இடுகைகள்

கல்வெட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களுக்கு கல்வெட்டுகளைப் படிக்க கற்றுக்கொடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

படம்
  ராமநாதபுரத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜகுரு. ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு படிப்பித்து வருகிறார். அதோடு நிற்கவில்லை என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுவதன் காரணமே… கொஞ்சம் எக்ஸ்ட்ரா விஷயங்களை செய்தார். என்ன செய்தார்? கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துகளை படிப்பதில், ராஜகுரு அதிக ஆர்வம் காட்டுகிற ஆள். இதை பிறருக்கும் சொல்லித் தந்து வருகிறார். ஹெரிடேஜ் கிளப்பில் செயலாளராக இருப்பவர், ராமனாதபுரம் தொல்பொருள் ஆராய்ச்சி பவுண்டேஷனின்   தலைவராகவும் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறார். இந்த பவுண்டேஷன், சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. திருப்புல்லானியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி பதிமூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் கட்டுமானம், அவர்களின் மொழி, ஆகியவற்றை காக்கும் நோக்கத்தில்   கிளப் பேரார்வம் காண்பித்து வருகிறது. தொல்பொருள் சான்றுகளைப் பற்றி அறிவதற்கு ஆர்வம் காட்டும் மாணவர்களை ராஜகுரு, தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். இதன்மூலம், ஆண்டுக்கு 25 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். அதாவது, ஆண்டுக்க