வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?
இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...