பிராண சங்கடம் தந்த கோழிக்கறி உணவு! வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

 










அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.

நலமா?

உணவு பற்றி வருத்தமாக பேசினீர்கள். திருவண்ணாமலை வருவது எனது விருப்பம்தான், முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் உங்களைப் பார்க்கிறேன் என்று சொல்லியிருந்தேன். உங்களை அலைகழிக்கவேண்டாம் என்று நானே குவாவாடிஸ் வருவதாக சொல்லி அப்படியே வந்தேன். உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அடுத்தமுறை தங்குவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ஒருவரைப் பற்றிய விஷயங்களை அவரில்லாதபோது அவரின் நண்பரிடம் கூட சொல்லக்கூடாது என நினைக்கிறேன். இது எப்போதுமே எனக்கு பிரச்னையாகவே முடிந்துள்ளது. அன்று இரவில் சாப்பிட்ட கோழிக்கறி  உணவு, நானே விரும்பி ஆலிவர் அண்ணாவை சமைக்க சொன்னதுதான். கறிக்கான முழுச்செலவும் என்னுடையதுதான். இதனை நான் உங்களுக்கு சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். நிச்சயமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தோன்றியது. எனவே, இதை சொல்லவில்லை. ஏனெனில் போனமுறை உங்கள் வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்டேன். ஆனால் இம்முறை நிறைய நடைமுறை சிக்கல்களால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

லஷ்மி அக்காவுக்கும் உடல் சரியில்லாத நிலை பெரும் தர்மசங்கடமான நிலை. நீங்களும் கஷ்டப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, நான் திருவண்ணாமலையில் இருக்கும்வரை உங்களுக்கு போன் செய்வதையே தவிர்த்தேன். ஆலிவர் அண்ணா, எதை எடுத்தாலும் அவர்கிட்ட சொன்னீங்களா இல்லையா என சொல்லிக்கொண்டிருந்தார். உங்களுடன் சேர்ந்து சீனிவாசா மெஸ்சில் பட்டை சாதம் சாப்பிட்டது மனநிறைவாகவே இருந்தது. கோழிக்கறி செய்தி அப்படியானது அல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டியது....

நன்றி 

அன்பரசு

18.1.2022

 pinterest


கருத்துகள்