சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்கள்தான் மாறவேண்டும்! - டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்

 






டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்




டிஎம் கிருஷ்ணா
வாய்ப்பாட்டு கலைஞர்


இன்றைய மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நான் மாணவனாக இருந்த காலத்தை விட இன்றைய மாணவர்கள் கவனத்துடன் சுயசிந்தனையுடன் இருக்கிறார்கள். நான் இந்தளவு கவனத்துடன் இருந்ததில்லை. என்னுடைய சக வயது உள்ளோர் பலரும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என புகார் கூறுகிறார்கள். குறிப்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம். இந்த வகையில் அவர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வாழ்க்கை, அரசியல் பற்றிய உறுதியான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நான் இந்தளவு கருத்துக்களோடு இல்லை என்பதே உண்மை. நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இதனை வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த வகையில் நாம் கேட்க முடியாத பல்வேறு கேள்விகளை கேட்க முடியும். இந்த தளங்களை இந்த வகையில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் உள்ள சிக்கல், சிந்தனைகளில் உள்ள தடுமாற்றம்தான். நான் இருபது வயதில் இப்படித்தான் இருந்தேன். 

நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசி வருபவர். கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் மாணவர்களிடம் எப்படி இருக்கிறது?

அது வேறு வகையான இடம் என்று நினைக்கிறேன். இன்று கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் கிண்டல் செய்யப்படுவோம் என மாணவர்கள் நினைக்கிறார்கள். இதனை செய்பவர்கள் வேறு யாருமல்ல. அவர்களின் குடும்பத்தாரே அப்படித்தான் இருக்கிறார்கள் இன்று அவர்கள் புழங்கும் வாட்ஸ்அப் குழுக்களைப் பாருங்கள். அதில் எப்படி புதிய சிந்தனைகளை கிண்டல் செய்து உரையாடி வருகிறார்கள் என்று. இதனால் புதிய சிந்தனைகளை தங்களது கருத்துகளை மாணவர்கள், இளைஞர்கள் வெளிப்படையாக தெரிவிக்க பயப்படுகிறார்கள். தயங்குகிறார்கள். 

கருத்துகள் வேறுபட்டாலும் கூட நாம் மனிதர்களை வெறுக்க கூடாது. ஆனால் இன்று துரதிர்ஷ்டவசமாக வாதங்களின் மேல்தான் கவனம் இருக்கிறதே ஒழிய அதனால் மனம் புண்படும் மனிதர்களைப் பற்றி கவலையே படுவதில்லை.அதாவது, மனம் புண்பட்ட மனிதர்களைப் பற்றி பேசினால் கூட நாம் வாதங்களின் மேல்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். 



டிஎம் கிருஷ்ணா


கடந்த இரு ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. அதில், அதீதமான கருத்துகள் வெளிப்படுகின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சமூகத்தில் அதீத கருத்துகள், விவகாரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்காக நாம் தனி உலகை உருவாக்கிக் கொள்ளலாமா என்றால் அது சரியானதல்ல. பல்வேறு இனங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் தீவிரவாதம் இல்லாமல் எப்படி? பல்வேறு வடிவங்களில் தீவிரவாதம் இன்றுமே உள்ளது. ஆனால் இதற்காக குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களை நாம் அதையொட்டி அடையாளப்படுத்துவது தவறு. சமூக வலைத்தளம் என்பது மேல்தட்டினரின் வருகை கொண்ட தளம். தொழில்நுட்பங்கள் மூலம் நாம் நிறைய பிரச்னைகளை தீர்த்துவிடலாம் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் தொழில்நுட்பம் மூலம் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. இதற்காக அல்காரிதங்களை உருவாக்கலாம். நமது நிஜ வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் உருவாக்கலாம். அதனால் ஏற்பட்ட பாதிப்பு என குறைகளையும், புகார்களையும் சொல்லலாம். ஆனால், இது சமூக வலைத்தளங்களின் பிரச்னை அல்ல. அதில் இயங்கும் நமது பிரச்னை. நாம் மாறினால்தான் அந்த பிரச்னையும் மாறும். 

டைம்ஸ் ஆப் இந்தியா 

சுனாயனா சுரேஷ்

https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/we-need-to-have-more-complicated-and-uncomfortable-conversations-tm-krishna/articleshow/90474406.cms


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்