குற்றச்செயல்பாடுகளுக்கு மனமுதிர்ச்சியின்மை அடிப்படையான காரணமா?

 







மனமுதிர்ச்சியும் குற்றமும் - படம்- பின்டிரெஸ்ட்



குற்றச்செயல்களை செய்பவர்களுக்கும், அவர்களின் வயதில் குற்றங்களைச் செய்யாத சிறந்த குடிமகன்களுக்கும் முதிர்ச்சி மட்டும்தான் மிச்சமாக இருக்கிறதா? ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு குழுக்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வுப் பூர்வமாக நிரூபணம் செய்யத் தவறிவிட்டனர்.

இதில் இரண்டு வகையானவர்களைப் பார்க்கலாம். ஒன்று, தங்களின் இயல்புகளை கட்டுப்படுத்த முடியாத ஆட்கள், இவர்களுக்கு அறம் சார்ந்த நிலைப்பாடு மனிதில் உருவாகாது. குற்றங்களை செய்பவர்களுக்கு இடையில் அதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கடுத்து வந்த பிற உளவியலாளர்களது கருத்துக்களைக் கேட்போம்.

தாக்குதல், கொலை, பாலியல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றில் ஒருவருக்கு பொருளாதார ரீதியான பயன்கள் கிடைப்பதில்லை. ஆனால் இவர்கள் பெற்றுள்ள மனமுதிர்ச்சியோடு ஒப்பிடும்போது, பணம் பொருட்களை கொள்ளையடிப்பவர்களின் மனநிலை அறிவுத்திறன் முதிர்ச்சி குறைவாகவே உள்ளது. தனிநபர்களைப் பொறுத்து காரணங்களை அறியும் திறனும், குற்றங்களின் தீவிரமும் மாறுபடுகிறது.

பொதுவாக அறநிலை சார்ந்த மன முதிர்ச்சியை பொதுமைப்படுத்தி கூற முடியாது. இதனை அந்தளவு எளிதானதாக ஒருவர் கருத முடியாது. நிறைய ஆராய்ச்சிகளில் மக்கள் தாங்கள் செய்யும் செயல் சரியானது என நம்பிக்கை கொண்டு குற்றங்களை செய்து வந்தால் அதை என்ன சொல்வது? இந்த நிலையில் அறநிலை மதிப்பீடுகளை எப்படி ஒருவர் உறுதிசெய்வது? குற்றங்கள் இதுபோல அறநிலை கோட்பாடுகளை ஒருவர் நிரூபணம் செய்வது கடினமான ஒன்று.

உயிரியல், சமூக, தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு உருவானது, ஐசென்க் கோட்பாடு. ஒருவகையில் இது கட்டுப்பாட்டு கோட்பாடுதான். ஒருவர் பிறக்கும்போது மூளையில் உள்ள குறைபாடுகளால் அவர்களால் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படமுடியாது போகிறது. இவர்களால் சூழல்கள், விதிகள், அனுபவங்கள் ஆகியவற்றிலிருந்து பிறரைப் போல கற்றுக்கொள்ளும் அறிவு குறைவாக இருக்கும்.

ஹெச்.ஜே.ஐசென்க் தனது கருத்துகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி கூறினார். எக்ஸ்ரோவெர்ஷன், நியூரோடிசம். இதில் சைக்கோட்டிசம் பின்னாளில் இணைந்துகொண்டது.

எக்ஸ்ரோவெர்ஷன் என்பது, எப்போதும் ஆர்வத்துடன், எதிர்பார்ப்புடன் அனைத்திற்கும் எதிர்வினையாற்றும் வேகத்தில் இருக்கும் இயல்பைக் குறிக்கிறது. இதில் எக்ஸ்ரோவெர்ட் என்பவர்கள், அகவயமானவர்களை விட திறமை குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என உளவியலாளர் பார்டோல் கூறினார். தங்களது மனதிற்கு பொருத்தமான செயல்பாடுகள் நடக்காதபோது, அதற்கு தீவிரமான எதிர்வினைகளை ஆற்றுவது நியூரோடிசம் எனலாம். நியூரோடிசத்தை வலி நிரம்பிய தூண்டல் என்று கூட புரிந்துகொள்ளலாம்.

 

ஒருவரின் குண இயல்புகளுக்கும், குற்றத்திற்கும் உள்ள தொடர்பை ஹெச்.ஜே. ஐசென்க் அறிந்து விளக்க நினைத்தார். சிறுவர்கள் சமூகத்தோடு இணைய முடியாதபடி இருந்தால், அவர்களது பெற்றோருக்கு அந்த சூழ்நிலையை எதிர்கொள்வது கடினமான சூழ்நிலையாக இருக்கும்.

குற்றத்தைப் பார்க்கும் கோணங்கள் என்பதும் இதில் உண்டு. இதனை 1979ஆம் ஆண்டு டோச் என்ற உளவியலாளர் கூறினார். இதன்படி, அவரின் கோட்பாடு பாதிப்பு, விளைவுகள் என இரண்டு இயல்பைக் கொண்டது. பாதிப்புகளால் விளைவுகள் ஏற்படுகின்றன. ஒருவருக்கு மரபணு, புத்திசாலித்தனம், குடும்பம் சார்ந்து பிரச்னைகள் ஆகியவற்றை பாதிப்பாக கூறலாம். இதனால் ஏற்படும் விளைவுகள் என குற்றச்செயல்பாடுகளைக் கூறலாம்.

அறிவியல் முறையில் பல்வேறு அம்சங்களை இணைத்துப் பார்த்து நடைமுறை, கோட்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கித்தான் குற்றங்களைப் புரிந்துகொள்ள முடியும். ஒருவரின் அறிவாற்றல் என்பது, சுதந்திரமாக நம்பிக்கையுடன் கற்பதை அடிப்படையாக கொண்டது. ஒருவரின் சமூக அறிவாற்றல் என்பது, அவர் சுற்றுப்புறத்தை மனிதர்களைப் பார்த்து கற்றுக்கொள்வதேயாகும். இதை வறுமை, ஊக்கமில்லாத தன்மை ஆகியவை பாதிக்கின்றன. இதனால் ஒருவரின் அறிவாற்றல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பண்புகள் வளர்ச்சியடையாதபோது, அறிவாற்றல் வளர்ச்சியே குறைவாக இருந்தால் அவர் குற்றம் செய்ய வாய்ப்புள்ளதா? அப்படியெல்லாம் கிடையாது என உளவியலாளர் ராஸ், ஃபேபியானோ ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் கூறினர்.

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்