இடுகைகள்

போதைப்பொருட்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதைப்பொருட்களை எப்படி வாங்குவது? - புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டால் போதும்!

படம்
  மும்பை, புனேவில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடம், ஸ்கோர் அட்டா என குறிக்கப்பட்டுள்ளது போதைப்பொருட்களை விற்பதும், வாங்குவதும் இப்போது வேறு லெவலில் மாறியுள்ளது. இதனைச் செய்ய குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமாக புத்திசாலித்தனமும் தேவை. கோதிம்பிர், பிகாச்சு, ஹலோ கிட்டி, அஜினமோட்டோ, சாவல், டேண்ட்ரஃப், ஜங்கிள் பாய் ஆகிய குறியீட்டுச் சொற்களை யாராவது பேசினால் உஷாராக இருங்கள். இவைதான் போதைப் பொருட்களை வாங்குவதற்கான முக்கியமான சொற்கள்.  பொதுவாக இந்த வார்த்தைகளை கேட்கும் யாருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு போறாங்க போல, தலையில் டேண்ட்ரஃப் இருக்குதாட்ட, காமிக்ஸ் நிறைய படிப்பார் போல என நினைப்பார்கள்.  வீடு மற்றும் பள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் போதைப்பொருட்களை வாங்கவே இப்படி சீக்ரெட் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள் இளைஞர்கள், பள்ளிச்சிறுவர்கள்.  கோதிம்பிர் என்றால், மரிஜூவானா, டேண்ட்ரஃப் என்றால் கொகைன், பிகாச்சு என்றால் எல்எஸ்டி மாத்திரை, ஹலோ கிட்டி என்றால் எம்டிஎம்ஏ, ஜங்கிள் பாய் என்றால் கஞ்சா என்று அர்த்தம். டாஃபி என்றால் எக்டஸி மாத்திரை, ஸ்னோமேன் என்றால் கொகைன் ஏன் இமோஜி

காசு, பணம், புகழ், கஞ்சா! - போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்கலாமா?

படம்
    கஞ்சா     உலகில் பல்வேறு நாடுகள் கஞ்சாவை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இதுதொடர்பான குற்றங்கள் குறைவதோடு, அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்களைத்தான் இப்போது நீங்கள் படிக்கப்போகிறீர்கள்..    உலகம் முழுக்க 120 நகரங்களில் கஞ்சா சார்ந்த போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதில் இந்தியாவில் மும்பைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.  2018ஆம் ஆண்டு மட்டும் 3.1 கோடிப்பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். 1. 3 கோடிப்பேர் கஞ்சா மற்றும் ஹாஸ் என்ற பொருளை போதைக்காக பயன்படுத்தினர்.  டில்லியில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை சட்டரீதியாக அங்கீகரித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.725 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.  இந்தியாவில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டம் 1985படி கஞ்சாவை பயன்படுத்துவர்களுக்கும், அதைச் சார்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.  கஞ்சாவில் டெராஹைட்ரோகன்னாபினோல் என்ற பொருள் உள்ளது. இதுவே இதனை உட்கொள்பவர்களுக்கு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கஞ்சாவில் 400க்கும் மேற்பட்ட பகுதிப்பொருட்கள் உண்டு.இதிலுள

போதைப்பொருட்களுக்கு தடை நீக்கமா?

படம்
மெக்சிகோவில் அதிபராகியுள்ள இடதுசாரி தலைவர் லோபஸ், விரைவில் போதைப்பொருட்களுக்கான தடையை நீக்கவுள்ளார். கஞ்சாவிற்கான தடையை நீக்கியதற்கும் இதற்குமான வேறுபாட்டை லோபஸ் புரிந்துகொள்ளவில்லை என பலரும் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். மெக்சிகோவின் குவாரெரோ பகுதியில் ஹெராயின் கள்ளத்தனமாக ஏராளமாக உற்பத்தியாகி கண்டம் விட்டு கண்டம் ஏற்றுமதியாகிறது. திருட்டுத்தனமாகத்தான். அரசுக்கு, போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் சண்டைகளைத் தடுப்பதே பெரும் வேலையாக உள்ளது. எனவேதான் இந்த முடிவு. மெக்சிகோவில் போதைப்பொருட்கள் உற்பத்தி நடந்தாலும், இதற்கான வாடிக்கையாளர்கள் அமெரிக்கர்களே. ஆனால் இத்தொழில் காரணமாக ஏற்படும் வன்முறை, மெக்சிகோ கார ர்களின் உயிரைப் பறிப்பதோடு நாட்டிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசின் முடிவைத் தொடர்ந்து ஹெராயின், பெனடாயில் ஆகிய பொருட்களை அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். லோபஸ், போலீஸ் மீது நிறைய புகார்கள் வருவதால் அவர்களிடம் போதைப்பொருட்கள் சார்ந்த விசாரணையை தருவதில்லை என முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை தேசிய கார்டு படையை இதற்கென உருவாக்கியுள்ளார். இனி

போதைப்பொருட்கள் அதிகரிப்பு- ஐ.நா கவலை

செம போதை உலகம் ! போதைப்பொருட்களின் தயாரிப்பு மருத்துவப்பயன்பாடு கடந்து கிடுகிடுவென அதிகரித்து வருவது குறித்த கவலையை ஐ . நா அமைப்பு தெரிவித்துள்ளது . " கோகைன் , ஓபியம் , மெதாம்பெட்டமைன் சந்தையானது முந்தைய ஆண்டுகளை விட விரிவாகியுள்ளது ." என்கிறார் ஐ . நா அமைப்பின் போதைப்பொருட்கள் மற்றும் குற்றத்துறையின் இயக்குநர் யூரி ஃஃபெடோடோவ் . 2000-2015 காலகட்டத்தில் போதைப்பொருட்களால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது . 2005-2013 ஆம் ஆண்டு குறைந்த கோகைன் தயாரிப்பு அளவு 2016 ஆம் ஆண்டு 1,140 டன்களாக உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது . கொலம்பியாவே போதைப்பொருட்களின் தயாரிப்பு தாயகம் . வட அமெரிக்காவில் ஃபெனடனியல் , ஆப்பிரிக்காவில் ட்ராமடால் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது . மருத்துவப் பயன்பாடு கொண்ட ஓபியாய்டுகளும் , ஹெராயின்களை கடத்தும் குற்றங்களும் குறைவற நடைபெறுகின்றன . 2015 இல் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் போதைப்பொருட்களுக்கு பலியாகியுள்ளனர் . ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சர