விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!
விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்கலத்திற்காக புதிய வகை பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளது.
நாசா நிறுவனம் விண்வெளிக்கு பல்வேறு விண்கலங்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சோலார் பேனல்கள், பேட்டரிகள், அணு பேட்டரிகள் உதவி வருகின்றன. விண்கலத்தில் உள்ள கேமராக்கள், ரோவர்கள், வழிகாட்டும் வசதிகள் செயல்பட ஆற்றல் தேவை. இதனை சூரிய ஆற்றல் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது.
ஒளி படாத இருளிலும் ஆராய்ச்சிகள் தடைபடாமல் இருக்க பேட்டரிகள் உதவுகின்றன. கோள்களில் இருளான பகுதிகளில் ஆராய்ச்சி தடைபடாமல் இருக்க கொசுவர்த்தி சுருள் போல மெதுவாக ஆற்றல் செலவிடும்படியான பேட்டரிகள் தேவை. இதற்காக நாசா நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி அளித்து வருகிறது.
செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் என இரண்டு ரோவர்களிலும் சோலார்பேனல்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இவை செவ்வாயில் நிலவிய தூசிப்புயல் சூழல்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வியாழன், சனி கோள்களுக்கு அனுப்பப்படவிருக்கும் விண்கலங்களுக்கு எந்த வகையில் ஆற்றல் ஆதாரத்தை இணைப்பது என நாசா யோசிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு கிலோ எடையுள்ள பேட்டரி 600 கிலோவாட் ஆற்றலை வழங்கவேண்டும் எ்ன்பது நாசாவின் எதிர்பார்ப்பு. லித்தியம் அயான் பேட்டரிகள் கிலோவுக்கு 400 கிலோவாட் சக்தியை மட்டுமே தருகின்றன. இவற்றை தொலைதூர கோள்களுக்கு மட்டுமன்றி, நிலவுக்குசெல்லும் விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்கலனிற்கு பயன்படுத்தவும் நாசா திட்டமிட்டு வருகிறது. இதற்கு பைரோலன்ட் எனும் வேதிப்பொருளை பயன்படுத்தவுள்ளது.
உலோகங்கள் (மெக்னீசியம், டைட்டானியம், சிலிகான், மற்றும் ஆக்சிஜன் கொண்ட இப்பொருளை ராணுவத்தில் பயன்படுத்துகிறார்கள். அதிக ஆற்றலைத் தருவதோடு குறைந்த எரிபொருளை செலவழிக்கும் தன்மை கொண்டது. இதற்கு போட்டியாக அணு எரிபொருட்களை கூறலாம். ரேடியோ ஐசோடோப்புகளை காசினி விண்கலத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். இதில் உருவாகும் வெப்பத்தை ஆற்றலாக மாற்றிக்கொள்ளலாம். தொலைதூர திட்டங்களுக்கு புளுட்டோனியத்தை பயன்படுத்தலாம் என நாசா திட்டமிட்டு வருகிறது.
தகவல்
Science illustrated
slowburn mosquito coils to power nasa space batteries
Science illustrated
கருத்துகள்
கருத்துரையிடுக