வாழ்வை பிரதிபலிக்கும் அற்புதமான ஹைகூ கவிதைகள்! - ஜப்பானிய ஹைகூ - தி.லீலாவதி
ஜப்பானிய
ஹைகூ
தமிழில் தி.லீலாவதி
அன்னம் பதிப்பகம்
தமிழிணையம்
கவிஞர் அப்துல்
ரகுமான் வழிகாட்டலில் ஹைகூ கவிதைகள் மீது ஆர்வம் வந்து எழுத்தாளர் தி.லீலாவதி மொழிபெயர்த்துள்ள
ஹைகூ கவிதைகள் நூல். ஹைகூ கவிதைகள் மூன்றடி கொண்டவை. இதில் மிக குறைவான வார்தைகளில்
வாழ்க்கை, சோகம், வறுமை, காதல், ஆச்சரியம், வெறுமை ஆகியவற்றை எளிதாக உணர்த்திவிட முடியும்.
தமிழ் மொழிபெயர்ப்பில் கவிதைகள் சிறப்பாகவே உள்ளன.
தினத்தந்தி,
மாலைமதி, தேவியின் கண்மணி, பாக்யா வரை அனைத்து
நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ்களிலும் ஹைகூ வெளியாகியுள்ளது. வெளியாகிக் கொண்டும்
இருக்கிறது. இதன் இறுக்கமான வடிவம், குறைந்த வார்த்தைகள் ஆகியவை இதன் பலம்.
ஜப்பானிய
ஹைகூவில் புகழ்பெற்ற ஹைகூ கவிதைகளை மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். பாஷா, இஸ்ஸா ஆகியோரின் கவிதைகளை வாசிக்க உணர சிறப்பாக
இருக்கிறது.
உதிர்ந்து வீழ்ந்த மலர்
கிளைக்குத்
திரும்புகிறதோ
ஓ.. வண்ணத்துப்பூச்சி
என்ற ஹைகூ
அற்புதமானது. இந்த கவிதை கவிஞர் அப்துல் ரகுமானை ரசிக்க வைத்துள்ளது. எனவே, அவர் நூலை
லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார்.
இதேபோல பாஷா
எழுதிய வறுமை பற்றிய அரிசிதான் இல்லையே என முடியும் ஹைகூ ஒன்றுண்டு. அதுவும் அதனளவில்
இயல்பில் சிறப்பானது.
நூல் நெடுக
இதுபோல சிறு ஹைக்கூ கவிதைகள் அற்புதமாக உள்ளன. சிறுநூல்தான் எளிதாக படித்துவிடலாம்.
பிறகு அதை நீங்கள் நிதானமாக உங்கள் நிலப்பரப்பிலிருந்து அனுபவத்திற்குள்ளாக அசைபோட்டு
பார்க்கலாம்.
ஜப்பானிய
ஹைகூ நூலுக்கு உள்படங்கள், அட்டைப்படத்தை ஓவியர் வீரசந்தானம் வரைந்துள்ளார். அவை
நூலுக்கு தனித்த அழகை வழங்கியிருக்கிறது. இதுதான் தமிழில் வெளியான ஹைகூ பற்றிய முதல்
நூல் என தி. லீலாவதி கூறியிருக்கிறார். வாசியுங்கள்.
நூல் உங்களையும் வசீகரிக்கும்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக