ஒலிம்பிக்கில் சாதித்த மாற்றுப்பாலினத்தவர்கள்!

 






ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மொத்தம் 183 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிட்டனர். இது உண்மையில் முக்கியமான சாதனை. முப்பது நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களில் இதில் பங்கேற்றனர். 

சூ பேர்ட் - டயானா டாரசி

பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்கள். அமெரிக்க அணியைச் சேர்ந்த இருவரும் ஐந்தாவது தங்கத்தை ஒலிம்பிக் போட்டியில் வென்றனர். இவர்களின் வெற்றியோடு அணியின் வெற்றியும் 55ஆக கூடியது. இந்த அணி கடைசியாக தோற்றது 1992ஆம் ஆண்டு . 

நெஸ்தி பெடாசியோ

குத்துச்சண்டை வீரர். வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தோற்றபிறகு பத்திரிகையாளர்களிடம் இது மாற்றுப்பாலினத்தவர்களுக்கான போட்டியும் கூடத்தான் என்று சொன்னார். லட்சியம் தப்பாது நெஸ்தி. 

டாம் டாலே 

இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர். தன்னை வெளிப்படையாக தன்பாலினத்தவர் என்று அறிவித்துக்கொண்ட துணிச்சல்கார ர். பத்து மீட்டர் டைவிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். போட்டிகளுக்கு இடையிலேயே தனது பதக்கத்தை வைத்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான பவுச் ஒன்றை ரெடி செய்துவிட்டார். 

குயின்

பெண்களுக்கான சாசர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர். அணியின் மிட்ஃபீல்டராக களம் கண்டு சாதித்தவர். 



டைம் இதழ்

  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்