இடுகைகள்

தமிழ்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்னூல் வெளியீடு....

படம்
நூலை வாசிக்க...https://www.amazon.com/dp/B0FX7WC8YV

இரு மின்னூல்கள் வெளியீடு - காணாமல் போவதில்லை புலிகள் - திராவிட திருநாடு

 காணாமல் போவதில்லை புலிகள் (Kaanamal povathillai pulikal): குங்குமம் செய்திக்கட்டுரைகள் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPX27WB7 திராவிட திருநாடு (Dravida thirunadu): தமிழ்நாட்டின் மேம்பாடும் சீர்திருத்தங்களும் (Tamil Edition) Kindle Edition https://www.amazon.in/dp/B0FPR47YW8

தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா

 தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா ஆய்வு நூலின் சுருக்கம் ஆங்கில ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டீன் மேற்சொன்ன பெயரில் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதன் மொழிபெயர்ப்பு தமிழில் கிடைக்கிறது. ந சி கந்தையா எழுதிய நூல், பல்வேறு நூல்களின் சுருக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த நூல்கள் என்ற தெளிவு இல்லை.  நூலின் முன்னுரையில் எட்கர் தர்ஸ்டீன் ஆய்வை பார்ப்பனர்களிடம் கேட்டு எழுதிக்கொண்டார். கள ஆய்வுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இந்த நூலை ந சி கந்தையா கள ஆய்வு செய்து எழுதினாரா என்றால் அதற்கு எந்த பதிலுமில்லை. ஆங்கிலத்தில் எழுதி வைத்ததை அப்படியே தமிழில் சுருக்கமாக 85 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அவ்வளவே மற்றபடி சில இடங்களில் தெளிவுக்கு அடிக்குறிப்பு உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள சாதிகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பட்டப்பெயர்கள், திருமண சடங்குகள் ஏன ஏராளமான விஷயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில சாதிகளைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன. சில சாதிகளுக்கு சொல்ல ஏதுமில்லை என்பது போல சுருக்கமாக உள்ளது. வதந்தி பத்திரிகையில் வர...

தமிழகத்தில் அமைதியாக நடக்கும் பேரழிவு - குழந்தை திருமணங்கள், இளையோர் கர்ப்பிணி பிரச்னை

படம்
         குழந்தை திருமணம், பள்ளிப்பருவ கால கர்ப்பங்கள் - அமைதியாக நேரும் சீரழிவு இந்தியாவில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் ஆயிரக் கணக்கில் நடந்தேறின. பின்னர், அதுபற்றிய பிரச்னைகள் தெரியவந்தபிறகு, அவற்றைத் தடுக்க அரசும் சட்டங்களை இயற்றியது. கல்வி கற்கத் தொடங்கிய மக்களும் மெல்ல மனம் மாறினார்கள். குழந்தை திருமணங்கள் நடப்பது குறைந்தது. குறிப்பாக கல்வி அறிவு, குழந்தை திருமணங்களை பெருமளவு குறைத்தது என்பதே உண்மை. இப்போது, அப்படியான சூழ்நிலை மெல்ல தகர்ந்து, தமிழ்நாடு மெல்ல பின்னோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் உள்ள வருமானம் குறைந்த பின்தங்கிய பகுதிகளில் (கண்ணகி நகர், பெரும்பாக்கம்) குழந்தைத் திருமணங்கள், பள்ளிகால கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. குடும்பநலத்துறை இதுபற்றிய தகவல்களை அறியும்போதே, பள்ளிச்சிறுமிகள் கர்ப்பிணிகளாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு பெரிதாக ஏதும் செய்யமுடிவதில்லை. இருந்தாலும் பள்ளி செல்லும் வயதில் கர்ப்பிணியாவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு செய்ய முயன்று வருகின்றனர். பள்ளி, அரசு மருத்துவமனை வழியாகவே அரசின் குடு...

பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் விஷயங்கள்!

