இடுகைகள்

கள்ளச்சாராய தயாரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளச்சாராய தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது? - அரசு மதுபானச்சாலைக்கு நிகரான ஆள்பலம், கட்டமைப்பு!

படம்
            பஞ்சாப்பில் நடந்த கள்ளச்சாராய பலி விவகாரத்தில் பல்வீந்தர் கௌர் என்ற பெண் சிக்கினார் . இவரும் ஒருவகையில் சமூக தொழில்முனைவோர்தான் . ஆம் . இந்த மாநிலத்தில் மட்டும் அரசு மதுபானச்சாலை போன்ற சட்ட விரோத நெட்வொர்க்கை உருவாக்கி இருபது ஆண்டுகளாக தொழிலை நடத்தி வந்திருக்கிறார் . பஞ்சாப் அரசு மதுபானச்சாலை மூலம் வரியெல்லாம் கட்டி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது . கள்ளச்சாராய வியாபாரமும் இதற்கு இணையான வருமானத்தைக் கொண்டுள்ளது . இதற்கென தயாரிப்பு , விநியோகம் , வருமானத்தை பிரித்துக்கொள்வது என அனைத்திலும் அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , கள்ளச்சாராய தயாரிப்புக்குழுவினர் ஒருங்கிணைந்து கையிலுள்ள ஐந்து விரல்களைப்போல இணைந்து வேலை பார்த்து சாதித்து உள்ளனர் . மூன்சைன் , மூச் , பாத்டப் ஜின் , கள்ளச்சாராயம் என பல்வேறு பெயர்கள் பல்வேறு மாநிலங்களில் புழங்குகின்றன . எப்படி தயாரிக்கிறார்கள் ? சிம்பிள் . சர்க்கரை எந்த காய்கறிகள் , பழங்களில் உள்ளதோ அனைத்தையும் நன்றாக இருந்தாலோ , கெட்டுப்போயிருந்தாலோ கவலையே படாமல் சாராயம் தயாரிக்க பயன்படுத்தலாம் . பெரும் நிறுவனங்கள் உணவு தானியங