ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சிறந்த ஆப்கள் 2021!






கிளிப்ஸ்

ஆப்பிளில் பயன்படுத்தும் வீடியோ எடிட்டர். இதனைப் பயன்படுத்தி எளிதாக வீடியோக்களை எடுக்கலாம். உங்களை புகைப்படம் எடுத்து, அதன் பின்னணியை ஆக்மெண்ட் ரியாலிட்டி முறையில் கூட மாற்றிக்கொள்ளலாம். 

ஷோமேக்ஸ்

படங்களைப் பார்க்கும் சேவை இது. மொபைலா, டிவியா என முடிவு செய்து பணத்தை சந்தா வாக கட்டிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என எதிலும் படங்களைப் பார்க்கலாம். 

டேஸ்டி

சமையலறையில் பயன்படும் ஆப். இதை வைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தலாம். அதன் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதைக்கூட இந்த ஆப் கூறுகிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிளில் இலவசமாக பயன்படுத்தலாம். 

ஜஸ்ட் வாட்ச்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வீடியோ சேவைகளை வழங்கும் ஆப். பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக வழங்குகிறது. உங்களுக்கு எது தேவையோ அதை பார்க்கலாம். இலவசமான ஆப்தான். 

ரேவ்

டிவி தொடர்களைப் பார்ப்பது, பிறகு அதைப்பற்றி விவாதிப்பது என அனைவருக்கும் பிடித்ததுதானே அதைத்தான் இந்த ஆப்பில் செய்யப்போகிறீர்கள். இதனால் உலகத்திற்கு நாம் பார்த்து ரசித்த விஷயங்களை சொல்லலாம் என நினைத்தவர்கள் ஏமாற மாட்டார்கள். 

லூம் 

ஆப்பிளில் மட்டுமே பயன்படுத்த முடியும் அனிமேஷன் கருவி. ஐடியா கிடைக்க ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்போமே அத்தனை விஷயங்களையும் இந்த ஆப்பில் செய்யலாம். சிறப்பாக அதனை அசைவூட்ட படங்களாக மாற்றலாம். 




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்