போதைப்பொருட்களை எப்படி வாங்குவது? - புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டால் போதும்!

 



மும்பை, புனேவில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடம், ஸ்கோர் அட்டா என குறிக்கப்பட்டுள்ளது



போதைப்பொருட்களை விற்பதும், வாங்குவதும் இப்போது வேறு லெவலில் மாறியுள்ளது. இதனைச் செய்ய குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமாக புத்திசாலித்தனமும் தேவை. கோதிம்பிர், பிகாச்சு, ஹலோ கிட்டி, அஜினமோட்டோ, சாவல், டேண்ட்ரஃப், ஜங்கிள் பாய் ஆகிய குறியீட்டுச் சொற்களை யாராவது பேசினால் உஷாராக இருங்கள். இவைதான் போதைப் பொருட்களை வாங்குவதற்கான முக்கியமான சொற்கள். 

பொதுவாக இந்த வார்த்தைகளை கேட்கும் யாருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு போறாங்க போல, தலையில் டேண்ட்ரஃப் இருக்குதாட்ட, காமிக்ஸ் நிறைய படிப்பார் போல என நினைப்பார்கள். 

வீடு மற்றும் பள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் போதைப்பொருட்களை வாங்கவே இப்படி சீக்ரெட் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள் இளைஞர்கள், பள்ளிச்சிறுவர்கள். 

கோதிம்பிர் என்றால், மரிஜூவானா, டேண்ட்ரஃப் என்றால் கொகைன், பிகாச்சு என்றால் எல்எஸ்டி மாத்திரை, ஹலோ கிட்டி என்றால் எம்டிஎம்ஏ, ஜங்கிள் பாய் என்றால் கஞ்சா என்று அர்த்தம். டாஃபி என்றால் எக்டஸி மாத்திரை, ஸ்னோமேன் என்றால் கொகைன் ஏன் இமோஜிக்கு கூட இப்படி அர்த்தம் உண்டு. 

ஷாரூக்கானின் மகன் கைதானது பற்றி நாம் சொல்லுவதற்கு எந்தவிஷயமும் இல்லை. ஆனால் இளைஞர்கள் மட்டுமல்ல, பனிரெண்டு வயதானவர்கள் கூட போதைக்கு அடிமையானவர்களாக உள்ளனர். போதை பொருட்களை விற்பதற்கான நெட்வொர்க் பெரியது. போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு என்னதான் முயன்றாலும் இந்த நெட்வொர்க்கை முழுமையாக தடுப்பது கடினம். சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட்போன், இ வலைத்தளங்கள் ஆகியவற்றை வைத்தே போதைப்பொருட்களை எளிதாக விற்கிறார்கள். முதலில் தனக்கு என்ன தேவை என விண்டோஷாப்பிங் செய்து பார்க்கிறார்கள். பிறகு ஆர்டர் கொடுத்தால், வீட்டு வாசப்படியில் போதைப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். டிஜிட்டல் இந்தியாவின் விகாஸ் இதுதானே?

வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், சிக்னல், விக்கர் ஆகிய சேவைகளை பயன்படுத்தும் பணக்கார இளைஞர்கள் போதைப்பொருட்களை எப்படி வாங்குவது என கற்றுக்கொள்கிறார்கள். கூடவே டார்க் வெப்பிலும் இவர்கள் உலாவுகின்றனர். இப்போது நாங்கள் இவர்களை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார் போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே. 

இவர் சொல்லுவதைப் போலவே அனைவரும் டார்க்வெப் போய்த்தான் அனைத்து விஷயங்களையும் செய்யவேண்டியது கிடையாது என்கிறார் போதைப்பொருளுக்கு அடிமையாகி மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர். கூகுள் மேப்பில் ஸ்கோர் அட்டா என டைப் செய்தாலே மும்பை, புனேவில் போதைப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என தெரிந்துவிடுமாம். போதைப்பொருட்களை விசா, மாஸ்டர் கார்டு வைத்து பணத்தை ட்ரான்சேக்ஷன் செய்வது எல்லாம் ரொம்ப பழசு. கிரிப்டோகரன்சிதான் ஒரே வழி. இதற்கு கிரிப்டோ வாலட்டை ரெடி பண்ணி வைத்துவிட்டால் போதும். பணத்தை அனுப்பிவிட்டால், உங்கள் முகவரிக்கு கொரோனா டெஸ்ட் கிட் அல்லது வேறு பொருட்கள் வரும். அதற்குள் போதைப்பொருட்கள் இருக்கும். எடுத்து பயன்படுத்தலாம். யாருக்கும் சந்தேகம் வராது. 

கஞ்சாவிலிருந்து எடுக்கும் எண்ணெய், வெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி கேக்குகள், ப்ரௌனிஸ், பீட்சா, பகோடா ஆகியவற்றை செய்து விற்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் எப்படி போதைப்பொருட்களை விற்பது? அதற்கு இருக்கிறதே ஐடியா... குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை ஒருவர் பயன்படுத்தினால் அவருக்கு போதைப்பொருட்களில் வகைகளில் இது வேண்டும் என டீலர் புரிந்துகொள்கிறார். அவரும் அதற்கேற்ப மற்றொரு சீக்ரெட் வார்த்தையை பயன்படுத்தி பதிவிடுகிறார். 

ரெட்டிட் பாரமில் கஞ்சா புகைப்பவர்களுக்கென தனி குழு உள்ளது. இதன் பெயர், இண்டியன் என்ட்ஸ். 28 ஆயிரம் பேர் உள்ள குழுவில் போதைப்பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பேசுவதுதான் முக்கியமான லட்சியம். இதில்தான் போதைப்பொருட்களை எப்படி சமையல் பொருட்களில் பயன்படுத்துவது என விவாதம் நடத்தி கண்டுபிடிக்கின்றனர். 

ஐபிஎல் பெட்டிங் என ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு கிடைக்கும் பணத்தின் மூலம் பள்ளிமாணவர்கள் போதைப்பொருட்களை வாங்கத் தொடங்குகின்றனர். ஒரு மாதத்திற்கு நாங்கள் நூறு போதை அடிமைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்கிறார் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் தலைவரான முக்தா புன்டாம்பேகர். முதலில் 30 வயதுக்குட்பட்டவர்கள் வருவார்கள். இப்போது 22 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வருகிறார்கள் என்கிறார். 




https://www.google.com/maps/search/score+adda/@18.5175307,73.8657026,13.75z?hl=en








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்