அவரது உளவியல் தன்மையை பலருக்கும் விளக்கும். நோயாளிகளை மர்டர் காஸ்டில் எனும அறையில் அடைத்து வைக்கும் மருத்துவர், அவர்கள் சித்திரவதைப்பட்டு இறப்பதை சிறு துளை வழியாக வேடிக்கை பார்த்து ரசிப்பாராம். ஜே்ன் டோனனுக்கு கூட நோயாளிகளிடம் பணத்தை பிடுங்கும் பழக்கம் இருந்தது. பிறகு தனது டெக்னிக்படி விஷத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் இறப்பதை படுக்கையல் ஏறி உட்கார்ந்து நிதானமாக ரசிப்பது பிடிக்கும். இப்படி பணத்திற்காக கொலை செய்வர்களில் சைக்கோக்கள் மிகச்சிலரே உண்டு. பெரும்பாலான ஆட்கள் பணம் வந்தால் போதும் என வேகமாக கொலைகளை செய்துவிட்டு அதை மறைப்பதற்கான முஸ்தீபுகளில் இருப்பார்கள். அவர்களுக்கு ஒருவரை சித்திரவதை செய்து, உடல் பாகங்களை வெட்டி வீசுவது, தின்பது ஆகியவற்றில் பெரும்பாலும் ஆர்வம இருக்காது. பணத்திற்காக கொலை செய்பவர்களி்ல ஆண் மற்றும் பெண்கள் உண்டு. இவர்கள் ப்ளூ பியர்டு, பிளாக் விடோஸ் என்று அழைக்கின்றனர். இப்போது முக்கியமான கொலைகாரர் ஒருவரைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்


ஜான் ஜார்ஜ் ஹெய்


இங்கிலாந்தில் ஜான் 1909இல் பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் தீவிரமான மதப்பாற்றாளர்களாக இருந்தனர். மது, புகையிலை, சூதாட்டம், சினிமா, நாடகம், நாவல்களை படிப்பது என அனைத்தையும் ஒதுக்கினர். பிறகு வேறு என்னதான் செய்வார்கள்? பைத்தியம் பிடித்தது போல இறைவனைக் கும்பிடுவார்கள். பந்தயக்கார்கள், ருசியான நல்ல உணவு, விலைமதிப்பான உணவுகள் என ஏகத்துக்கும் செலவு செய்து வாழ்ந்தவர் ஜான். பிற மனிதர்களோடு பழகுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் புத்திசாலி, நல்ல பழக்கவழக்கங்களை கொண்டவர், கவர்ச்சியானவர் என்று இவரை சிறை அதிகாரிகள் கூட புகழ்ந்து பேசுமளவு இருந்தவர்.


பள்ளிப்படிப்பை முடித்தவர் அரசு அலுவலக கணக்காளர், காப்பீடு விற்பனையாளர், பொறியியாளருக்கு உதவியாளர் என பல்வேறு வேலைகளை செய்தார். இதில் கற்றுக்கொண்ட கலிகிராபியை தான் செய்த கொலைகளுக்கு மிகச்சிறப்பாக பயன்படுத்தினார். இருபத்து நான்கு வயதில் ஜானுக்கு பெட்டி என்ற பெண்ணுடன் திருமணமானது. நான்கு மாதங்களிலேயே மோசடி வழக்கில் ஜான் சிக்க, ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம விதிக்கப்பட்டது. அப்போது கர்ப்பிணியாக இருந்த பெட்டி தனது குழந்தையை இன்னொருவரிடம் வளர்க்க கொடுத்துவிட்டு திருமண உறவை முறித்துக்கொண்டார். ஜான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் பெட்டியை ஒருமுறைதான் சந்தித்தார். அதற்குப்பிறகு இருவரும் சந்திக்கவேயில்லை. ஜான் அதற்குப்பிறகு திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது புத்திக்கும், அழகுக்கும் பெண்களை கவர்வது பெரிய விஷயமே இல்லை. ஆனால் ஜான் தனது திறமையை கொலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தது, அவரது வாழ்க்கையை மோசமாக்கிவிட்டது.


தனது குடும்ப வணிகமான லாண்ட்ரிக்கடையை பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு லண்டனுக்கு சென்றார். அங்கு பின்பால் வணிகம் செய்துவந்த வில்லியம் என்பவரை சந்தித்து அவருடன் ஒராண்டு வேலை செய்தார். பிறகு பங்குச்சந்தை நிறுவனம் தொடங்கி ஊழல் செய்து அநியாயமாக மாட்டிக்கொண்டார். இதற்கு கிடைத்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை சட்டம் தொடர்பான ஏராளமான நூல்களைப் படிக்க பயன்படுத்திக்கொண்டார். குற்றங்களை எப்படி துல்லியமாக செய்து தப்பிப்பது என்பதை இங்குதான் தெரிந்துகொண்டார். கொலைகளை செய்தால் கூட உடலை மறைத்துவிட்டால் அக்குற்றத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்பதை அவராகவே கற்றுக்கொண்டார். இதனை தான் கொலை செய்யும்போது பயன்படுத்திக்கொண்டார்.


