ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் இன்னொரு நிறுவனம் - மோசடி மன்னன் அதானி - பகுதி 6

 








பகுதி ஐந்தில் விடுபட்டு போன மின்னஞ்சல் 





ஓபல் நிறுவனம்

குருநால் நிறுவனம்




2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதானி பவர் நிறுவனத்தில் 4.69% பங்குகள் அல்லது பத்தொன்பது சதவீத பங்குகளை ஓபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பரிவர்த்தனை கூட மொரிஷியஸிலுள்ள பிற நிதி நிறுவனங்களைப் போலவே சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

ஓபல் இன்வெஸ்ட்மென்ட் என்பது மொரிஷியஸைச் சேர்ந்த போலி நிறுவனம். அங்குள்ள, பெருநிறுவன ஆவணங்களை ஆராய்ந்ததில் ஓபலின் நிறுவனத் தலைவர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

ஓபல் நிதி நிறுவனம் பற்றிய செய்திக்கட்டுரைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஊடகங்கள் இந்த நிதி நிறுவனம் எப்படி அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவு வாங்கியது என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.

ஓபல் நிதி நிறுவனத்திற்கு எந்த வலைத்தளமும் இல்லை. அதன் பணியாளர்கள் பற்றிய தகவல்களும் கூட லிங்க்டு இன் தளத்தில் இடம்பெறவில்லை. முதலீடு தொடர்பான மாநாட்டில் நிறுவனம் பங்கேற்றதிற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

ஓபல் நிறுவனம், பன்மைத்தன்மையோடு பல்வேறு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யவில்லை, அதானி பவர் நிறுவனத்தில் மட்டுமே நிதி முதலீடு செய்துள்ளது.

ஓபல் நிறுவனம், ட்ரஸ்ட்லிங்க் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் பெருநிறுவன சேவைகளை வழங்கிவரும் சிறு நிறுவனமாகும். ட்ரஸ்ட்லிங்கின் இயக்குநர், அதானி குழுமத்துடன் தனக்கு இருக்கும் தொடர்பை வெளிப்படையாகவே லிங்க்டு இன் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

மொரிஷியஸ் பெருநிறுவன ஆவணங்களின்படி 2005ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று முதல் ட்ரஸ்ட்லிங்க் நிறுவனம், ஓபல் நிறுவனத்தை வாங்கி இயக்கி வருகிறது என தெரிய வந்தது.

அதேநாளில், மொரிஷியஸில் குருநால் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் (பி) லிட் என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தையும் ட்ரஸ்ட்லிங்க்தான் நிர்வகித்தது. குருநால், வினோத் அதானியின் நிர்வாகத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்று.

ட்ரஸ்ட்லிங்க் நிறுவனத்தின் இயக்குநரான கியான்டியோ ரீமுல், முன்னர் வினோத் அதானிக்காக நிறைய போலி நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதானி குளோபல் லிட். என்ற நிறுவனத்தின் தொடக்க கால தலைவராகவும் ரீமுல் இருந்துள்ளார்.

மொரிஷியஸிலுள்ள அதானி குழும நிறுவனங்களில் ஒன்றுதான், அதானி குளோபல் லிட். கியான்டியோ ரீமுலின் பெயர், வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு போலி நிறுவனங்களைத் தொடங்கி ஊழல் செய்ததுதான் ரீமுலின் மீதுள்ள குற்றம்.

ஓபல் நிறுவனம், சுதந்திரமாக செயல்படும் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் அதானி பவர் நிறுவனத்தின் பங்குகளை பெருமளவு வாங்கி வைத்துள்ளது. வினோத் அதானி மூலம் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், அவற்றுக்கு இடையிலான தொடர்புகள், இதற்கு முன்னால் செய்த மோசடிகள் ஆகியவைதான் இந்த நிறுவனங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இடையில் செய்யப்படும் வணிக பரிவர்த்தனைகள் 30 -47 சதவீதம் வரையில் செல்கின்றன. இப்படி செய்யப்படும் பரிவர்த்தனை அளவை டெலிவரி வால்யூம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த டெலிவரி வால்யூம் அதானி குழும நிறுவனங்களில் பிற நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது. வெளிநாட்டில் இயங்கும் நிறுவனங்கள் மூலம் அதானி குழும பங்குகளில் நிதி முதலீடு செய்யப்படுவதால்தான், டெலிவரி வால்யூம் அளவு கூடிவருகிறது. இந்தியாவில் தினசரி செய்யும் நிதி முதலீடுகளில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவது இல்லை.

 அதானி குழும நிறுவனங்களில் பங்குகளை வாங்குபவர்களைப் பற்றி தகவல்களை சேகரித்தால். அதில் மான்டேரோஸா, எலாரா, நியூ லியாயினா ஆகிய நிறுவனங்களே டாப் 10 பட்டியலில் இருக்கும். இவை தவிர சந்தேகப்படும்படி உள்ள மற்ற நிறுவனங்களைப் பார்ப்போம். 

இஎம் ரீசர்ஜென்ட் ஃபண்ட், ஆசியா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், எமர்ஜிங் இந்தியா ஃபோகஸ், கேபிடல் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவையாகும்.

 














அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கும் நிதி நிறுவனங்கள், சந்தேகத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் செயற்கையாக பங்குகளின் விலையை  ஏற்றி இறக்கி வருகின்றன. இதனால்தான் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை அதிகளவு உயர்ந்து காணப்படுகிறது.,

அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் உயர்ந்த டெலிவரி வால்யூம் சதவீதத்தைப் பார்ப்போம். 2018 (30%), 2019 (2%), 2020 (8%)

எமர்ஜிங் இந்தியா ஃபோகஸ், இஎம் ரீசர்ஜென்ட் ஃபண்ட், ஆசியா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியற்றால் உயர்ந்த டெலிவரி வால்யூம் அளவு  2018 (44%), 2019 (47%), 2020 (9%).

அதானி என்டர்பிரைசஸ்

2018 (17%), 2019 (33%), 2020 (11%)

எமர்ஜிங் இந்தியா |ஃபோகஸ், இஎம் ரீசர்ஜன்ட் ஃபண்ட், ஆசியா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், கேபிடல் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென் ஆகிய நிறுவனங்களில் 2018 (17%), 2019 (33%), 2020 (11%) என டெலிவரி வால்யூம் உயர்வாக இருந்தது. 

2019ஆம் ஆண்டு அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தில் பொதுப்பங்குதாரர்களின் சதவீதம் 13.5 சதவீதமாக குறைந்தது. இந்திய சட்ட விதிப்படி நிறுவனத்தினரின் பங்கு 25 சதவீதமாக குறைந்தபட்சம் இருக்கவேண்டும். இல்லையெனில், இந்திய விதிப்பபடி பங்குச்சந்தையில் இருந்து அந்நிறுவனம் நீக்கப்பட்டுவிடும்.

எனவே, க்ரீன் எனர்ஜி நிறுவனம் 2019ஆம் ஆண்டு மே, ஜூன் ஆகிய மாதங்களில் இரண்டு முறை பங்கு விற்பனையை செய்தது. இதன் விளைவாக 11.58 சதவீதம் பங்கு விற்பனையானது. அப்போதும் கூட 25 சதவீத அளவை எட்டவில்லை.

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆராய்ச்சிப்படி, அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் தனது பங்குகளில் பெரும்பாலானவற்றை சந்தேகப்படும்படியான வகையில் வெளிநாட்டிலுள்ள முதலீட்டு நிறுவனங்களுக்கும், வேறு நிதி நிறுவனங்களுக்கும் விற்றுவிடுகிறது. 

அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம், தனது நிறுவன பங்குகளை வெளியிட மோனார்ச் நெட்வொர்த் கேபிடல் என்ற நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. இந்த நிறுவனம்  ஏற்கெனவே, 2011ஆம் ஆண்டு பங்கு முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியது.

