வேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்

 





ஒருவர் மாங்காடு, அல்லது மடிப்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை வருவது என்றால் தினசரி அவர் எத்தனை மணிக்கு கிளம்பவேண்டும்? கணித லாஜிக் கிடையாது என்பதால் மனதில் தோன்றும் விடையை நீங்கள் சொன்னால் போதும். குறைந்தது 30 நிமிடங்களை பயணத்திற்கென ஒதுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் கூடினால் அமைச்சர்கள் நகர்வலம் வந்தால் இன்னும் நேரம் கூடும். 

1994ஆம் ஆண்டு சீசர் மார்செட்டி, பயணம் செய்வதில் மனிதர்களின் குணங்களை பற்றி ஆராய்ந்தார். இதனை மார்செட்டி கான்ஸ்டன்ட் என்று அழைக்கின்றனர். இவரது ஆய்வுப்படி ஒருநாளில் ஒருவர் ஒரு மணிநேரத்தை பயணத்திற்கென ஒதுக்கிவிடுகிறார். இந்த வகையில் அமெரிக்காவில் 30 நிமிடங்கள் என கணக்கு போட்டால், அமெரிக்காவில் 27, இங்கிலாந்தில் 29, கனடாவில் 26 நிமிடங்கள் செலவாகின்றன. 

காலம்தோறும் எப்படி நகரங்கள் மாறுகின்றன, அதற்கேற்ப பயணம் செய்து மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மார்செட்டி ஆய்வு செய்தார். இப்போது அதுதொடர்பான தகவல்களைப் பார்ப்போம். 

1800களில் ரோம், வெனிஸ், பெர்லின் ஆகிய நாடுகளில் மக்கள் தினசரி வேலைக்கு நடந்து சென்ற தூரம் 5 கி.மீ. 

ஒருவரால் முப்பது நிமிடங்களில் நடக்க முடிந்த தோராய தொலைவு 1.6 முதல் 3.2 கி.மீ. வரை 

தினசரி ஒருமணிநேரம் பயணத்தொலைவு கொண்ட நகரங்கள் வளர்ச்சி பெற்ற அளவு 129 சதுர கி.மீ. 

அமெரிக்காவில் அதிக பயணதூரம் பயணிக்கும் ஊழியர்களைக் கொண்டுள்ள எட்டு நிறுவனங்கள், ஹைப்பர் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர விரும்புகின்றன. 

ஜப்பானிலுள்ள யுகாசா நகரம், அங்கு வாழும் மக்களின் பயணத்திற்காக 450 டாலர்களை மானியமாக வழங்குகிறது. அங்கு மக்கள் புல்லட் ரயில்களை பயணத்திற்கு பயன்படுத்துகின்றனர். 

2050ஆம்  ஆண்டில் 70 சதவீத மக்கள் நகரங்களில் வசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

மார்செட்டி கான்ஸ்டன்ட் என்ற நிலைக்கு விதிவிலக்காக இந்தியர்கள் வேலைக்காக 120 நிமிடங்கள் பயணித்து சாதனை செய்துள்ளனர். 


இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் யாகோவ் ஜகாவி என்பவரின் கள ஆய்வு அறிக்கையை முக்கியமானதாக மார்செட்டி கருதினார். அதனைப் பாராட்டினார். அதிலிருந்துதான் உலகம் முழுக்க உள்ள மக்கள் கலாசாரம், மதம், சாதி ஆகியவற்றைக் கடந்து பயணம் செய்வதில் தீவிரமாக ஒரே மாதிரியான ஆர்வத்தை கொண்டிருக்கிறார்கள் என்று தனக்கு தெரிந்தது என வெளிப்படையாகவே கூறினார் . 

quartz










கருத்துகள்