இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!
இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அட்டர்
நிகோலஸ் மில்டன்
பென் அண்ட் ஸ்வோர்ட் புக்ஸ்
அட்டர் என்ற விஷப்பாம்பு உலகம் முழுக்கவே அழிந்துவரும் நிலையில் உள்ளது. அதனைப் பற்றி நாம் தவறாக அறிந்துள்ள விஷயங்கள் எவை என நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தில் அதிகளவு இப்பாம்பு இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நூல் ஏற்படுத்தும் ஊக்கத்தால் அட்டர் காப்பாற்றப்பட்டால் நல்லது.
ஃபிளெட்ஜிலிங்
ஹன்னா போர்ன் டெய்லர்
ஆரம் பிரஸ்
கானா நாட்டின் கிராமப்புற பகுதியில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ஹன்னா நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அவர் வளர்த்த உழவாரன் குருவி, மன்னிக்கின் என்ற சிறு பறவை ஆகியவற்றையும் வளர்த்து வந்ததைப் பற்றி படிக்க சுவாரசியமாக உள்ளது.
தி பேரட் இன் தி மிரர்
ஆண்டன் மார்ட்டின்ஹோ டிரஸ்வெல்
ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்
இந்த நூலில் ஆசிரியர், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒத்த குணங்கள், பழக்கங்கள் பற்றி விவரிக்கிறார்.
தி கார்ன்கிரேக்
ஃபிராங்க்ரென்னி
வொயிட்லெஸ் பப்ளிசிங்
வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்ட பறவைதான் கார்ன்கிரேக். ஆனால் இன்று தன்னை காப்பாற்றிக்கொள்ளவே தடுமாறி வருகிறது. தற்போதுள்ள நிலை, எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி ஆசிரியர் அக்கறையுடன் பேசுகிறார்.
நன்றி
பிபிசி வைல்ட்லைஃப் இதழ் மார்ச் 2022
கருத்துகள்
கருத்துரையிடுக