கொலைக்கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கமுண்டா?
கொல்லப்பட்டவர்களின் ஈமச்சடங்கு
பொதுவாக சினிமாவில்தான் இதுபோன்ற கிளிஷே காட்சிகளைப் பார்க்கமுடியும். இப்படியெல்லாம் காட்சிகளை வைத்தால்தான் பார்ப்பவர்களுக்கு நெஞ்சு முழுக்க அமிலம் பரவும், வில்லனை பழிவாங்கும் ஆவல் பெருகும். உண்மையில் மிகச்சிலர் மட்டுமே இறந்தவர்களின் ஈமச்சடங்களுக்கு, கல்லறைகளுக்கு என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று வருகிறார்கள்.
அதுகூட அவர்களின் சந்தோஷத்திற்காகத்தான். நீ என்னால் கொல்லப்பட்டாய், இப்போது குழியில் வைத்து மூடப்போகிறார்கள். ஆனால் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி சந்தோஷப்படும் ஆகிருதிகள் சீரியல் கொலைகாரர்கள்.
மற்றபடி கொலை நடந்த இடம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அவர்களை அங்கு பார்க்க முடியும். திரும்ப அதே இடத்திற்கு வந்து நினைவு நரம்புகளை மீட்டுவது சினிமாவில் வேண்டுமானால் பார்க்க நன்றாக இருக்கும். நிஜத்தில் அப்படி நடக்காது.
கொலைக்கணக்கு
நோட்டு போட்டு அதனை எழுதி வைக்குமளவு சீரியல் கொலைகார ர்கள் நேர்த்தியானவர்கள் கிடையாது. பெரும்பாலான ஐடியாக்களையே சினிமா, நூல்களிலிருந்து காப்பி அடிக்கும் ஆட்கள், தங்களை மாட்டிக்கொள்ள வைக்கும்படி ஆதாரங்களை அவர்களே உருவாக்குவார்களா என்ன?
அவர்கள் செய்த கொலையை கண்டுபிடிக்க போலீஸ் திணறினால், அந்த நாளிதழ் செய்திகளை பின் அடித்து வீட்டில் மாட்டி வைத்துகொண்ட சான்றுகள் கிடைத்துள்ளன. இந்தவகையில் மனதிற்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. அவ்வளவுதான்.
நான்தான் கொலைகாரன்
உங்கள் நண்பர் இப்படி சொன்னால் ஏற்பீர்களா? கலகலன்னு சிரிக்க வைக்கிறியேப்பா என்பீர்கள். அதேதான். இப்படி சீரியல் கொலைகார ர்கள் சிலரிடம் தாங்கள் உண்மையாக செய்த கொலைகளை சொன்னால் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். அதற்கான எந்த பில்டப்பும் இருக்காது. ராமன் ராகவ்வில் நவாசுதீன் சித்திக் போலத்தான். பார்த்தால் எதுவுமே பிரச்னையாக தெரியாது. ஆனால் உள்ளுக்குள் பெரிய பிரச்னை இருக்கும். இரும்பு ராடை எடுத்து தலையில் அடிக்கும்போதுதான் பிரச்னையின் வீரியம் புரியும்.
போலீசார் முக்கி முனகி விசாரித்தும் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க முடியாதபோது, சீரியல் கொலைகார ர்கள் அதனைப் பற்றி தங்கள் நண்பர்களிடம் பேச வாய்ப்புள்ளது. பெரும்பாலும் அவர்களும் வினோத ரச மஞ்சரி கதாபாத்திரம் என்பதால் செய்தி வெளியே கசியாது.
pat brown
கருத்துகள்
கருத்துரையிடுக