படம்
      பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையில், அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் இருந்து ஏதேனும் பயன்கள் உண்டா என்று பார்ப்போம். வேளாண்மை இத்துறையில் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படவிருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை வைத்து எளிதாக விவசாய கடன்களைப் பெறலாம். 102 வீரிய பயிர் ரகங்கள், காலநிலை மாற்றத்தை தாங்கும் 32 தோட்டப்பயிர் ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை பயிரிடவும் ஒன்றிய அரசு முனைந்துள்ளது. இயற்கை விவசாய பிரசாரமும் இதில் கூடுதலாக இணைந்துள்ளது. இவற்றை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம். சிறுகுறு தொழில்கள் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் கொண்டதாக தமிழ்நாடு உள்ளது. வேலை சார்ந்த ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவிருப்பதால், புதிய பணியாளர்கள் சிறுகுறு தொழில்துறையில் அதிகம் சேரக்கூடும். புதிதாக படித்துவிட்டு தொழில்துறைக்கு வரும் அனுபவமில்லாதவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்குவது சிறுகுறுதொழில்துறை மட்டுமே. அண்மைக்கா...

விடுதலைப்புலிகளை கோரமான கொலையாளிகளாக காட்டும் பிரசாரப் படம்!

படம்
  குற்றப்பத்திரிக்கை இயக்கம் ஆர் கே செல்வமணி ராம்கி , ரகுமான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையும் , அதற்கு காரணமான விடுதலைப்புலிகள் பற்றிய விசாரணையும்தான் கதை . படம் அரசாங்க பிரசாரப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது . அதாவது , படத்தில் ஒரே கோணமே காட்டப்பட்டிருக்கிறது . இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார் . அதற்கான திட்டத்தை எப்படி விடுதலைப்புலிகள் தீட்டினர் , செயல்படுத்தினர் . அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை எப்படி பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறார்கள் . கூடவே , அரசியல் படுகொலையோடு நிற்காமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் கூட கொல்ல நினைக்கும் கொலைவெறி கொண்டவர்களாக சித்திரிக்கிறார்கள் . அங்குதான் மொத்த படத்தின் நோக்கமே வீழ்ந்துபோகிறது . பார்வையாளர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது . படம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்குகளை சந்தித்து வெளியாகியிருப்பதை டைட்டில் கார்டில் காட்டுகிறார்கள் . ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை புகைப்படமாக எடுத்து அதை படத்த...

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மனநிலை குறைபாட்டு சிகிச்சை கட்டணம்- சமாளிக்க முடியாத கட்டண உயர்வு!

படம்
  மனநிலை குறைபாடுகளுக்கான சிகிச்சைக் கட்டணம் உயர்வு – அதிகரிக்கும் பொருளாதார சுமை உடல்ரீதியான நோய்களுக்கு ஏற்படும் செலவுகள், குடும்பத்திற்கு பொருளாதாரச் சுமை களை ஏறபடுத்திய காலம் என்று செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது, மனநிலை குறைபாடுள் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி, ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.   அண்மையில் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறுதியாக அதை சிகிச்சை மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்தார்.   ஆனால் வாரம் ரூ.3 ஆயிரம் செலவு என கட்டணம் உறுதியானது. நல்ல செழிப்பான ஆள் என்றாலும் குடும்பஸ்தரான அவரால் செலவுகளை சமாளித்து செய்ய முடியவில்லை.   சிகிச்சைக்கான செலவுகள் கூடுவதோடு, குடும்பத்திற்கும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவதாக மென்பொருள் பொறியியலாளர் நினைக்கத் தொடங்கிவிட்டார். மேலே கூறியுள்ளது   ஆயிரக்கணக்கான மனநிலை குறைபாடுகளை கொண்டவர்களில் ஒருவரின் கதைதான். ஏராளமானவர்கள் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள். அத...

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!

படம்
           ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது! இந்தியாவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஈட்டித்தரும் வரி வருவாய் அதிகம். மக்கள்நலத்திட்டங்களால் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விவகாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. அண்மையில் ஐசிடிஎஸ் - தமிழ்நாடு அரசு இணைந்து செய்த மருத்துவ ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பாடிமாஸ் இன்டெக்ஸ் என்ற அளவுகோல் மூலம் அங்கன்வாடிகளில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள நகரங்களாக மதுரை - 3,322, திருவண்ணாமலை - 2,369, சேலம் - 2,175, கடலூர் - 2,128, திண்டுக்கல் - 1,917 அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைவாக உள்ள மாநிலங்கள் தூத்துக்குடி, ராணிப்பேட...

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த களத்தில் குதிக்கும் தன்னார்வ அமைப்பு - பால் உத்சவின் பணிகளை அறிவோமா?

படம்
  அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் பால் உத்சவ் அமைப்பு!  2009ஆம் ஆண்டு தொடங்கி, கர்நாடகத்தின் பெங்களூருவில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு, பால் உத்சவ். இந்த அமைப்பு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவர்களுக்கான சுகாதார மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதனை பினு வர்மா மற்றும் ரமேஷ் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி நடத்தி வருகின்றனர். ரமேஷ் பாலசுந்தரம், கர்நாடக அறிவு ஆணையத்தில் முன்னாள் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.  பால் உத்சவ் , அரசு பள்ளிகளுக்காக இரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் திட்டம் ஐஷாலா (ishaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப்பை, எழுது பொருட்கள், காலணிகள், சானிடரி நாப்கின், குடிநீர் பாட்டில்களை வழங்குகிறார்கள். மாணவர்கள் கல்வியை சுமையின்றி கற்க உதவும் திட்டமிது.  பள்ளியில் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் டிவி, இணையம், மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இரண்டாவது திட்டம், சம்பூர்ண ஷாலா (Sampoorna Shaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை ...

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏ...

தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

படம்
  ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.  124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  தேசதுரோகம் என்றால் என்ன? அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது.  வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது.  வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் ச...

போக்சோ சட்டத்திற்கு வயது 10!

படம்
  1 வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது.  2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம்.  நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள்  திருச்சி - 177 சென்னை - 1404 கோவை - 284 சேலம் - 361  மதுரை -440 திருநெல்வேலி - 198  திருப்பூர் - 187 2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43 2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187 2 கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்க...

மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

படம்
  சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு 1 கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர்.  ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர்.  தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்த...

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பசுமைத் திட்டங்கள்!

படம்
  பசுமை கொஞ்சும்  தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசு, அடுத்த பத்து ஆண்டுகளில்  265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பசுமை தமிழ்நாடு திட்டம் என பெயரிட்டுள்ளனர். இந்த வகையில் காடுகளின் பரப்பை  23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு 47 லட்சம் மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கினர்.  மண்ணுக்கான மரங்களை அறிந்து, அதன் மரக்கன்றுகளை நடுவதுதான் இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய காலங்களில் வேகமாக வளரும் மரங்களை அரசு தேர்ந்தெடுத்து வந்தது.  அரசு திட்டங்களை வேகமாக அறிவித்தாலும் இதனை செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. 13,500 ச.கி.மீ. அளவில் 265 கோடி மரக்கன்றுகளை நட்டு அதனை மரங்களாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதில், 4,500 ச.கி.மீ. பரப்பில் அரசு மரக்கன்றுகளை எளிதாக நடமுடியும். மீதியுள்ள பகுதிகள் தனியாருக்கு சொந்தம் என்பதால் திட்டத்தை நிறைவேற்ற அவர்களின் ஒப்புதலும் பங்கேற்பும் தேவை. கூடவே அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும் தேவைப்படும்.  “மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரித்து வ...

சிறந்த முறையில் செயல்படும் மாநிலம் தமிழ்நாடு- இந்தியா டுடே ஆய்வு!

