பல்லுயிர்த்தன்மையைக் காப்பாற்றுவது முக்கியம்! - கஸாலா ஷகாபுதீன்
இயற்கை சூழலியலாளர்
கஸாலா ஷகாபுதீன்
நிலத்தின் பயன்பாடு மாறும்போது அங்கு பல்லுயிர்த்தன்மை மாறுபாடு அடைகிறது. காடுகளை நாம் எப்படி மேலாண்மை செய்யவேண்டும் என்பதைப் பற்றி பேசிவருகிறார் கஸாலா. இவர் சூழலியலில் முனைவர் பட்டம் வென்ற இயற்கை செயல்பாட்டாளர்.
வெனிசுலாவில் உள்ள லாகோகுரியில் பழந்தின்னும் பட்டாம்பூச்சிகளைப் பற்றி ஆய்வுகளை செய்தவர் கஸாலா. இந்தியாவில் அசோகா பல்கலைக்கழகத்தின் சூழலியல் துறையில், வருகைதரு பேராசிரியராக உள்ளார். இமாலயத்தின் குமாயோன் எனுமிடத்தில் பறவைகளைப் பற்றிய ஆய்வை தனது குழுவினருடன் செய்துவருகிறார்.
ஆய்வு செய்யும் பகுதியில், ஓக் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. இப்போது வணிகரீதியாக அங்கு பைன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். இதனால் ஓக் மரங்களை நம்பியுள்ள மரங்கொத்தி, பூச்சி இனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இம்மரத்தை வாழிடமாக கொண்டிருந்த பறவைகளின் வாழ்க்கைமுறையும் மாறிவருகிறது. “இமாலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளில் உள்ள இயற்கை வாழ்க்கைமுறையை பலரும் அறிந்ததில்லை. இப்போது இச்சூழலுக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன” என்றார் கஸாலா ஷகாபுதீன்.
இவர், டிட்லி எனும் தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு சூழலுக்கு இசைவான சுற்றுலாவை பிரசாரம் செய்துவருகிறது. கஸாலா, பல்வேறு ஊடகங்களிலும் இயற்கை, சூழல் சார்ந்த விஷயங்களை பேசியும் எழுதி வருகிறார். “ மனிதர்கள் தங்களது எண்ணிக்கையை அனைத்து இடங்களிலும் விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சூழலில், நாம் பல்லுயிர்த்தன்மையை எப்படி புரிந்துகொண்டு காப்பாற்றுவது? ” என கஸாலா கேட்கும் கேள்வி நம் அனைவருக்குமானது.
source
birds as bellwether
HT
கருத்துகள்
கருத்துரையிடுக