இடுகைகள்

நல்ல பழக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!

படம்
            குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம் ! குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது . ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது , கோபம் கொள்வது , வருத்தப்படுவது , பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள் . இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான் . ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை ? காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம் . குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும் , கேட்கும் , பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள் . அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள் . குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள் . ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது , கவனம் , உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும் . நினைவுகளை கையாள்வதும் பின்னாளில்