இடுகைகள்

வாஜ்பாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரியான கட்சியை வழிநடத்திச் சென்ற சரியான மனிதர்தான் வாஜ்பாய் - எழுத்தாளர் அபிஷேக் சௌத்ரி

படம்
  வாஜ்பாய் பற்றிய நூல்   வாஜ்பாய் தி அசன்ட் ஆஃப் தி இந்து ரைட் 1924-1977 அபிஷேக் சௌத்ரி பிகாடர் இந்தியா விலை ரூ.899 வாஜ்பாய் பற்றிய புதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில், பழமைவாதம், தாராளவாதம் ஆகிய இருவித கருத்தியல்களைக் கொண்ட காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் பற்றிய பல்வேறு கருத்துகளை விவாதித்திருக்கிறார்கள். காங்கிரசும், சங் பரிவாரும் ஒரே மாதிரியாக இணைந்து கருத்தியல் அளவில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என நூலாசிரியர் அபிஷேக் கூறுகிறார். அதைப்பற்றிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வாசிப்போம். “தவறான கட்சியில் இடம்பெற்ற சரியான மனிதர்” என வாஜ்பாயை கூறுகிறார்களே? அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லை. சரியான கட்சியில் இருந்த   சரியான மனிதர் என்றுதான் அவரைக் கூறுவேன். அதுமட்டுமல்ல, அவர்தான் கட்சியை முன்னெடுத்துச் சென்றார். 1980ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோது தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர் என்ற சுலோகன் பிரபலமாக கூறப்பட்டு வந்தது. அந்த சுலோகன் கூறப்பட காரணம் என்ன? இங்கிலாந்தில் வெளியிடப்படும் எனது நூலின் தலைப்பு தி பிலிவர் தில

அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

படம்
  சீதாராம் யெச்சூரி தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓம் புக்ஸ் 295 சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை.  மை ட்ரூத் 1980 இந்திரா காந்தி விஷன் புக்ஸ் 195 சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல்.  ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001 வாஜ்பாய் பெங்குவின்  299 எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது.  கபிதா பிதான் 2020 மம்தா பா

அரசியலமைப்பு வலியுறுத்தும் உரிமைகள், கடமைகள்!

படம்
அரசியல் அமைப்புச்சட்டம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகள் என்னவென்று அறிவீர்களா? அதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். சர்வாதிகார அரசு என்பது உலகின் பல பாகங்களிலும் ஜனநாயகம், மக்களுக்கு உரிமைகள் என்ற கோஷங்களைப் போட்டபின்னரே சர்வாதிகாரத்தை அமல்படுத்துகின்றன. எவை தம்மை வெல்லச் செய்ய உதவினவோ அதனை பிறருக்கு கிடைக்காமல் செய்ய அனைத்து அரசுகளும் முயன்றுள்ளன. இதனை அரசியலமைப்பு சட்டப்படி செய்தோம் என்பார்கள். அரசியல் அமைப்புச்சட்டம் 51 ஏ படி பதினொரு உரிமைகள், கடைபிடிக்க வேண்டிய விதிகள் கூறப்படுகின்றன. 2002இல் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் 82 ஆவது சட்டத்திருத்தமாக இதில் சில விதிகளில் மாறுதல்கள் செய்யப்பட்டன. தேசிய கீதம், தேசியக்கொடி ஆகியவற்றை அரசியலமைப்புசட்ட விதிப்படி மதிக்க வேண்டும் . நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பெருமை ஆகியவற்றை இந்தியாவின் கீழுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள மக்களும் கடைபிடிக்கவேண்டும். நம் நாடு பல்வேறுபட்ட கலாசாரத்திற்கு புகழ்பெற்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும்படியான செயல்பாடுகளை செய்ய

கார்கில் போர் நினைவு தினம் - 20 ஆம் ஆண்டு

படம்
1999 ஆம் ஆண்டு வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் கார்கில் போர் நடைபெற்றது. பாக்.இராணுவத்தை விரட்டி அடித்து நாட்டைக் காப்பாற்றியது இந்திய இராணுவம் என ஊடகங்கள் அலறின. ஆனால் அரசுக்கு பெருமை என்றாலும் பலியான இராணுவ வீர ர்களின் எண்ணிக்கை கணிசமானது. கார்கில் போர் பற்றிய தகவல் தொகுப்பு இதோ! கார்கிலில் பாக். இராணுவம் பல்வேறு தடைகளையும் அரண்களையும் உருவாக்கியதமு இதன் எண்ணிக்கை 140. இந்திய நிலப்பரப்பில் பாக் இராணுவம் 8 கி.மீ முன்னேறி வந்தது. ஏப்ரல் 1999 அன்று 7 பட்டாலியன்கள் கார்கிலின் வடக்குப்பகுதியில் குவிந்தன. 23 நாட்கள் போரில் பாகிஸ்தான் இராணுவத்தை, இந்தியப்படை அடித்து விரட்டி சாதித்தது. இப்போரில் மேஜர் ராஜேஷ் அதிகாரி, கேப்டன் விவேக் குப்தா, லியோடனன்ட் கர்னல் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் பலியானார்கள். டைகர் ஹில்ஸ் பகுதியில் போர் நடைபெற்றது. இதன் உயரம் 16 ஆயிரம் அடி உயரம். இப்போரில் பாகிஸ்தான் இராணுவம் 772 வீர ர்களையும் 69 அதிகாரிகளையும் பலி கொடுத்தது. முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானியர்கள், நூறு தோட்டாக்களை சுட்டனர். இதில் இந்திய விமானப்படையின் ஒரு விமானம் கூட பாதிக்கப்படவில்லை. 1