சிறையிலிருந்து வெளியே வந்தவர் மீண்டும் ஒரு பெண்ணிடம் பணத்தை மோசடி செய்து மாட்டிக்கொண்டார். அப்போதிலிருந்து சல்ப்யூரிக் அமிலத்தை வாங்கி அதில் பிணங்களை கரைக்க முடியுமா என்பதை யோசிக்கத் தொடங்கினார். 1943இல் சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு 34 வயதாகியிருந்தது. புத்தக காப்பாளராக ஓராண்டு அமைதியாக வேலை செய்தவர் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டார். பிறகு லண்டனுக்கு வந்தவர் தரைதளம் கொண்ட இடத்தை வாங்கினார். பிறரிடம் பொறியாளராக தன்னைக் காட்டிக்கொண்டார்.


1944ஆம் ஆண்டு ஜானுக்கு லண்டனில் வேலை கொடுத்த வில்லியமை பப் ஒன்றில் சந்தித்தார். ஜான். வில்லியம் ஜானுடன் நட்பை புதுப்பிக்க நினைத்தார். ஆனால் ஜானைப் பொறுத்தவரை அவருக்கு வில்லியமின் சொத்துக்கள் மட்டுமே கவர்ச்சியாக இருந்தன. அவர் இதற்கெனவே அமைக்கப்பட்ட தரைத்தளத்திற்கு நண்பர் வில்லியமை கூட்டிச்சென்றார். பேசிக்கொண்டே நண்பர் அசந்த நேரத்தி இரும்பு பைப்பை எடுத்து மண்டையில் அடித்தார்.


வில்லியம் மயங்கி சரிய அவரை பேரல்களில் வைத்திருந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் தூக்கிப்போட்டார்.முதலிலேயே எலிகளை வைத்து அமிலத்தில் கரைத்து சோதித்திருந்த காரணத்தால் வில்லியமின் உடலை சில நாட்களில் கரைத்துவிட்டு அமிலத்தை சாக்கடையில் கொட்டிவிட்டார். பிறகு போலியான சான்றிதழ்களை உருவாக்கி வில்லியமின் சொத்துக்களை ஜான் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதைக் கேள்விப்பட்ட வில்லியமின் பெற்றோர்கள்

ஜானை சந்தித்தனர். எங்கே அதே தரைதளத்தில்தான். அவர்களின் உடல்களும் அமிலத்தில் ஊறத்தொடங்கின. பிறகு ஒரு தம்பதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உடலை அமிலத்தில் கரைத்தார். கொன்றவர்களது எஸ்டேட்டை தனது பெயரில் எழுதிக்கொண்டார். திருமதி ஒலிவியா என விதவைப் பெண்ணைக் கொன்றார். அவரது தோழிகள் அவரைக் காணோம் என்று புகார் செய்ய காவல்துறை ஜானின் இடத்திற்கு வந்தது. அங்கு ஒலிவியாவின் நகைகள் கிடைக்க, அவர் மேல் கொலைகாரர் என குற்றம்சாட்டினர். ஆனால் ஜானைப் பொறுத்தவரை இறந்தவர்களது உடல் கிடைக்காமல் எப்படி என்னை குற்றம் சொல்லுவீர்கள் என வம்புக்கு இழுத்தார்.


இதனால் காவல்துறை அவரது வீட்டில் இருந்து மனித கொழுப்பு, எலும்புகள், கால் எலும்பு, இறந்தவர்களின் மிச்சங்களை சேகரித்து ஜானின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நியாயம் சேர்த்தனர். தனக்கு இரவில் வரும் கனவுகள் காரணமாகவே பல்வேறு மனிதர்களை கொன்றேன் என்று வினோத கதையை காவல்துறையில் ஜான் சொன்னார். இறந்தவர்களின் இதயப்பகுதியில் கத்தியால் கீறி ரத்தத்தை டம்ளரில் பிடித்து குடித்ததாகவும் கூறினார். நீதிமன்றத்தில் இவர் கூறியது ஏதும் எடுபடவில்லை. பேராசையில் இப்படி செய்தார் என்று சொல்லி தூக்குதண்டனை விதிக்கப்பட்டு 1949ஆம் ஆண்டு ஆகஸ்டில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.


