மாணவர்களுக்கு கல்வெட்டுகளைப் படிக்க கற்றுக்கொடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

 








ராமநாதபுரத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜகுரு. ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு படிப்பித்து வருகிறார். அதோடு நிற்கவில்லை என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுவதன் காரணமே… கொஞ்சம் எக்ஸ்ட்ரா விஷயங்களை செய்தார். என்ன செய்தார்?

கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துகளை படிப்பதில், ராஜகுரு அதிக ஆர்வம் காட்டுகிற ஆள். இதை பிறருக்கும் சொல்லித் தந்து வருகிறார். ஹெரிடேஜ் கிளப்பில் செயலாளராக இருப்பவர், ராமனாதபுரம் தொல்பொருள் ஆராய்ச்சி பவுண்டேஷனின்  தலைவராகவும் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறார். இந்த பவுண்டேஷன், சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. திருப்புல்லானியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி பதிமூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தமிழர்களின் கட்டுமானம், அவர்களின் மொழி, ஆகியவற்றை காக்கும் நோக்கத்தில்  கிளப் பேரார்வம் காண்பித்து வருகிறது. தொல்பொருள் சான்றுகளைப் பற்றி அறிவதற்கு ஆர்வம் காட்டும் மாணவர்களை ராஜகுரு, தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். இதன்மூலம், ஆண்டுக்கு 25 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். அதாவது, ஆண்டுக்கு 25 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு செம்மொழி தமிழ் கருத்தரங்கு நடைபெற்றபிறகு அங்கு கூறிய கருத்துகளின்படி ஹெரிடேஜ் கிளப் தொடங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு, பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மாணவர் திரிதங்கர் மகாவீரர் ஒருவரைப் பற்றி கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார். கொற்றக்குடி ஆற்றில் கல்வெட்டு கிடைத்தது. ரோமன் எழுத்துகளைக் கொண்ட எண்ணெய் தயாரிக்கும் பானைகளைப் பற்றிய தடயங்களையும் மாணவர்களே அடையாளம் கண்டனர். தாங்கள் கண்டறிந்த விஷயங்கள் பற்றி ‘தேடித்திரிவோம்’ என பனிரெண்டு கட்டுரைகளைக் கொண்ட நூலை மாணவர்கள் எழுதியுள்ளனர். நூலில் தங்களின் ஊர்ப்பெயர் வரலாறு, கோவில்கள், பல்வேறு சடங்குகள், பாடல்கள் ஆகியவை இதில் அடக்கம்.  

கிளப்பைச் சேர்ந்த மாணவி வி செல்வரஞ்சனி, தற்போது பிஎட் படிப்பை படித்து வருகிறார். இவர், பிராமி எழுத்துகளைப் படிப்பதில் தேர்ச்சி பெற்றவர். திருமழுகந்தன்கோட்டை  கோட்டை பற்றிய எழுதிய ஆய்வுக்கட்டுரை நவீன தமிழாய்வு என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.  ‘’நான் தமிழ் வட்டெழுத்துக்கள் பற்றி படிக்க விரும்புகிறேன். வரலாறு தொடர்பாக ஐந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளேன். நான் ஆசிரியராகி தமிழ் வரலாறு, கல்வெட்டு எழுத்துகள் பற்றி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க நினைக்கிறேன்’’ என்றார் செல்வரஞ்சனி.

நன்றி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெனர்.காம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்