 மோனார்ச் நிறுவனம் மூலம் அதானி குழுமம், 7.8 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்றது. இந்த சிறு பங்குதரகு நிறுவனத்தில் அதானி குழுமத்திற்கு பங்குகள் உண்டு. இந்த உறவு 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. இந்த தரகு நிறுவனம் மூலம் பங்கு விற்பனை கிடைத்த தொகை மூலம்தான் அதானி குழுமம், பாரத |ஸ்டேட் வங்கியிடம் கடன் பெறுவதற்கான தகுதியைப் பெற்றது. பலரும் அதானி போன்ற குழுமம் தனது பங்குகளை விற்கத் தேர்ந்தெடுக்க நினைக்கும் நிறுவனம் அனுபவம் பெற்றதாகவே இருக்கும் என நினைப்பார்கள்.

ஆனால், அங்குதான் அதானி குழுமம் வேறு வகையான முடிவை எடுத்தது. பலரும் அறியாத மோனார்ச் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. அந்த நிறுவனத்தில் அதானி பிராப்பர்டிஸ் பிரைவேட் லிட். நிறுவனம் 4,32,620 ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது என்பது தரகு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் (ப.119) தெரிய வந்தது.

2009ஆம் ஆண்டு, அல்புலா எனும் மான்டேரோஸா நிறுவன நிதி, 9.75 சதவீத அளவில் மோனார்ச் நெட்வொர்த் கேபிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது நிறுவன உரிமையாளர் பற்றிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

 2018ஆம் ஆண்டு, கௌதம் அதானியின் மைத்துனர் ராகேஷ் ஷா மோனார்ச் நிறுவனத்துடன் இணைந்து விமான நிறுவனம் ஒன்றை கூட்டாக வாங்கினர். இந்த வணிகப் பரிவர்த்தனை, மோனார்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் க்ரீன் எனர்ஜி பங்குகளை விற்கும் முன்னர் செய்யப்பட்டது.இதெல்லாம் தற்செயல் என்று கூட நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்.  

‘’மோனார்ச் பற்றிய விசாரணை நாற்பது நாட்கள் நடைபெற்றது. அதில் நிறுவனத்தின் நான்கு உறுப்பினர்கள், நிறுவனத்தின் பங்குச் சான்றிதழை அவர்களுக்குள்ளாகவே மாற்றி மாற்றி பரிமாறிக்கொண்டனர்’’ என செபி அமைப்பின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. (ப.2, ப.35)

அதானி குழும பங்குகளை வாங்கிய முதலீட்டு நிறுவனங்கள் பற்றி வெளிப்பபடையான ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை ஆராய்ந்தபோது அதன் பங்கு முதலீட்டு சதவீதம், குறிப்பிட்ட காலகட்ட அளவில் அதிகரித்திருந்தது.

Before:

March 30, 2019 – Adani Green Shareholders

% Holding

Elara India Opportunities Fund Limited

2.99%

Cresta Fund Ltd

1.62%

Albula Investment Fund Limited

1.41%

Asia Investment Corporation (Mauritius) Ltd

1.08%

 

(Source: BSE Shareholding)

 

June 13,2019 adani green shareholders

% holdings

Elara India Opportunities Fund Limited

3.91%

Albula Investment Fund Limited

2.43%

Asia Investment Corporation (Mauritius) Ltd

2.32%

Cresta Fund Ltd

2.30%

APMS Investment Fund Ltd

2.26%

Vespera Fund Limited

1.69%

LTS Investment Fund

1.54%

Marshal Global Capital Fund Ltd

 

1.36%

Polus Global fund

 

1.09%

 

மேலேயுள்ள முதலீட்டு நிதி நிறுவனங்கள், அதானி க்ரீன் நிறுவனத்தில் முதலீடு செய்தவுடன் அதன் பங்கு மதிப்பு 6.85 -11.8%அதிகரித்தது. இந்த நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பங்குகளை வாங்காமல் இந்தளவுக்கு அதன் பங்கு மதிப்பு அதிகரிக்க வாய்ப்பே இல்லை.  

                                      


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்