பேராசை பூதம் - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 பாகம் 1 - மின்னூல் வெளியீடு
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய அம்சங்களை திரு. இரா.முருகானந்தம் தமிழாக்கம் செய்ய அறிவுறுத்தினார். பங்குச்சந்தை, முதலீட்டு நிதி என்பதெல்லாம் நான் இதுவரை செய்யாத விஷயங்கள். ஆனாலும் முருகு அவர்களின் நம்பிக்கை என்னை எழுத வைத்தது. அப்படித்தான் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆங்கில அறிக்கையின் ஒருபகுதி நூலாகி இருக்கிறது.
அதானி குழுமத்தின் மோசடிகளில் ஒருபகுதிதான் இந்த நூல். மொத்தம் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் அதானி குழுமம் எப்படி இயங்குகிறது, நிதி பரிவர்த்தனை முறை, மோசடியாளர்களின் கூட்டு, மோசடி முறை, வெளிநாட்டு மோசடி நிறுவனங்கள் எங்கெங்கு உள்ளன, அதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு நிறுவனம் வளர்கிறது, உச்சமான சொத்து மதிப்பு பெறுகிறது, உலகளவில் தொழிலதிபர் வணிக இதழ்களின் பெருமைக்குரிய பட்டியல்களில் இடம்பெறுகிறார். இதெல்லாம் சாதாரண மக்களுக்கு எள் அளவு கூட பயனில்லாத செய்தி. ஆனால் அந்த தொழிலதிபர், பங்கு விலையை செயற்கையாக உயர்த்தி பொதுத்துறை வங்கிகளில் கடன்களைப் பெறுகிறார். அதை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார். இதனால் நிறுவனம் திவால் ஆகும் சூழலில், அந்த நிறுவனம் வாங்கிய கடன்கள் வாராக் கடன்கள் ஆகிவிடும். இந்த ஆபத்தை உணர்ந்தபிறகுதான் அதானி குழுமம் பற்றிய நூலை தமிழாக்கம் செய்யத் தொடங்கினோம். இதில் தமிழாக்கம் எளிமையாக இருப்பது முக்கியம் என திரு. இரா.முருகானந்தம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அதைக் கருத்தில் கொண்டுள்ளோம்.
நூலில் கூறப்பட்ட பக்கங்கள் பற்றிய மேற்கோள் ஆவணங்கள் இரண்டாவது பகுதியில் இணைத்து வெளியிடப்படும். அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் கேட்ட பல்வேறு கேள்விகளும் இந்த வகையில் அடுத்த நூலில் வெளியாகும்.
நூலை தரவிறக்கி வாசிக்க...
https://www.amazon.in/dp/B0BW9NN9NB
கருத்துகள்
கருத்துரையிடுக