காட்ஃபாதர் படத்திலுள்ள நிறைய காட்சிகள் கிளிஷே ஆகிவிட்டன! - விக்கிரமாதித்த மோட்வானே - இந்திப்பட இயக்குநர்
விக்கிரமாதித்ய மோட்வானே
இந்திப்பட இயக்குநர்
காட்ஃபாதர் படம் எடுக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதர்களைப் போலவே படத்திற்கும் நடுத்தர வயது ஆகியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
படத்தில் எந்த ஒரு சிறிய காட்சியையும் நீங்கள் பழசாகிவிட்டது என்று கூறமுடியாது. இதைத்தான் நேர்மையாக கூறவேண்டும். காட்ஃபாதர் படத்தில் வந்த பல்வேறு காட்சிகளை கிளிஷே என்றுதான் கூறவேண்டும. அந்தளவு படங்களில் பயன்படுத்திவிட்டார்கள். இன்று வரை காட்ஃபாதர் படங்களைப் பார்த்து மாணவர்கள், திரைப்பட இயக்குநர்கள் கற்றுக்கொண்டு இருக்கின்றனர். இதேபோல இந்தியில் எடுக்கப்பட்ட ஷோலே படத்தையும் சொல்லலாம். இந்த படமும் தனித்துவமான தன்மை கொண்டது. அன்றைய காலகட்டத்தில் இந்த படம் அதிக வசூலை செய்தது. அதேபோலத்தான் இன்று ஸ்பைடர்மேன் படமும் வசூலில் சாதனை செய்துள்ளது. இதெல்லாம் சினிமா விரும்பிகளைத் தாண்டி நடைபெறுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
விக்கிரமாதித்த மோட்வானே |
திரைக்கதை எழுத்தாளராக காட்ஃபாதர் படத்தின் திரைக்கதையை எப்படி மதிப்பிடுவீர்கள்?
படம் மூன்று மணிநேரம் நீளமானது. அதனை சற்று குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன். படம் இறுதிப்பகுதியை நெருங்கும்போது அதில் சற்று இறுக்கம் உருவாகும். மைக்கேல் கார்லியோன் என்பவரின் கதை இது. இதில், அவர் இத்தாலி செல்கிறார், அங்கு தனது அதிகாரத்தை எப்படி நிலைநாட்டுகிறார் என்பதை கதை சொல்லுகிறது. அந்த பாத்திரமே உறுதியாக இருக்கும். அதன் முழுவாழ்க்கையையும் நம்மால் பார்க்க முடியும். புதிதாக திரைப்படம் உருவாக்கும் இயக்குநர்கள் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
படத்தை ரசிகர்கள் நேசிப்பதற்கான காரணம் என்ன?
காரணம், அந்த கதையை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதுதான். இதே கதையை ஷேக்ஸ்பியர் காலம், இங்கிலாந்து, இந்தியா, பதினெட்டாம் நூற்றாண்டு கால ஐரோப்பா என எங்கும் பொருத்திப் பார்க்க முடியும். ஒரு தந்தை, மூன்று மகன்கள். அவர்களின் அதிகாரம் நோக்கிய செயல்பாடுகள். இது ஒருவகையில் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு பகுதி எனலாம். காலம் கடந்த கதை என்றும் கூறலாம்.
படத்தில் கதாபாத்திரங்களை விளக்கும் அறிமுக காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திருமணக் காட்சியில் நம் கண்முன் பல்வேறு பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். 25 நிமிடங்கள் இக்காட்சி நடைபெறுகிறது. டான், மைக்கேல் இல்லாமல் நான் புகைப்படம் எடுக்க மாட்டேன் என்கிறார். பாடகர் ஜானி, அந்த விழாவிற்கு வருகிறார். அவரை கானி வாசலுக்கு சென்று வரவேற்று அவன் பின்னால் நடந்து வருகிறாள். இது அவரைப் பற்றி அவளுக்கு தெரியும் என்பதோடு அவளது பாத்திரம் பற்றியும் விளக்குகிறது.
வயதான டான் வேடத்தில் நடித்துள்ள மார்லன் பிராண்டோ பற்றி...
படத்தில் நடித்தபோது தனது நடிப்புத்தொழிலின் முக்கியமான கட்டத்தில் இருந்தார். கப்போலோ அவரை சிறப்பாக படத்தில் பயன்படுத்தியிருப்பார். இப்படி ஒரு படத்தில் நடிக்க, பிராண்டோ விரும்பியிருப்பார் என்று கூறலாம். படத்தின் தொடக்க காட்சி, மகனைப் பாதுகாக்க முயலும் காட்சி என அனைத்திலுமே இயல்பான நடிப்பால் மார்லன் பிராண்டோ அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார்.
கப்போலா காட்ஃபாதர் 3 படத்தை எடுப்பாரா?
அப்படி யாராவது சொன்னால் அது அவர் மறுக்க முடியாத வாய்ப்புதான்.
டைம்ஸ் ஆப் இந்தியா
மீனாள் பாகெல்.
கருத்துகள்
கருத்துரையிடுக