வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

 




Photo TNIE




லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள். 

நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது. 

கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது. 

43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை. 

45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி. 

இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது. 

ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டனர். 

ஆதிதிராவிடர் காலனியில் வாழும் 70 சதவீத குழந்தைகளின் ஊர்களில் அரசின் கல்வி தொலைக்காட்சியை பார்க்கும் வசதி கூட கிடையாது. 

ஆதிதிராவிடர் பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கு பாதுகாப்பான சுற்றுச்சுவர் கூட கிடையாது. 


டைம்ஸ் ஆப் இந்தியா

சரண்யா சக்ரபாணி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்