டிஜிட்டல் கல்வியும், வளாக கல்வியும் மாற்றங்களை தரும்!

 








கலப்புக் கல்வி

தற்போது பல்கலைக்கழகங்கள்  இயங்கத் தொடங்கியுள்ளன. ஆன்லைன் கல்வியுடன் இனி வளாக கல்வியும் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன.  சிறப்பான இணைய இணைப்பு உள்ள இடங்களில் ஆன்லைன் வகுப்புகள்  நல்ல பயனைக் கொடுத்துள்ளன. இதனை குறைவான கட்டணத்தில் உலகில் உள்ள யாருமே அணுக முடியும் என்பது முக்கியமானது. 

சுயமாக கற்றல்

ஆன்லைனில் பாடங்கள் நடைபெற்றாலும் அதனை புரிந்துகொள்ளவும் மேற்கொண்டு பாடங்களிலுள்ள விஷயங்களை அறியவும் இணையம் உதவுகிறது. பாடங்களைப் பற்றி எளிதாக கருத்துக்களை கூறமுடிவது முக்கியமான சாதக அம்சம். 

வெளிநாட்டிலும் கல்வி

ஆன்லைன் கல்வி முறையில் நாட்டின் எல்லைகள் தலையிடமுடியாது. இம்முறையில் வெளிநாட்டு மாணவர்களும் கூட விரும்பினால் கட்டணம் கட்டி பாடங்களை படிக்க முடியும்.  ஆன்லைன் கல்விமுறையை இந்திய கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தினால் எதிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களைப் பெற முடியும். 

வயது வந்தவர்களுக்கான கல்வி

முதலில் கல்வி கற்பது என்பது வயது வரம்பைத் தாண்டி வளரவில்லை. ஆன்லைன் முறை அதனையும் மாற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திறனில் பின்தங்கியுள்ளவர்கள் கூட புதிய ஆன்லைன் படிப்புகளை படிக்க முடியும். இதனால் புதிய வேலைவாய்ப்புகளை எளிதாக பெறலாம். 

உயர்கல்வி உயர..

ஜிஇஆர் எனும் முறைப்படி உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் அளவு 26 சதவீதம்தான் உள்ளது. ஆன்லைன் முறையை நாடெங்கும் விரிவுபடுத்தினால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒன்றிய அரசு கடந்த ஆண்டு பாத்சாலா, ஸ்வயம் எனும் திட்டங்களை அமல்படுத்தியது. இதன்மூலம் நீண்டகால நோக்கில் மாணவர்களுக்கு பயன்கள் கிடைக்கும். 

சி.ராஜ்குமார்

டைம்ஸ் ஆப் இந்தியா





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்