பழங்குடி மக்களிடம் உள்ள கனிம வளங்களை பற்றி மட்டுமே இந்திய அரசு கவலைப்படுகிறது! பிரகாஷ் லூயிஸ்
பிரகாஷ் லூயிஸ்
எழுத்தாளர்
நீங்கள் ஸ்டேன் சுவாமியிடம் அவரைப் பற்றி நூல் எழுதுவதாக கூறினீர்களா?
இல்லை. சில சம்பவங்களால் நான் அவரைப் பற்றி நூல் எழுதுவதை கூறமுடியவில்லை. அவரின் அலைபேசி அவரிடம் இருந்து நீக்கப்பட்டுவிட்டதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் பேச முயன்றாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னாடியே சிலரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.
நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி, அவரது காலகட்டம், அவரின் செயல்பாடுகள் ஆகியற்றை விளக்கியுள்ளேன்.
ஸ்டேன் சுவாமி இறந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய நூலை வெளியிட்டு விட்டீர்கள். ஜூலை 5 இல் அவர் மறைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து எழுத முடிந்ததா?
2018ஆம் ஆண்டு பீமாகரேகான் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதிலிருந்தே நான் நூலுக்கான தகவல்களை சேகரித்து வந்தேன். தேசிய புலனாய்வு முகமை உள்ளே வந்தபோது நான் தகவல்களை சேகரித்து ஆராய்ந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஸ்டேன்சுவாமி கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்காக அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டது. ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நான் பணியாற்றியுள்ளேன். அங்குள்ள களநிலவரங்கள் எனக்கு தெரியும். இந்த நூலுக்கு முன்னதாகவே பட்டியலின மக்களின் உரிமைகள் பற்றி நூல்களை எழுதியுள்ளேன். பூர்விக மக்களின் போராட்டங்கள், நிலப்பரப்பு ஆகியவை எனக்கு தெரிந்த விஷயங்கள்தான்.
ஸ்டேன் சுவாமியன் மறைவு, தியாகம்தான் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் நூலின் தலைப்பு மாறுபட்டிருக்கிறதே?
அரசு, அவரை மாவோயிஸ்ட் என்று அடையாளப்படுத்துகிறது. சாதாரண எளிய மனிதர்கள் இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவார்கள். சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்குமே ஸ்டேன் சுவாமி, தியாகி என்பது தெரியும். 84 வயதான அவருக்கு பார்க்கின்சன் நோய் இருக்கிறது என்பதோடு கூடுதலாக உடல்நல பிரச்னைகளும் இருந்தன. அவரை அரசு நடத்தியவிதம் வருத்தமாக இருக்கிறது.
அவருக்கு சிறையில் ஸ்ட்ரா கூட கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
இத்தகைய சம்பவங்கள்தான் அவரைப் பற்றிய நூலை எழுத வைத்தன. நாங்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை நெருக்கமாக ஆராய்ந்தோம். அவருக்கு சிறையில் ஸ்ட்ரா கூட கொடுக்காமல் இருந்தது அவலமானது. அவருக்கு பிணை கிடைத்திருந்தால் ராஞ்சிக்கு செல்ல நினைத்தார். நான் அங்குதான் மக்களோடு வாழ்ந்தேன். இப்போது அங்கு செல்ல நினைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் அவர் முறையான மருத்துவ சிகிச்சை பெற நினைத்தார். நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி பற்றி குறைவாகவும், அவர் செய்த செயல்பாடுகள், போராட்டங்கள் பற்றி அதிகமாகவும் எழுதப்பட்டுள்ளது.
1937இல் அவர் பிறந்த திருச்சிக்கு செல்லாமல் ராஞ்சிக்கு செல்ல விரும்பினார் என்று கூறுகிறீர்களா?
நான் தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் பிறந்தவன்தான். ஆனால் நான் பாட்னாவில் இறந்துபோக விரும்புகிறேன். அதுதான் எனது கர்ம பூமி.
ஸ்டேன் ஜார்க்கண்டில் அதிக காலம் உழைத்தார். எனவே, நான் உழைத்த மக்களுக்கான இடத்திலேயே இறந்துபோக வேண்டும் என விரும்பினார்.
ஆதிவாசிகளுக்கான நிறைய பணிகளைச் செய்தவர் ஸ்டேன் சுவாமி. ஆனால் ஒன்றிய அரசுகளைப் பொறுத்தவரை அவர்கள் காடுகளிலிருந்து ஆதிவாசிகளை அகற்றத்தானே முயன்றார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
நூலில் நான்காவது அத்தியாயத்தில் இந்த விவகாரங்களைப் பற்றி எழுதியுள்ளேன். நூலில் ஸ்டேன் சந்தித்த பதினான்கு விஷயங்களைப் பற்றி பேசியுள்ளேன். மத்திய இந்தியாவில் ஸ்டேன் சுவாமி, 30 ஆண்டுகளை ஆதிவாசி மக்களின் நலன்களுக்காக செலவிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் முழுமையாக சிங்பும் மாவட்டத்திலுள்ள ஆசிவாசிகளுக்கு இடையில் வாழ்ந்தார். ஆதிவாசிகள் அவரை நடத்தியவிதம் அவருக்கு பிடித்திருந்தது. முதலாளித்துவ கொள்கைகள் எப்படி அந்த மக்களுக்கு இடையில் பாகுபாடுகளை ஏற்படுத்தின என்பதைக் கவனித்தார். இங்குள்ள அரசுகள் அனைத்துக்குமே பழங்குடி மக்களிடமுள்ள வளங்கள் தேவை. ஆனால் அவர்கள் தேவையில்லை. பலரும் அவர்களை இடம்மாற்றத் துடிக்கிறார்கள். அதேசமயம் அம்மக்களுக்கான உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதை கவனிப்பதில்லை. பழங்குடி மக்களுக்கான போராட்டத்தில் ஸ்டேன் பலமுறை விரக்தியடைந்தாலும் கூட தனது போராட்டங்களை விட்டுக்கொடுக்கவே இல்லை.
மக்களுக்கான போராட்டங்களை அவர் எந்த முறையில் நடத்தினார். ஜனநாயக முறைகளை பின்பற்றினாரா?
ஆமாம். ஜனநாயக முறைகளில்தான் அவர் போராட்டங்களை நடத்தினார். அவர் அடிப்படையில் ஜனநாயக தன்மைகொண்ட நீதித்துறை சார்ந்த பின்னணியில் வந்தவர். அரசியலமைப்புச் சட்டப்படி போராட்டங்களுக்கும் அதில் இடமுண்டு. ஸ்டேன் சுவாமி அகிம்சை போராட்டங்களுக்கு மக்களை தயார்படுத்தினார். பல்வேறு மனுக்களை எழுதுவது, மக்களின் உரிமைகளைப் பற்றி எடுத்துச்சொல்வது என செயல்பட்டு வந்தார்.
ஃபிரன்ட்லைன்
ஜியா அஸ் சலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக