சீனாவின் காலனி நாடாக மாறும் இந்தியா!
வணிகத்தின் நடைமுறையில் கவர்ச்சிகர வாசகங்களுக்கு இடமில்லை! உலகமயம், தாராளமயம் என கொள்கைகள் மாறிவிட்டன. இந்தக்காலத்தில் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பல பொய்யான சுலோகன்களை ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் அவை நடைமுறையில் பெரிய பயன்களைத் தருவதில்லை. தற்சார்பு என்பதும் அதில் ஒன்று. வெற்று பேச்சுகள், நாட்டை ஆபத்தில் தள்ளும் என்பதை கிடைக்கும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவிற்கு எல்லை ரீதியாக நிறைய பிரச்னைகள் உண்டு. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக எல்லையில் தொல்லை தரும் நாடாக சீனா உள்ளது. எல்லை விவகாரம் தனி, வணிக விவகாரம் தனி என சீன அரசு கூறி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கிய வணிக கூட்டாளிகள் அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, ரஷ்யா நடப்பு ஆண்டில் வணிக அளவு அமெரிக்கா - 118. 4 பில்லியன் டாலர்கள் சீனா - 119.3 பில்லியன் டாலர்கள் அமீரகம் - 84 பில்லியன் டாலர்கள் சௌதி அரேபியா - 66 பில்லியன் டாலர்கள் ரஷ்யா - 43 பில்லியன் டாலர்கள் இந்தியா, 2020ஆம் ஆண்டு தொடங்கி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை கு...