பிரபலம்


இன்று உலகம் முழுக்க இருபத்து நான்கு மணிநேரமும் ஓடக்கூடிய டிவிக்கள் உள்ளன. இவற்றில் ஓடும் செய்திகளில் முக்கியமானது குற்றம் தொடர்பானவை. பிராந்திய மொழி சேனல்கள் கூட குற்றச் சம்பவங்களை அவர்களே நடிகர்களை வைத்து ரீமேக் செய்துஎடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். இதற்கு டிவி, நாளிதழ் தொடர்பான மக்களின் அடிப்படையான நம்பிக்கை பின்னணியி் உள்ளது. ஊடகங்கள் யாரை குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டாலும் மக்கள் அதனை நம்பும் அளவுக்கு சூழல் இருந்தது. தற்போது அந்த நம்பிக்கையை சமூக வலைத்தளங்கள் பெற்றுவருகின்றன.


டிவி சேனல்கள் தங்களுடைய பலத்தை வைத்து குற்றச்சம்பவங்கள் தொடர்பான வெப்சீரிஸ்களை, படங்களை தற்போது தயாரித்து வருகின்றன. மேற்குலகில் குற்றங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல்கள் அதிகம். குற்றங்களைப் பற்றி நாள்தோறும் பேசுவதில் உள்ள ஆபத்து, குற்றவாளி மெல்ல மக்களின் மனதில் நாயகனாக உருப்பெறுவதுதான். இயல்பாகவே லல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் எளிதாக மனதை வசப்படுத்தக்கூடியன. இந்த வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் குற்றங்கள் காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.


ஜேக் தி ரிப்பர் கொலை வழக்கு சமயங்களில் டேப்லாய்டு நாளிதழ்கள் கொலைகளைப் பற்றி சுவாரசியமாக எழுதி தள்ளி மக்களை பீதிக்குள்ளாக்கின. பிறகு டிவி பிரபலமான பிறகு கொலை நடந்த சுற்றுவட்டாரத்தில் மக்களின் மனநிலை என்ன, இத்தனை கொலைகள் நடந்தபிறகு அவர்களுக்கு தின்ற சோறு செரிக்கிறதா, கெட்ட கனவுகள் வந்ததா என் நிருபர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். பதிப்பகங்கள் மட்டும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் எப்படி? அவர்களும் கொலை பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் ஏராளமான நூல்களை வேகமாக எழுதி வெளியிட்டு காசு பார்த்தனர். தொழிலதிபர்கள் கொலையாளிகளை நினைவுபடுத்தும் பல்வேறு பொருட்களை வாங்கி வைத்து அருங்காட்சியகம் தொடங்கினர். அந்த நேரத்தில் இதை செய்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதுதான் கான்செப்ட்.


இன்று பிரபலங்களை மெழுகுச்சிலை செய்து சம்பாதிக்கும் மேடம் டூசாட் இந்த வேலையை அன்றே தொடங்கினர். 1835ஆம் ஆண்டு பிரபலமான கொலைகாரர்களை மெழுகுச்சிலையாக வடித்து காசு பார்த்தனர். இப்படி அமைக்கப்பட்ட அறைக்கு பெயர் சேம்பர் ஆப் ஹார ர்ஸ். இத்தனைக்கும் கொலைகளை செய்தவர்கள் டிவி, நாளிதழ், நூல், மெழுகுச்சிலை என இறப்பில்லாத நிலையை பெற்றது ஆச்சரியம்தானே? நீங்கள் புகழ்பெற்றவாராக இருக்க முடியவில்லையென்றால் புகழ் இல்லாதவராக வாழுங்கள் என்று கொலைகார ர் பெர்க்கோவிட்ஸ் சொன்னதாக வாக்கியம் ஒன்றுண்டு. அவரை பல்வேறு நேர்காணல்கள் கண்ட உளவியலாளர்கள், அவர் தன்னை பிறர் கவனிக்கவேண்டும், தன்னை செய்திகள் மையப்படுத்தி இருக்கவேண்டும் என்பதை விரும்பினார் என்று கூறுகின்றனர். சன் ஆப் சாம் என்று அழைக்கப்பட்டவர் பின்னாளில் கடவுளைக் கண்டதாக சொல்லி ஊடகங்களில் சன் ஆப் ஹோப் என்று அழைக்கப்பட்டார். அப்போது ஸ்பைக்லீ, பெர்க்கோவிட்ஸ் செய்த கொலைகளை வைத்து சம்மர் ஆப் சாம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இது அவரது புகழை குலைத்துவிடும் என பயந்தார்.


