தாலிபன்கள் பற்றிய சிறு குறிப்பு!

 




தாலிபன்கள் சிறு குறிப்பு


1866

பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, பல்வேறு மத, இன குழு மக்கள் கசக்கி பிழியப்பட்டு வந்தனர். முஸ்லீம் மக்களை இதிலிருந்து காப்பாற்றவென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. பழமைவாத கொள்கைகளை தனது பின்னணியில் கொண்டு பிற இந்து, கிறிஸ்தவ அமைப்புகளை போல இயங்கியது. உத்தரப்பிரதேசத்தில் டியோபேண்ட் என்ற இடத்தில் அடிப்படைவாத முஸ்லீம் அமைப்பு தொடங்கப்பட்டது. 

1919

தியோபேண்ட் முறையில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களும் பயிற்சி பெறத் தொடங்கினர். இவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

1977

பாகிஸ்தானில் தியோபேண்ட் முறையில் பயிற்சி செய்தவர்கள் இருக்கிறார்கள் என தகவல் அறியப்பட்டது. அதிபர் முகமது ஜியா உல் ஹக் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. 

1980

பாகிஸ்தானிய தியோபண்டி ஆட்கள், இஸ்லாமிய சட்டங்களை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள். இவர்கள்தான் ஆப்கானிய ராணுவம, காஷ்மீரில் தாக்குதல் நடத்துபவர்களாக மாறினர். 

சவுதி அரேபியா, ஷியா மக்கள் அதிகம் உள்ள இரான் நாட்டில் சன்னி மக்களைக் கொண்டு சுவர் ஒன்றை உருவாக்க நினைத்தது. இதற்காக பாகிஸ்தானுக்கு பணம் கொடுத்து அங்கு  தியோபண்டி மதரசாக்களை உருவாக்கினர். இவர்களுக்கு ராணுவப் பயிற்சியும் வழங்கப்பட்டது. 

சவுதி ஷரியா சட்டத்தை தீவிரமாக பின்பற்றுகிறது. அதைத்தான் தாலிபன் ரோல்மாடலாக எடுத்து செயல்படுகிறது. 

பாகிஸ்தான் ராணுவம், தியோபண்டிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை கொடுத்து ஆயுதங்களையும் கொடுத்து அவர்களை போர்ப்படையாக மாற்றியது. 

1996-2001

தாலிபன்கள் ஆப்கனை ஆளத் தொடங்கினர். ஷரியா சட்டப்படி பெண்கள் வீட்டை விட்டு ஆண் துணையில்லாமல் வெளியே வரக்கூடாது. தலைக்கு துணி மறைப்பு போடவேண்டும், தவறுக்கு பொதுஇடத்தில் கல்லால் அடிப்பது, தூக்கிலிடுவது, மாறுகை மாறுகால்  வாங்குவது என நாட்டையை திருப்பி போட்டனர். இசை, இசைக்கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்கான உடை விதிகள் அமலுக்கு வந்தன. 

ஷரியா சட்டம் 

கடவுளோடு மனிதர் கொண்டுள்ள உறவைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கொண்டுள்ளது. பொது, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை ஷரியா சட்டங்கள் கண்காணிக்கின்றன. இவை மேற்கு நாடுகளின் சட்டங்களை விட மாறுபட்டவை. 

ராணுவரீதியாக கிடைக்கும் வருவாய் 1.6 பில்லியன் டாலர்கள். 

ஓபியம் தயாரிப்பு, போதைப்பொருட்கள் கடத்தல், ஆட்கடத்தல், வேளாண்மை, சுரங்கம், நன்கொடை, எல்லையை கடப்பது ஆகியவற்றின் மூலம் தாலிபனுக்கு பணம் கிடைக்கிறது. 

2020ஆம் ஆண்டு தாலிபன்களின் ஓபியம் விற்பனை மூலம் கிடைத்த  வருமானம்  460 மில்லியன் டாலர்கள்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

படம் விகடன்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்