வாட்டர் வாரியர் விருது பெற்ற கோவை மணிகண்டன்! - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

 











கோவையைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வாட்டர் வாரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கான விருதை இன்று, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வழங்குகிறார். 

மணிகண்டன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு தொடங்கி கோவையிலுள்ள பல்வேறு குளம், குட்டை, ஏரிகளை மீட்டு வருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து ஜல்சக்தி அமைச்சக அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன்னர் இவரைத் தொடர்புகொண்டுள்ளனர். குளங்களை புனரமைப்பு செய்த தகவல்களை தொகுத்து அனுப்பக்கூறியுள்ளனர். இப்படித்தான் விருதுக்கு மணிகண்டன் தேர்வானார். 

இவர்களது முதல் வேலை, பேரூர் பெரியகுளத்தில் பணியைத் தொடங்கினர். பிறகு ஏரி என செயல்பாடு வளர தன்னார்வலர்களும் ஆர்வமாகி இணைந்தனர். இப்படி 24 ஏரிகள், 900 குளங்கள், 27 கால்வாய்களை புனரமைப்பு செய்துள்ளனர். 224 வாரங்களில் சீமை கருவேல மரங்கள் போன்ற அந்நிய தாவர இனங்களையும் அகற்றியுள்ளனர். 

புனரமைப்பு பணியோடு பசுமை பரப்பை அதிகரிக்க மியாவகி வகை காடுகளையும் உருவாக்கி வருகின்றனர். இந்த முறையை ஜப்பானைச் சேர்ந்த  அகிரா மியாவகி என்பவர் உருவாக்கினார். வெள்ளலூர் ஏரியில் பத்தாண்டுகளுக்கு மேல் ஒரு துளி நீர் கூட இல்லை. அந்த இடத்தில் மியாவகி காடுகளை உருவாக்கி பல்லுயிர்த்தன்மை கொண்ட சூழலைச் சாதித்துள்ளனர். 

கோவிட் காலம் அனைவரைப் போலவே இவர்களையும் பாதித்துள்ளது. இதனால் புனரமைப்பு பணிகளை செய்யமுடியவில்லை. ஆனாலும் அந்த காலத்தில் ஆன்லைனில் சந்தித்துப் பேசி அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளனர். 

கழிவுகளை எதிர்கொண்டு அதனை மறுசுழற்சி செய்வதில் பெரிய தடைகளை சந்தித்தார் மணிகண்டன். ஒரு நீர்நிலையை சுத்திகரித்தால், அதிலுள்ள குப்பைகளை எடுத்து எங்கே போடுவது என தடுமாறியுள்ளனர். மக்கள் இதில் போதிய விழிப்புணர்வு பெறாததால், குப்பைகளை பயன்பாட்டில் இல்லாத நீர்நிலையில் எறிந்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது. இப்படி சுத்தப்படுத்திய ஏரியிலும் கூட வழக்கம்போல பிளாஸ்டிக் கழிவுகளை எறிந்துள்ளனர். பிறகு, இதுபற்றி மக்களிடம் பேசியபிறகுதான் கழிவுகளின் வரத்து நிறுத்தப்பட்டது. 

பல்வேறு நீர்நிலைகளில் பட்டா நிலங்கள் உள்ளே வந்துள்ளன. இப்படி நிலங்களை வாங்கியவர்கள் அங்குள்ள நீர்நிலைகளின் பாதையை அடைத்துள்ளனர். இதனால நகருக்கு கிடைக்கவேண்டிய நீர் கிடைக்கவில்லை. மணிகண்டனின் குழுவினர், இப்படிப்பட்ட நிலங்களை அடையாளம் கண்டு அதனை அரசு ஆதரவுடன் மீட்டுள்ளனர். 

நீர்நிலைகள் நமது சூழலின் ஆரோக்கியம் பற்றி உணர்த்துபவை. அதனை காப்பது அவசியம் என்றார் மணிகண்டன். 

டைம்ஸ் ஆப் இந்தியா

பி சங்கீதா


https://kovaikulangal.org/


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்