சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?
ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக
செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக
அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின்
முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை
அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான
பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள்.
பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக்
காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர்
/ செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது
அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள்,
வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை
வெளிப்படுத்துவது
முறையாக பணியாற்றாத அதிகாரிகளை, செயல்திறனற்ற அரசு
பணியாளர்களை பற்றி எழுதுவது
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக மாறி அவர்களின் பிரச்னைகளைப்
பேசுவது
நாம் வாழும் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்னைகளைப்
பற்றி பேசுவது
தேர்தல் நடைமுறைகளை மக்களுக்கு விளக்கமாக சொல்லி
அதுபற்றிய அறிவை ஏற்படுத்துவது
மக்களின் பார்வையை, அவர்களின் பிரதிநிதியாக எடுத்துப்
பேசுவது
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அவர்களுக்கு
ரசிப்புத்தன்மை கொண்ட வகையில் எழுதுவது,
பத்திரிகையாளரின் பணி என்பது மிகவும் முக்கியமானது அதேசமயம் பெரும் பொறுப்பு மிக்கது. உலகம், நாடு, சமூகம் என எழுதப்படும் செய்திகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருக்கவேண்டும். இந்த பொறுப்பை உணர்ந்து நிருபர்களும் ஆசிரியர்களும் செயல்பட வேண்டும்.
நன்றி
தாம்சன் ராய்ட்டர் பவுண்டேஷன்
image pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக