பத்திரிகையாளர்களுக்கான கொள்கை கையேடு - டியர் ரிப்போர்டர் - புதிய மின்னூல் வெளியீடு

 





உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்


தமிழ் நாளிதழ் குழுமத்தில், சிறு வார இதழ் ஒன்றில் வேலை செய்யும்போது, பத்திரிகையாளர்களுக்கான கொள்கை, கோட்பாடு பற்றி எழுத நினைத்தேன். ஆனால் வேலை நெருக்கடி காரணமாக,  தமிழாக்க நூல் செய்யவேண்டுமென நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போது  நேரம் கிடைக்க, டியர் ரிப்போர்டர் எனும்  சிறுநூல் எழுதி தொகுத்து தயாராகிவிட்டது. 

டியர் ரிப்போர்டர் நூலில் பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய  அடிப்படை கொள்கை என்ன, சவாலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது, செய்தியை எழுதும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றிய கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.

 அச்சு, காட்சி ஊடகம் என இரண்டிற்குமான அடிப்படைக் கொள்கைகள் ஒன்றுதான். இதில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் கடைபிடிக்கும் கொள்கைகள் சற்று மாறுபடக்கூடியவை. ஆனால், அதைப்பற்றி பொதுவான பரப்பில் ஒருவர் எதையும் கூறிவிட முடியாது. ஆனால் பத்திரிகையாளர் எப்படி இருக்கவேண்டும், அரசியல், பொருளாதார, சமூக பரப்பில் நடைபெறும் விஷயங்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்பதை நாம் கூறமுடியும். அதைத்தான் இந்த நூல் விளக்குகிறது. சிறுநூல் என்பதால் வேகமாக படித்துவிட முடியும். இதிலுள்ள பழக்கங்களை பின்பற்ற சற்று காலம் தேவை. நூலை வாசியுங்கள். கருத்துகளை பகிருங்கள். நன்றி  

தாம்சன் ராய்ட்டர் பவுண்டேஷனின் ஆங்கில மூலத்தை அடிப்படையாக கொண்ட நூல். 


நூலைத் தரவிறக்கி வாசிக்க 

https://www.amazon.in/dp/B0BW64Q189




கருத்துகள்