நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்
புத்திசாலியான குற்றவாளி
முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.
ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.
இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப் வசதி, சித்திரவதை அறைகள், உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்று அமிலத்தில் கரைத்தார். காவல்துறை கூட இரண்டு சிறுவர்களை தேடி வந்து அவர்களின் உடல்களை பெட்டியில் கண்டுபிடித்துதான் ஹோல்ம்ஸை பிடித்தது.
முரட்டுத்தனமாக கொலைகாரர்
பாபி ஜோ லியோனார்ட் என்பவரை இந்த வகையில் கூறலாம். தனது இளம்பருவ வாழ்க்கையை வர்ஜீனியாவில் சிறைக்கம்பிகளுக்கு பின்னே கழித்தார். இவர், பதிமூன்று வயது சிறுமியை கற்பழித்தார். பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். அவள், நினைவிழந்ததை இறந்துபோய்விட்டாள் என நினைத்துக்கொண்டார். ஆனால் அந்த சிறுமி, உயிர்பிழைத்து நேரடியாக போலீசாரை அழைத்து புகாரை எழுதியே கொடுத்துவிட்டாள். அப்புறம் என்ன, பாபியை பிடித்து நிக்கரை கழற்றி அடித்தார்கள். ஆனால் பாபிக்கு தான் என்ன தப்பு செய்தோம் என்றே தெரியவில்லை. போலீசாரிடமே கேட்டுவிட்டார். அவர்களும் சிறுமியைக் கைகாட்டினார்கள். பாபியைப் பொறுத்தவரை அதை அவர் கடந்துவிட்டார். அவள் இறந்துவிட்டாள் நான்தான் கொன்றேனே என கூறினார்.
இப்படி லொள்ளு பேசினாலும் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் காலம் தள்ளவேண்டியிருந்தது.
உண்மையை ஒப்புக்கொண்ட கொலைகாரர்
சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை தான் நிறைய கொலைகளை செய்தோம் என கற்பூரம் ஏற்றி அணைத்து சத்தியம் செய்தாலும் போலீசார் நம்பினாலும் நீதிபதி நம்பமாட்டார். கொன்றதற்கு ஏதாவது சாட்சி வேண்டுமே?
டென்னிஸ் ராடர் என்பவர் பிடிகே கொலைகாரராக குற்றம்சாட்டப்பட்டார். இவர் தான் செய்த கொலைகளைப் பற்றி நுட்பமாக தகவல்களை நீதிமன்றத்தில் சொன்னார். இதனை டிவியிலும் ஒளிபரப்பினார்கள். சில கொலைகளில் தொடர்பு இருந்தாலும் பெரும்பாலான கொலைகளுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பை முழுமையாக விளக்க முடியவில்லை.
திகில் ஏற்படுத்திய கொலைகாரர்
ஜான் முகமது, லீ மால்வோ, டி.சி. ஸ்னைப்பர்ஸ் ஆகியோரைப் பற்றிய செய்திகள் மக்களை பெரிதும் பயமுறுத்தின. பொதுவாக சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆட்களை மட்டுமே கொல்வார்கள். இதனால் பிறரைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் டிசி ஸ்னைப்பர்ஸ் நேரடியாக நகர மக்களை நோக்கி களமிறங்கினார்கள். எந்த இனம், மதம், ஆண், பெண் என பார்க்காமல் கொலைகளை செய்தார்கள்.
பேருந்து நிறுத்தம், பெட்ரோல் பங்க், கார் நிறுத்தம், பள்ளி என எந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் கொலைகள் நடக்கும் என்ற நிலை இருந்தது. இதனால் எந்த இடமும் பாதுகாப்பான இடமே இல்லை என்று மக்கள் பயந்தனர். பயத்தை மனதில் மறைக்க பாட்டுபாடியபடி பலரும் நடந்தனர். மக்கள் பலரும் வீட்டை விட்டுக்கூட வெளியே வரவில்லை. தி நேஷன் வான்ட்ஸ் டு நோ என டிவியில் அலறுவார்களே அந்தளவு நாட்டையே திகிலில் உறைய வைத்த மனிதர்கள் இவர்கள்.
இதனை வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
விக்டர் காமெஸி
வின்சென்ட் காபோ
கருத்துகள்
கருத்துரையிடுக