இந்திய மாணவர்களுக்கு உதவும் இ கல்வித்திட்டங்கள்!

 










அரசின் இணையவழி கல்வித் திட்டங்கள்

பிஎம் இ வித்யா

2020ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

தீக்ஷா

அறிவை டிஜிட்டல் வழியில் பகிர்ந்துகொள்வதற்கான வலைத்தளம் என திட்டத்தை மொழிபெயர்க்கலாம்.

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வசதி. பாடநூல்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் போதும். உடனே என்சிஇஆர்டி பாடநூல்களை படிக்க முடியும். இதனை 18 மொழிகளில் அணுக முடியும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம். 

நிஷ்த்தா

இது ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம். தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தலாம். 

ஸ்வயம்

9ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரையிலான பல்வேறு பாடங்களை ஆன்லைன் வழியாக கற்கலாம். இதனை யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகி பாடங்களை கற்க முடியும் என்பது முக்கியமான அம்சம். பாடங்கள் அனைத்தும் இன்டராக்டிவானவை என்பதோடு இலவசம் என்பதையும் மனதில் குறித்துக்கொள்ளுங்கள். 

 கடந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இதில் இணைந்தனர். 

ஸ்வயம் பிரபா டிவி

9 ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரை பல்வேறு பாடங்களை கற்றுத்தரும் 34 டிடிஹெச் சேனல்களைக் கொண்ட தொகுப்பு. 24 மணி நேரமும் பாடங்கள் இதில் ஒளிபரப்பாகும். போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பும் உள்ளடங்கும். கூடவே மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்குகிறார்கள். 12 சேனல்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலானவை. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் 200ஆக அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். அரசு, தனியார் அமைப்புகளின் டிடிஹெச் அனைத்திலும் ஸ்வயம் பிரபா டிவி வசதி உண்டு. 

ஐஐடி பால், இ அபயாஸ்

ஐஐடிக்கு தேர்வாவது பற்றி பலருக்கும் கனவிருக்கும். அதற்கான பயிற்சியை இந்த வலைத்தளம் வழங்குகிறது. பிரசார் பாரதியின் டிவி, அகில இந்திய வானொலி ஆகியவற்றில் கல்விக்கான தனி நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. 

ஷிக்சா வாணி

இது பாட்காஸ்ட் வழி பாடம் கற்கும் முறை. இந்த வகையில், 9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான பாடங்களை ஒலிபரப்புகிறார்கள். 

முக்தா வித்யா வாணி

இது வெப் வழி வானொலி. தேசிய திறந்தவெளி பள்ளி, இதற்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது. மாணவர்கள் இதனையும்  பயன்படுத்திக்கொள்ளலாம்.  



இந்தியா டுடே 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்