ராபர்ட் பெஞ்சமின் என்பவர் ஊடகங்களில் புகழ்பெறவே நான்கு கொலைகளை செயத்தாக கூறினார். இவர்களின் கொலை செய்யும் பின்னணிக்கான காரணம் என்றாலும், தங்களது பெயர்கள் அனைவருக்கும் தெரியவேண்டும் என்ற நினைத்தனர். இது ராபர்ட்டுக்கு மட்டும் பொருந்தாது. பல கொலைகாரர்கள் அனைத்து நாளிதழ்களிலும், டிவி சேனல்களிலும் வரவேண்டும் என நினைத்தனர். இன்றுவரை அமெரிக்காவிலுள்ள முக்கியமான ஊடகங்கள் சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய படங்களை, ஆவணப்படங்களை, வெப் தொடர்களை எடுத்து வருகின்றனர்.


நகல் கொலைகாரர்கள்


சிலர் தானாகவே எதையும் செய்யமாட்டார்கள். ஆனால பிறர் செய்தபிறகு அதனை அப்படியே நகல் எடுத்து புகழ்பெறுவார்கள். இதில் அனைத்து துறையினரும் உண்டு. விளையாட்டு என்றால் ஜீ டிவியின் 20 ஓவர் வடிவத்தை எடுத்து ஐசிசி பயன்பெற்றதே அதுபோலத்தான். ஜேக் தி ரிப்பரின் பரம பக்தனாக இருந்தார் பீட்டர் கர்டன். ஜேக் பற்றிய ஏராளமான செய்திகளைப் படித்து தன்னை மனதளவில் தயார்படுத்திக்கொ்ண்டு குருவணக்கம் செய்துவிட்டு களத்தில் ஏராளமான ஆட்களை கொலை செய்தார். ஆல்பர்ட் பிஷ், ஜெர்மனியைச் சேர்ந்த பிரிட்ஸ் ஹார்மனின் ரசிகராக இருந்தார். எப்படி சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த சினிமா நட்சத்திரங்கள், பாப் பாடகர்களை நோட்டு புத்தகங்களில் ஒட்டி வைத்திருப்பார்களோ அப்படி இவரைப் பற்றிய செய்திகளை பிஷ் சேகரித்து வைத்திருந்தார். எதற்கு கொலைகார ர்களை பின்பற்றுகிறார்கள். அவர்களின் வாரிசு என கூறப்படவேண்டுமென நினைக்கிறார்களா என உளவியலாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், இல்லை அவர்கள் மனதில் அப்படி நினைப்பதில்லை. தங்களது கடவுள்களின் வரிசையில் அவர்களும் தொடர் கொலைகார ர்களாக இடம்பெறவேண்டுமென நினைக்கிறார்கள் என்று கூறினர்.


இங்கிலாந்தில் 1993ஆம் ஆண்டு தொடர்கொலைகளை செய்தவர் கோலின் அயர்லாந்து. இவர் போலீசில் தானே போன் செய்து நான்கு கொலைகளை செய்துவிட்டேன். இன்னும் நீங்கள் என்னை ஏன் பிடிக்கவில்லை. அடுத்த கொலையை செய்யப்போகிறேன் என்று கூறிவிட்டு ஐந்தாவது கொலையைச் செய்தார். போலீசாரும் கண்காணிப்பு கேமராவை வைத்து கோலினை கைது செய்தார்கள். ஐந்து கொலைகளை நீதான் செய்தாயா என்றதும் ஆமாம் உடனே ஒப்புக்கொண்டுவிட்டார். என்ன காரணம் என்று கேட்டபோது தொடர் கொலைகார ராக என்பெயர் வெளியே மக்களுக்கு தெரியவேண்டு.ம் இதற்காக நிறைய புத்தகங்களைப் படித்தேன். நான்கு கொலைகளுக்கு மேல் செய்தால்தான் எப்பிஐ தொடர் கொலைகார ர் என்று கூறும் என்று தெரிந்தது என இனிமையான பேசினார். இவர் கொலை செய்த அனைவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். நேராக ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடும் ப ப்பிற்கு சென்று, தேவையான இரையை மடக்கி அவர்களின் வீட்டுக்கே போய் கொலைசெய்துவிட்டு வருவதுதான் கோலினின் பிளான். ஓரினச்சேர்க்கையாளர் மட்டுமே அடையாளம் தெரியாதவர்களை வீட்டுக்குள் விடுவார்கள் என்ற பலவீனத்தை தெரிந்துகொண்டு கொலைகளைச் செய்தார்.


vicent kabo


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்