மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

 






மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது. 

ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும். 

சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை. 

இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார். 

குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள். 

மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும். 

பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

எக்ஸ் பைல்






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்