தவளையைக் காக்கப் போராடும் சூழலியலாளர்! - மதுஸ்ரீ முட்கே
மதுஸ்ரீ முட்கே |
தவளை இனத்தைப் பாதுகாக்கும் சூழலியலாளர்!
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர் மதுஸ்ரீ முட்கே (madhushri mudke ). கர்நாடகத்திலுள்ள, மணிபால் நகருக்கு பிசியோதெரபி படிப்பில் முதுகலைப் பட்டம் பெற வந்தார். படிக்கும்போது, அங்குள்ள இயற்கைவளம் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்பட்டார். இதன் விளைவாக, தனது வேலையைக் கூட சூழலியலுக்கு மாற்றிக் கொண்டார். 2015ஆம் ஆண்டு தொடங்கி நகரமயமாதலால் பாதிக்கப்படும் தவளை இனங்களைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்.
மதுஸ்ரீயின் பெரும்பாலான ஆய்வுகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நடைபெற்றது. கோட்டிகெஹரா டான்சிங் ஃபிராக்கை (kottigehara dancing frog) காப்பாற்றுவது பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். தற்போது, பெங்களூருவில் உள்ள அசோகா டிரஸ்டில் (ATREE) முனைவர் படிப்பை படித்து வருகிறார். இந்த அமைப்பு இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆராய்ச்சிப்படிப்புகளை கொண்டுள்ளது. இங்கு ஆராய்ச்சி செய்யும் மதுஸ்ரீக்கு தேவையான உதவித்தொகையை, லண்டன் விலங்கியல் சங்கம் வழங்கிவருகிறது.
மாசுபாடு, அணை, காடுகள் அழிப்பு காரணமாக நடனத் தவளையின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ”தவளைகள் வாழுமிடங்களை வேகமாக கண்டுபிடிப்பது அவசியம். இல்லையெனில் அங்கு வாழும் தவளை இனங்களைக் காப்பாற்றமுடியாது, மரங்கள் இல்லாத நிலங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அந்நிலங்கள், முழுக்க பயன்பாடே இல்லாதவை என்று பொருளல்ல” என தனது கருத்தைக் கூறினார் சூழலியலாளர் மதுஸ்ரீ முட்கே.
தகவல்
protecting indias dancing frog
madhushri mudke
HT 19.1.2021
கருத்துகள்
கருத்துரையிடுக