குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் மனநிலை!
குற்றங்களை ஆவணப்படுத்துவர் கொல்லப்படுவாரா
ஆங்கில திரைப்படங்களில் இப்படி காட்டுவார்கள். ஆனால் உண்மையில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் நூலகத்தில் இருப்பார். அல்லது காவல் நிலையத்தில் குற்றம் பற்றிய புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார். அதிகபட்சமாக சிறை சென்று சிலரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். பொதுவாக கொலை செய்த இடத்திற்கு சென்று விசாரிப்பது காவல்துறையினரின் வேலை. அங்கு வேறுவழியில்லாமல் செல்லவேண்டிய நிலையில்தான் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் செல்வார்.
தான் திட்டமிட்டபடி கொலைகளை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கும் சீரியல் கொலைகாரர், காவல்துறையின் தொடர்பு கொண்டவரை கொல்வது அரிது. தேவையில்லாமல் எதற்கு மாட்டிக்கொள்ள அவர் நினைக்கவேண்டும்?
குற்றங்களை செய்யும் மனம்
குற்றங்களை ஆவணப்படுத்துபவர், பல்லாண்டுகளாக இதுதொடர்பான ஆய்வில் இருப்பவர். யாராக இருந்தாலும் கொலையைப் பார்த்தவுடனே சற்று மனம் அதிர்ச்சியடையவே செய்யும். ஆனால் பிறருக்கு ஏற்படும் அதிர்ச்சியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதனால் கொலையைப் பார்த்தவுடனே கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது என அவர்கள் யோசிப்பார்கள். தடயங்களை சேகரிப்பார்கள். அதுதான் பிறருக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்.
குற்றவாளி போலவே யோசிப்பது அவர்களை பிடிக்க உதவும். இதனால் குற்றவாளியைப் போலவே காவல்துறையினர் அல்லது குற்றங்களை ஆவணப்படுத்துபவர் ஆகிவிட்டார் என்று எப்படி கூறமுடியும். இதற்கான வாய்ப்புகள் குறைவு.
மனநிலை பாதிப்பு
கண்டிப்பாக ஏற்படும். குற்றங்களையே பார்த்து பழகுபவர்களுக்கு உண்மையான உலகில் மனிதர்களை நம்புவதே கடினமாக வே இருக்கும். இதற்காக மனம் உடைந்து போய்விட அவசியமில்லை. எங்காவது சுற்றுலா சென்று விட்டு வந்தால் போதுமானது. நமக்கு பிடித்த நேர்மறையான நண்பர்களுடன் பேசலாம். எங்காவது பயணிக்கலாம்.
குற்றங்களை ஆவணப்படுத்துபவர், தனது மனநிலை சிலசமயம் சீரியல் கொலைகாரர்களுடன் இணைவதாக தோன்றும்போது உடனே அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வது அவசியம். அப்படி தோன்றும்போதே அந்த சிந்தனைக்கயிறை அறுத்துவிட்டு வேறு விஷயங்களை யோசிக்கவேண்டும். செய்யவேண்டும். பிடிஎஸ்டி என்று சொல்லுவார்கள். போர் முடிந்தபிறகு அல்லது மோசமான சம்பவம் நடந்தபிறகு ஒருவரின் மனநிலை விரக்தியடைந்ததாக அப்செட் ஆனதுபோல இருக்கும். இதனை ஒருவர் உணர்ந்தால் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஆலோசகரை நாடவேண்டும்.
கனவு
பகலில் கொடூரமாக நடத்தப்பட்ட கொலைகளைப் பார்க்கும் ஒருவருக்கு இரவில் எப்படி தூக்கம் வருகிறது என கேள்விகள் வருகின்றன. வேலைகளில் எப்போதும் தனிப்பட்ட உணர்ச்சிகள் வெளிப்படக்கூடாது என கவனமாக ஒருவர் இருக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை. குற்றங்களை ஆவணப்படுத்துபவர் கொலைகளை புகைப்படங்களாக பார்த்தபடி ஆதாரங்களை கண்டுபிடிக்கிறார். அதனை அவர் தனது வேலையாக நினைத்தே செய்கிறார். பல்லாண்டுகளாக இதனை செய்து வருவதால் கனவுகளில் இதுபோன்ற படங்கள் வருவது குறைவாகவே இருக்கும்.
பாட் ப்ரௌன்
கருத்துகள்
கருத்துரையிடுக