இடுகைகள்

பட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும