கற்பதில் வேகம் காட்டும் தங்கமீன்!
Gold fish - Pinterest |
சூழலை அறிவால் அறியும் தங்கமீன்!
நீருக்குள் அலைந்து திரிந்து உணவு தேடும் மீன்களுக்கு, சரியாக வழிதேடி அடையும் திறன் உண்டு. இதனை இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு அறையில் செய்த சோதனையில் மீன்கள் எப்படி கப்பல் அல்லது வேறு வகை வாகனங்கள் எதிரே வந்தால் விலகி பாதுகாத்துக்கொள்கிறது என அறிந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சி, பிஹேவியரல் பிரெய்ன் ரிசர்ச் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
ஆறு தங்க மீன்களை வைத்து அதன் திசையறியும் திறனை சோதித்தனர். சக்கரங்கள் பொருத்திய சிறு வண்டியில் மீன்தொட்டியை வைத்தனர். மீன்தொட்டியின் நடுவில் கம்பியை வைத்து, அதில் கேமராவைப் பொருத்தினர். இதன்மூலம், தங்கமீனின் இயக்கத்தை பதிவு செய்தனர். 30 நிமிடங்களுக்கு சிறுவண்டியை இயக்கி மீன்கள் குறிப்பிட்ட திசையில் நகர்கிறதா எனப் பார்த்தனர். தொட்டியில் ரோஸ் நிற அட்டையை வைத்து அதனை நோக்கி மீனை செல்ல தூண்டினர். முதலில் கிடைத்த வெற்றி சதவீதம் 2.5 தான். பிறகு, தங்கமீனின் வெற்றி வாய்ப்பு 17.5 சதவீதமாக உயர்ந்தது.
அறையில் இடங்களை மாற்றுவது, வெவ்வேறு நிற அட்டைகளை வைப்பது, ரோஸ் நிற அட்டையை அசைப்பது என சவால்களை உருவாக்கினர். ஆராய்ச்சியாளர்களின் தடைகளைத் தாண்டி மீன்கள் இலக்கில் தெளிவாக இருந்தன. ரோஸ் நிற அட்டையை சரியாக அடையாளம் கண்டன. இச்சோதனையில் சில மீன்கள், கற்றுக்கொடுப்பதை வேகமாக கற்றன.
உயிரினங்களின் குணங்களை அறிவதில் இந்த ஆய்வு முக்கியமானது. அதேசமயம் பிற ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுகளைக் கண்டு பெரிதாக ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் எலியை வைத்து இதேபோல ஆய்வு ஒன்று அமெரிக்காவில் செய்யப்பட்டு வருகிறது. வர்ஜீனியாவில் உள்ள ரிச்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர், கெல்லி லாம்பெர்ட். இவர், எலியை வைத்து பொம்மை கார்களை ஒட்ட பயிற்சி கொடுத்து வருகிறார்.
”இதுபோல பல்வேறு விலங்குகளை சோதிப்பது, பல்லுயிர்த்தன்மையை எளிதாக புரிந்துகொள்ள உதவும். ஆராய்ச்சியாளர்களின் விலங்கினங்கள் பற்றிய அறிவும் விரிவாகும். எதிர்காலத்தில் எலிக்கும் தங்கமீனுக்கும் கூட பந்தயம் நடக்கலாம்” என்றார் அறிவியலாளரான கெல்லி லாம்பெர்ட்.
தகவல்
Science News
goldfish drivers reveal navigation know how
Science News 12.2.2022
கருத்துகள்
கருத்துரையிடுக