படம்
  தொழில்துறை வளர்ச்சி, கல்வி ஆகியவற்றில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. எனவே, அனைத்து இந்திய மாநிலங்களையும் முந்தி ஆல்ரவுண்டர் மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது.  உள்மாநில உற்பத்தி மதிப்பு 21.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வகையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை இன்னும் மேம்படுத்தி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முயன்று வருகிறார்.  மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக பொருளாதார கௌன்சில் ஒன்றை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். அதில் உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். 28,508  கோடி ரூபாய்க்கான 49 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு 83 ஆயிரம் பேருக்கு கிடைக்கும்.  மாநில அரசு விவசாயத்திற்கு உதவும் வகையில், தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆறுகள், ஏரிகள், குட்டைகள் ஆகியவை மெல்ல மீட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாநிலத்தின் நிதிநிலைமை வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு கூறப்பட்டுவிட்டது. முந்தைய ஆட்சியை குறை சொல...

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின...

வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

படம்
  Photo TNIE லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள்.  நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது.  கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது.  43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை.  45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி.  இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது.  ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவ...

தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

படம்
  கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல் ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.   கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதனை கல்வி வல்லுநர்...

ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்குமான உறவு உடைந்துபோய்விட்டது! - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

படம்
  நேர்காணல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அதனை ரப்பர் ஸ்டாம்ப் கௌன்சில் என்று பேசியிருக்கிறீர்கள். மேலும் மத்திய அரசின் அளவுகடந்த அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில அரசின்  நிதிநிலை மோசமாவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. ஆனால் இந்த உறவு சுமூகமாக இல்லை. காலப்போக்கில் இந்த உறவு  தேய்ந்துபோய், பல்வேறு விரிசல்களால் நிறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நான் கடுமையாக பேசியிருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் இப்போது பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார் என்பதை எடுத்து பாருங்கள்.  ஜிஎஸ்டி வரியை அவசரமாக அமல் செய்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கூட இன்னும் நாம் மீளவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் முறையான படி அமைக்கப்படவில்லை.  திடீரென அதனை அமைத்து விளம்பரம் செய்து வரி சதவீதங்களை அமல் செய்து குழப்பம் ஏற்படுத்தினர். பணமதிப்பு நீக்கத்தை த...

மக்களைக் கண்காணிக்கும் ட்ரோன்கள்!- நவீனமயமாகும் தமிழக காவல்துறை

படம்
  நவீனமயமாகும் தமிழக காவல்துறை! இனி நகரங்களில் இரவில் ட்ரோன்கள் சுற்றி வந்தால் ஏதோ ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் தான் நடத்துகிறார்கள் போல என்று நினைத்துவிடாதீர்கள். தமிழக காவல்துறை ட்ரோன்கள் உட்பட 14 நவீன கருவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். பாரட் அனாப்டி, டிஜேஐ பாண்டம் என்ற ட்ரோன் வகைகளில் பதினான்கு ட்ரோன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. இதனை முக்கியமான நகரங்களிலுள்ள துணை கமிஷனர்களுக்கு வழங்கி பொது இடங்களில் பறக்கவிட்டு கண்காணிக்க உள்ளனர். பொதுமுடக்க காலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட வழக்குகள் ட்ரோன்களின் கண்காணிப்பில் பதிவாகியுள்ளன.  ட்ரோன்களில் அதிகாரிகளுக்கு கட்டளைகளை இட ஸ்பீக்கர் பொருத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுபற்றி ஜிவால், நாங்கள் ஸ்பீக்கரை ட்ரோனில் பொருத்தி உத்தரவுகளை வழங்க நினைத்தோம். ஆனால் அது ட்ரோனில் கூடுதல் எடையாக இருந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்றார்.  பாரட் அனாபி தெர்மல் ட்ரோன் எடை 315 கிராம் 4 கி.மீ. 26  நிமிடங்கள் பறக்கும் 50 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரையில் பறக்கும் இரவிலும் கண்காணிக்க முடியும் ...