குற்றங்களை எப்படி தடுப்பது?

 







பெண்கள் குற்றங்களை ஆவணப்படுத்துபவராக செயல்பட முடியுமா?


ஏன் முடியாது. செய்யும் வேலை என்னவென்று ஒருவருக்கு தெரிந்துவிட்டால் போதுமானது. இதில் ஆண், பெண் என தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. முதலிலேயே கூறியதுபோல இது குற்றம் தொடர்பான வேலை. இங்கு தனிப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை கவனித்து அடிப்படையான மனிதர்களின் குணங்களை பார்ப்பது முக்கியமானது. 

குற்றவாளிகளுக்கு நெருக்கமாக...

குற்றங்களை ஆவணப்படுத்துபவர் சிறைக்கு சென்று குற்றவாளிகளை நேர்காணல் செய்பவர். இப்படி பலமுறை அவர் குற்றவாளிகளை சந்தித்ததால், அவர் அவர்களின் நண்பராகிவிடுவாரா என்ன? உடனே மயிலை பிரியாணியில் பிரியாணியும், அஸ்மா மெஸ்சில் பத்து ரூபாய் பிரிஞ்சியும் சாப்பிட்டு நெருக்கமாகி பீச்சுக்கு கால்நடையாக நடந்துசெல்வார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. 

இருவரும் சந்திக்கும்போது சிறைக்கம்பிகள் இருப்பது போலவே, நேரில் சந்தித்தாலும் இடைவெளி இருக்கும். குற்றவாளியின் மனநிலை, அவர் அடுத்து என்ன செய்வார், எப்படி யோசிப்பார் என்பது வரையிலான விஷயங்களை குற்றங்களை ஆவணப்படுத்துபவர் கண்டுபிடித்திருப்பார். அவ்வளவுதான். 

கொலைகளை எப்படி தடுப்பது?

நமக்கு நேர்ந்தால்தான் குற்றம். பிறருக்கு நடந்தால் எனக்கென்ன வந்தது என்ற மனப்பான்மை நம் சட்டையில் பிடித்த நெருப்பு. நம்மையும் காயப்படுத்துவதோடு, பிறரையும் பாதிக்கும். எனவே, உங்கள் ஏரியாவில் வல்லுறவு கொலை சார்ந்த சம்பவங்கள் நடந்தால் உடனே காவல்துறை அவசர எண்ணை அழைத்து சொல்லிவிடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எதையும் தவிர்த்து விட்டு ஓட நினைக்காதீர்கள். 

மாணவர்களாக இருந்தாலும் கூட படிப்பதோடு குற்றங்களை தடுக்கும் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவர்களோடு இணைந்து பணிபுரியலாம். சமூகம் பற்றிய புரிந்துணர்வை இந்த விஷயங்கள் இன்னும் ஆழமாக்கும். 






கருத்துகள்