இடுகைகள்

தவளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - தவளைகள்

படம்
  alanajordan   தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ   ஆஸ்திரேலியன் ஸ்ட்ரைப்டு ராக்கெட்   என்ற தவளை தனது உடல் நீளத்தை விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது. கிரேட் கிரெஸ்டட் நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது. ஆப்பிரிக்கன் கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ. இந்தியாவில் வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக உறங்குகிறது.   மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.   கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின் மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக் கொல்லலாம். நீர்நில வாழ்விகளில் மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. -அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

பாம்பிடமிருந்து தவளைக்கு பரிமாறப்படும் மரபணுக்கள்!

படம்
 பாம்பிடமிருந்து பரிமாறப்படும் மரபணு! பாம்பின் முக்கியமான உணவு,  தவளை. உணவாகும் அந்த தவளை பாம்பின் உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற ஆராய்ச்சித் தகவல் புதியது. தவளைகள் தங்களின் மரபணுக்களை, ஒட்டுண்ணி வழியாக  பாம்பிற்கு கடத்துகிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  பொதுவாக ஒரு உயிரினத்திடமிருந்து, அந்நிய உயிரினம் ஒன்றுக்கு (எடு.தாவரத்திலிருந்து விலங்கு, தவளையிலிருந்து பாம்பிற்கு) மரபணு பரிமாற்றம் ஏற்படுவது மிகவும் அரிது. இதற்கு ஹரிஜோன்டல் டிஎன்ஏ டிரான்ஸ்பர் (Horizontal gene transfer (HGT))என்று பெயர். பாக்டீரியாக்களிடம் இந்த முறையில் மரபணு பரிமாற்றம் நடைபெறுகிறது.  பசுக்களின் உடலில் உள்ள போவைன் பி (BovineB BovB) என்ற மரபணு, உண்மையில் பாம்பிடமிருந்து பரிமாற்றமாகியுள்ளது.  இந்த நிகழ்ச்சி, 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது என மரபியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  10 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் உள்ள நகாஹாமா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆய்வாளர் அட்சுஷி குரபயாஷி , ஆய்வு உண்மை ஒன்றைக் கண்டறிந்தார். போவைன் பி மரபணு, மடகாஸ்கரிலுள்ள தவளைகளிடம்  காணப்பட்டது என்பதுதான் அது.

தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே

படம்
  மதுஸ்ரீ முட்கே தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர்  மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார்.  இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப்  பற்றி ஆராய்ந்து வருகிறார்.  மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.   மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவ

தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முயன்ற முதல் ஆராய்ச்சியாளர்!

படம்
  கூகுள் ஆர்ட் அண்ட் கல்ச்சர் - லாஸரோ லாஸரோ ஸ்பாலன்ஸானி (lazzaro spallanzani) லாஸரோ, வடகிழக்கு இத்தாலியில் 1729ஆம் ஆண்டு பிறந்தார். அப்பா சொன்னார் என்ற காரணத்திற்காக சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பில் சேர்ந்தபிறகுதான் தனக்கு ஆர்வம் இருக்கும் துறைகளை அடையாளம் கண்டார். இயற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததால் சட்டப்படிப்பை கைவிட்டார்.   தனது முப்பது வயதில் கத்தோலிக்க பாதிரியாகியிருந்தார். கூடவே மாடனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 1769ஆம் ஆண்டு பவியா பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. 1799ஆம் ஆண்டு காலமாகும் அவரை அப்பல்கலையில்தான் பணியாற்றினார். ஐரோப்பாவில் இயங்கி வந்த பல்வேறு அறிவியல் சங்கங்களில் லாஸரோ உறுப்பினராக இருந்தார். செரிமானம் பற்றி முதலில் ஆராய்ச்சியைத் தொடங்கிய லாஸரோ இறுதியில் விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி கவனம் செலுத்தினார்.  தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முடியுமா என்று சோதித்த முதல் அறிவியலாளர் லாஸரோ ஸ்பாலன்ஸானிதான். 1930ஆம் ஆண்டு வௌவால்கள் எப்படி எதிரொலி மூலம் பறக்கின்றன என்பதைப் பற்றிய கண்டுபிடிப்பு லாஸ

தவளையில் செல் மூலம் செயல்படும் பயோபாட்! - பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களின் முயற்சி!

படம்
              பரிணாம வளர்ச்சியை காட்டும் பயோபாட் ! டஃப்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தவளையின் செல்களை வைத்து பயோபாட் என்ற உயிருள்ள கணினி ஒன்றை உருவாக்கியுள்ளனர் . அறிவியலாளர்கள் இன்று தங்கள் சிந்தனையை கணினிக்கு அளித்து அதன் மூலம் வாழ்க்கையை வடிவமைக்க முயன்று வருகிறார்கள் . இயற்கையிலுள்ள பல்வேறு உயிரினங்கள் கைகள் , கால்கள் இல்லாமல் வினோதமான உடல் அமைப்பைக் கொண்டு வாழ்கின்றன . இவற்றை கண்காணித்து ஆராய்ச்சி செய்வது கடினம் . இதற்காகவே இந்த உயிரினங்களின் செல்களைக் கொண்டு பயோபாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . இதன்மூலம் அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கணிக்கலாம் . இவற்றால் என்ற பயன் என்று கேள்விகள் எழலாம் . இவற்றின் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் , அணுஆயுதக் கழிவுகள் பிரச்னையைக் கூட தீர்க்க முடியும் . இவை கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரிகள் (CDO) என்று அழைக்கப்படுகின்றன . இந்த உயிரிகளுக்கு மூளையோ , அறிவுத்திறனோ கிடையாது . இவை உலகின் நடைமுறைப் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு , செல்களுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அற